கண்ணி
தலையில் சூடப்படும் மாலை (குறிப்பிட்ட குணம் பொருந்திய) கண்களை உடைய பெண் வலையிலுள்ள ஒரு கண் அல்லது துவாரம்
landmine net, snare, noose sprout, shoot, tender leaf
Tamil Wiktionary
கண்ணி
[object Object]
Winslow (1862)
கண்ணி (kaṇṇi) — noun
- A flower-bud, அரும்பு
- A flower garland, பூமாலை
- A bunch of flowers, பூங்கொத்து
- A gin, a trap, புட்படுக்குங்கயிறு
- The noose of a rope for a bullock's neck, பூட்டாங்கயிறு
- A rope, கயிறு
- கண்ணிகட்ட — To form a flower-bud.
- கண்ணிகுத்த–கண்ணிவைக்க–கண்ணிநட — To set a snare.
- கண்ணிக்கயிறு — The owse or thread of linen wound on the two beams which the sley moves up and down, விழுதுக்கயிறு.
- கண்ணியிலகப்பட–கண்ணியிற்சிக்க — To be caught, insnared, drawn in.
Fabricius (1972)
கண்ணி — noun
- gin, snare, trap, சுருக்கு
- the noose of a rope for bullock's neck, பூட்டாங்கயிறு
- a rope, கயிறு
- flower-bud, அரும்பு
- garland of flowers, பூமாலை
- knot, tie, முடிச்சு
- sprout, short, tender leaf, கொழுந்து
- கண்ணிகட்ட — to form a flower bed.
- கண்ணிகுத்த–வைக்க — to lay snares or gins.
- கண்ணிக்கால் — a branch channel.
- கண்ணிக்குள் ஓட–பட–கண்ணியில் அகப்பட–சிக்க — to be caught ensnared, drawn in.
Tamil Moli Akarathi (1928)
கண்ணி (kaṇṇi)
- கயிறு, கொழுந்து, தாம்பு, பா வினடி புட்படுக்குங்கயிறு, பூ, பூங் கொத்து, பூட்டாங்கயிறு, பூமாலை, பூவரும்பு
கண்ணி (kaṇṇi)
- அரும்பு, தாம்பு, புட்படுக்குங் கயிறு, பூங்கொத்து, பூமாலை, வினை யெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கண்ணி¹ (kaṇṇi) — noun
- prob. கண்ணு
- Wreath worn on the head; chaplet; சூடும் பூமாலை. கண்ணி யுந் தாருமெண்ணின ராண்டே (தொல். பொ. 634)
- Flower garland in general; பூமாலை. புன்னை மெல் லிணர்க் கண்ணிமிலைந்த மைந்தர் (புறநா. 24, 8)
- A flower, used as a military badge; போர்ப்பூ. சுரும் பார் கண்ணிப் பெரும்புகன் மறவர் (மதுரைக். 596)
- Bunch of flowers; பூங்கொத்து. (W.)
- Bud; அரும்பு. கண்ணி வாய்விடுங் காலையின் (உபதேசகா. சிவபுண். 308)
- Gin, snare, noose; புட்படுக்கும் முடிப் புக் கயிறு. பறவைசிக்க . . . காட்டிற் கண்ணிவைப் போர் (தாயு. மாதரைப்பழித்தல், 2)
- Net; வலை. கண் ணியுட் பட்டதோர் கலையின் (கந்தபு. மாயைப். 317)
- Noose of a rope for a bullock's neck; தாமணி. (பிங்.)
- Knot, tie; முடிச்சு. கண்ணிநுண்சிறுத்தாம்பி னால் (திவ். கண்ணிநுண். 1)
- [K. kaṇṇi.] Rope; கயிறு. (W.)
- [M. kaṇṇi.] Sprout, shoot, tender leaf; கொழுந்து. (தைலவ. தைல. 54.)
- Each of the several distiches in long poems as the kali-veṇpā; கலிவெண்பாமுதலியவற்றில் இவ்விரண் டாய் வரும் உறுப்பு. மூதுலாக் கண்ணிதொறும் (சங்கர. உலா).
- Stanza of two lines often set to music, and sung without pallavi and aṉu-pallavi; ஒருவகை இசைப்பாட்டு
- See கண்ணிக்கால். Loc
கண்ணி² (kaṇṇi) — noun
- See அழுகண்ணி.
கண்ணி³ (kaṇṇi) — noun
- See கரிசலாங்கண்ணி. (தைலவ. தைல. 103.)