தூதன்

ஒரு அரசின் செய்தியை மற்றொரு நாடு அரசனுக்கு சென்று சொல்பவன், தூது சொல்பவன். messenger தூது, தூதன், தூதுவன், தூதி, தூதிகை, தூதர், தூதுவர்

messenger, ambassador angel

Winslow (1862)

தூதன் (tūtaṉ)
  1. –தூதி–தூதிகை. See under தூது.

Tamil Moli Akarathi (1928)

தூதன் (tūtaṉ)
  1. தூதுசெல்வோன், புதன்
தூதன் (tūtaṉ)
  1. தூதுவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தூதன் (tūtaṉ) — noun
  1. < dūta
  2. Messenger, news-carrier; செய்தியறிவிப்பவன். வாலிதன்மக னவன்றன் றூதன் வந்தனென் (கம்பரா. பிணிவீட்டு. 82)
  3. Ambassador, envoy; அரசதூதன். நன்று கொ லென்னலோடும் நாயகன் றூதனக்கான் (கம்பரா. பிணிவீட்டு. 83)
  4. Agent, servant; ஏவலாளன். வெய்யகாலன் மாதூதர் மனங்களிக்க (பாரத. கிருட்டிண. 10)
  5. Spy, emissary, secret agent; ஒற்றன். Colloq
  6. Negotiator, one who treats for another in love-intrigues; காமக்கூட்டத்துக் காதலரை இணக்குவோன் Colloq. அடியேற்கெளி வந்த தூதனை (தேவா. 549, 8)
  7. Angel; தேவதூதன். Chr
  8. Mercury; புதன். (பிங்.)
  9. One who reports to the magician the details of poisonous bites; பாம்புகடித்த செய்தியை மாந்திரி கனுக்கு அறிவிப்பவன். (W.)

IndoWordNet

தூதன் — noun
  1. முற்காலத்தில் மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.
தூதன் — noun
  1. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தியை தெரிவிக்கும் பணி

தூதுவர் தூதுவன் ஒற்றன் ஒற்றர் தூதர் செய்தியைகொண்டுசெல்பவன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் செய்தியாளர் பத்திரிக்கையாளர்

Tamil Wiktionary

தூதன் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு அரசின் செய்தியை மற்றொரு நாடு அரசனுக்கு சென்று சொல்பவன்
  2. தூது சொல்பவன்.

[object Object]