நரகம்

Hell

Winslow (1862)

நரகம் (narakam) — noun
  1. Hell, the infernal regions, including 280 millions of places of torture of various description, பாதலம். (c.)
  2. Abyss of the seven nether worlds, நிரயம். W. p. 455. NARAKA.–The seven chief hells, are:
  3. அள்ளல், a hell of mud
  4. இரௌரவம், a horrible hell
  5. கும்பிபாகம், a hell where person are baked as pots
  6. கூடசாலம்
  7. செந்துஸ்தானம், a hell of torture by worms
  8. பூதி
  9. மாபூதி. நரகத்திலேவிழுவான். He will fall into hell. நரகப்பிராப்தியானான். He is suffering the pains of hell
  • நரககதி — One of the four races of begins, that of the nether worlds.
  • நரகக்குழி — The pit of hell. (c.)
  • நரகச்சுற்று — As நரகவட்டம்.
  • நரகபாதாளம் — Hell as an abyss, ஆழ்நரகம்.
  • நரகப்பிறப்பு — As நரககதி. (c.).
  • நரகர் — Inhabitants of the nether world.

Fabricius (1972)

நரகம் — noun
  1. நரகு, s. hell.
  • சப்தநரகம் — the seven chief hells, அள்ளல், a hell of mud; 2. இரௌ ரவம், a terrible hell; 3. கும்பிபாகம், a hell whose persons are baked as pots; 4. கூடசாலம்; 5. செந்துஸ்தா னம், a hell of torture by worms; 6. பூதி; 7. மாபூதி.
  • நரகக்குழி — the pit of hell.
  • நரகபாதாளம் — hell as an abyss.
  • நரகர்–நரகவாசிகள் — the inhabitants of the nether world.
  • நரகவேதனை — pains of hell.
  • நரகாவஸ்தை–நரகவேதனை — as .

Tamil Moli Akarathi (1928)

நரகம் (narakam)
  1. பாதாளம், பாபலோகம், அது இருபத்தெட்டுப் பேதமாயிருக்கும், அந்தப் பேதத்தின் பெயர்களாவன: தமம், அந்ததமம், ரௌரவம், மதஹா ரௌரவம், கும்பிபாகம், காலசூத்தி ரம், அசிபத்ரவநம், கிருமிபக்ஷம், அந்தகூபம், சந்தஞ்சம், சன்மலி, சூர்மி, வைதரணி, பிராணரோதம், வைசசம், லாலாபக்ஷணம், வீசி, சார பக்ஷணம், வஜரகண்டம், காரம், பிசி தபக்ஷணம், சூலப்ராந்தம், விதோத கம், தந்தசூகம், பர்யாவருத்தம், திரோதாநம், சூசிமுகம், பீடகம் ஏன் பனவாம்
நரகம் (narakam)
  1. அந்தகாரம், அழல், அளது, அள் ளல், ஆர்வம், இருணிலம், இருள், ஊ ழல், கீழுலகம், கும்பி, சுவப்பிரம்செந் து, திமிரம், தீ, துவாந்தம், நராலை, நிரயம், பவர்க்கம், பாதாளம், புலவ, பூதி, வீழ்கதி
நரகம் (narakam)
  1. 7- அள்ளல், இரௌரவம், கும்பீ பாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நரகம் (narakam) — noun
  1. < naraka
  2. Hell, the infernal regions, (a) of four kinds, viz., narakam, mā-narakam, irāca-narakam, irāca-rācēccura-narakam: (b) of eight kinds, viz., irauravam, tuvāntam, cītam, veppam, cantāpam, patumam, māpatumam, kālacūttiram: (c) of seven kinds, viz., tamattama-p-pirapai, irattiṉa-p-pirapai, carukkarā-p-pirapai, vālukā-p-pirapai, paṅka-p-pirapai, tūma-p-pirapai, tama-p-pirapai; நரகம், மாநரகம், இராசநரகம், இராசராசேச்சுரநரகம் என நால்வகையாகவும் (சி. போ. பா. 2, 3, பக். 203), இரௌரவம், துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மாபதுமம், கால சூத்திரம் என எண்வகையாகவும் (சி. போ. பா. 2, 3, பக். 203), தமத்தமப்பிரபை, இரத்தினப்பிரபை, சருக் கராப்பிரபை, வாலுகாப்பிரபை, பங்கப்பிரபை, தூமப் பிரபை, தமப்பிரபை என எழுவகையாகவும் (சீவக. 2817, உரை), நூல்களிற் கூறப்படுவனவும் உயிர்கள் தீவினைப்பயனை அனுபவிக்கும் இடமுமான உலகம்
  3. The nether worlds; பாதாள உலகம். (யாழ். அக.)

IndoWordNet

நரகம் — noun
  1. பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.
நரகம் — noun
  1. பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.

நகர் பட்டினம் பேரூர் புரி கற்பனையான இடம் மகாரௌவ் ரேத்குண்ட் இடம் ஸ்தாபனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நரகம்
  1. உயிர்கள் தீவினையின் பயனை நுகரும் இடம், பாதாள உலகம்