பஞ்சு

Cotton

Winslow (1862)

பஞ்சு (pañcu) — noun
  1. Cotton in general. See பஞ்சி, Sa
  2. Cloth சீலை
  3. The cotton shrub, பருத்தி, Gossypium herbaceum
  4. Down of the Illecebrum lanatum, பூனைபஞ்சு. (c.) பஞ்சும்நெருப்பும்போலே. As cotton and fire; to express the temptation from mingling of the sexes, &c
  • பஞ்சணை — A cushion stuffed with cotton, பஞ்சுமெத்தை. 2. See பஞ்சு.
  • பஞ்சிற்றுகள் — A small, lineal measure, தேர்த்துகள்.
  • பஞ்சிற்றொடர்–பஞ்சிற்றொடர்நுதி — The end of a cotton web next to the thread. See துய்.
  • பஞ்சினூல் — Cotton-thread.
  • பஞ்சுகடைதல் — Tousing cotton with a turning stick in a pot.
  • பஞ்சுகொட்ட — To beat cotton, by a machine like a bow-string.

Fabricius (1972)

பஞ்சு — noun
  1. cotton, cotton shrub
  2. cloth
  3. down of the illecebrum lanatum, பூனைப்பஞ்சு
  • கண் பஞ்சடைந்தது — the eyes became dim (everything appearing like cotton).
  • பஞ்சணை — a bed of cotton.
  • பஞ்சு கொட்ட — to beat cotton, for separating the seed from it.
  • பஞ்சுக்கொட்டை — a wisp of cotton prepared for spinning.
  • பஞ்சு சூர — to touse cotton with the fingers.
  • பஞ்சு பன்ன — to pull cotton with the fingers.

Tamil Moli Akarathi (1928)

பஞ்சு (pañcu)
  1. சீலை, தூறு, பருத்திப்பஞ்சு மு தலியன
பஞ்சு (pañcu)
  1. துலவம் தூலம்
பஞ்சு (pañcu)
  1. சீலை நூற்கும்பஞ்சு, பருத்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பஞ்சு¹ (pañcu) — noun
  1. cf. pañji
  2. Cotton; பருத்தி. பஞ்சொக்குமடிகள் (கம்பரா. மாரீச. 70)
  3. Cloth; சீலை. பஞ்சா ரகலல்குற் பாவையார் (சூளா. மந்திர. 54)
  4. See பஞ்சி
  5. பஞ்சணி விரலினார் (கம்பரா. உலாவியல். 10)
  6. Wick; விளக்குத்திரி. பஞ்சின்றி யமுதநெய் மாட்டிய விளக்கே (கம்பரா. சித்திர. 15)
  7. Indian cotton-plant; பருத்திச்செடி
  8. Down of pūḷai; பூளைப்பஞ்சு
  9. A technical term, used in dice-play; கவறாட்டத்து வழங்கும் குழூஉக்குறி. பஞ்சென வுரைசெய்வர் (கந்தபு. கயமுகனுற். 167)

IndoWordNet

பஞ்சு — noun
  1. பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும் நுண்ணிய இழைகளாலான திரவத்தை உறிஞ்சுக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள்.
பஞ்சு — noun
  1. பருத்திக் கொட்டையுடன் உள்ள பஞ்சு

பருத்தி அளந்தர் உத்திரி கார்ப்பாசம் சமுத்திராந்தம் சூத்திரபுட்பம் துண்டகேரி துவலம் தூலகம் தூலம் பஞ்சி பிசவ்வியம் நர்மா தேவபருத்தி ரடியா ஹிர்குனி