பன்மை
இலக்கணப் பயன்பாட்டிற்கு, இது முக்கியம். எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேல் இருந்தால், அது பன்மை எனப்படும். பெரும்பாலும் பெயர்ச்சொல் பயன்பாட்டில்,பன்மை பயன்படுத்தப் படுகிறது.
plural plurality, multitude
Winslow (1862)
பன்மை (paṉmai) — noun
Plurality–oppos. to ஒருமை, ஒன்றன்மை Many, multiform, multifold, பலவற்றின்றன்மை Any thing of middling quality, what is general, பொதுமை Indefiniteness, indeterminateness, குறிப்பின்மை Connivance, கண்டிப்பின்மை
பன்மைச்சொல் — A word in the plural number. பன்மைபண்ண–பன்மையாய்விட — To connive at a fault, to reprove or punish but slightly. பன்மைப்பால் — The plural number, properly of the irrational class. பன்மைப்பொதுப்பெயர் — A plural noun common to both the rational and irrational classes. பன்மையாய்ப்பேச — To speak generally, indefinitely; not pointedly or particularly. பன்மைவிகுதி — A plural termination, commonly neuter.
Fabricius (1972)
பன்மை — noun
(பல) plurality (opp. to ஒரு மை) many, multiform
பன்மைச்சொல் — a word in the plural number. பன்மைப்பால் — the plural number. பன்மையாய்ப்பேச — to speak generally or indefinitely.
Tamil Moli Akarathi (1928)
பன்மை (paṉmai)
பலவாகியதன்மை
பன்மை (paṉmai)
பலவற்றின்றன்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பன்மை (paṉmai) — noun
< id (Gram.) Plural, opp. to orumai; ஒன்றல்லாதது. தானறி பொருள்வயிற் பன்மைகூறல் (தொல். சொல். 23) Plurality, multitude; தொகுதி. உயிர்ப் பன்மை (புறநா. 19) Inconsistency, inconstancy; ஒருபடிப்பட்டிராமை. பன்மையே பேசும் படிறன் றன்னை (தேவா. 674, 5) Indefiniteness; நேர் குறிப்பின்மை. பன்மையாகவே பேசினான். (W.) Anything of middling quality; சாதாரணமானது. (W.) Connivance; பார்த்தும் பாராமை. அவன் பன்மையாய்விட்டான். (J.)
பன்மை (paṉmai) — noun
A tax paid in cash; காசாயவகை. பன்மையாலும் பண்டவெட்டியாலும் ஆளொன்றுக்குக் காசு பத்தாக (S. I. I. v, 365).
IndoWordNet
பன்மை — noun
எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது
எண்(இலக்கணம்)
சொல் அகராதி
சொல் தேடு