புதுமை

இதுவரை கண்டிராதது, புதியது முற்றிலும் மாறுபட்ட, தனித்தன்மையுடைய நவீனம்,நூதனம்

novelty, newness, freshness innovation wonder, miracle

Winslow (1862)

புதுமை (putumai) — noun
  1. Newness, modernness, novelty, freshness, நூதனம்
  2. That which is untrained, unpractised, பழக்கமின்மை
  3. Strangeness, extraordinariness, uncommonness, அபூர்வம்
  4. A wonder, a miracle, அதிசயம்
  5. Plenty, abundance, excess, intensity, மிகுதி
  6. Freshness, incorruptibility, வாடாமை. (c.)
  • புதுமைகாட்டுதல் — Performing miracles, as a divine being to prove his divinity.
  • புதுமைசெய்ய–புதுமைபண்ண — To work miracles, produce wonders.
  • புதுமைநடக்குதல் — Occurrence of wonders.
  • புதுமையானகோயில் — A new temple. 2. A temple where miracles are performed.
  • புதுவை — [by syncope for புதுச்சேரி.] A new town or புத்தூர். (p.)

Fabricius (1972)

புதுமை — noun
  1. newness, novelty, நூதனம்
  2. strangeness, extraordinariness, அபூர்வம்
  3. a new or strange thing, a miracle, அதிசயம்
  4. plenty, abundance, மிகுதி
  5. freshness, incorruptibility, வாடாமை. The adjs. புதிய & புது (புத்து) see separately
  • புதுமை செய்ய–பண்ண — to work miracles.

Tamil Moli Akarathi (1928)

புதுமை (putumai)
  1. அற்புதம், நூதனம், மிகுதி
புதுமை (putumai)
  1. அபிநவம், கடி, கோடகம், கோ டி, நவம், நவீனம், நூதனம், புணர் புதை, புத்தேள், புனிறு, யாணர், வ ம்பு, விருந்து
புதுமை (putumai)
  1. நூதனம், மிகுதி

IndoWordNet

புதுமை — noun
  1. ஒன்று இதுவரையில் இல்லாததாகவும் வழக்கமானதிலிருந்து மாறுபட்டதாகவும், புதியதாகவும் இருக்கும் தன்மை அல்லது நிலை.

நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

Tamil Wiktionary

புதுமை — பெயர்ச்சொல் (Noun)
  1. இதுவரை கண்டிராதது, புதியது
  2. முற்றிலும் மாறுபட்ட, தனித்தன்மையுடைய
  3. நவீனம்,நூதனம்

[object Object]

கரணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புதுமை (putumai) — noun
  1. Newness, freshness, novelty; புதிதாந்தன்மை. பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திருவாச. 7, 9)
  2. Want of training or practice; பழக்கமின்மை
  3. Strangeness, extraordinariness, uncommonness; அபூர்வம்
  4. Wonder, miracle; அதிசயம். அங்ஙனங் காண்பேனாயின் இஃது ஒரு புதுமையன்றோ (சிலப். 19, 10, உரை)
  5. Plenty, abundance, excess, intensity; மிகுதி. (திவா.)
  6. Fresh glow, brightness; எழில். புது மயிலூர்பரன் (கந்தபு. அவையடக். 13)
  7. Ceremonial feast on the occasion of childbirth, etc.; நாட்டுக்கோட்டையார் பிள்ளைப்பேறு முதலிய வற்றைக் கொண்டாடும் சடங்கு வகை. Nāṭ. cheṭṭi