மோகம்

மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி திகைப்பு மோகமெங்கு முளவாக ( நாகபாச. 84) காம மயக்கம்

infatuation

Winslow (1862)

மோகம் (mōkam) — noun
  1. Fierce, ungovernable lust, lasciviousness, காமம்
  2. Desire, affection, ஆசை
  3. Confusion of mind, bewilderment, fainting, உன்மத்தம். See under பகை, உட்பகை 6., also மாயை
  4. and பஞ்சபாணாவஸ்தை. W. p. 676. MOHA
  5. [in comb.] Barrenness. See அமோகம். மோகம்முப்பதுநாள்ஆசைஅறுபதுநாள். Venereal appetite continues thirty-days, desire for sixty; [after marriage.] prov. அவனுக்கதின்பேரிலேமோகம். He lusts after it
  • மோகஇச்சை — Libidinous desire.
  • மோககவனம் — Passionate desire, libidinous inclination; [ex கவனம்.]
  • மோகங்கொள்ள — To grow libidinous.
  • மோகந்தீர — To gratify lust.
  • மோகர் — Painters as fascinating people by their work, சித்திரக்காரர்.
  • மோகலீலை — Lascivious behaviour. See லீலை.

Fabricius (1972)

மோகம் — noun
  1. lust, lasciviousness, sensuality, காமம்
  2. desire, affection, ஆசை
  3. confusion of mind, bewilderment, உன்மத்தம்
  4. (in comb.) barrenness
  • மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் — venereal appetite continues thirty days, desire for sixty. .
  • மோக இச்சை–கவனம்–விகாரம் — libidinous desire.
  • மோகக்காரன்–விகாரி–வியாபாரி — a lascivious person.
  • மோகங்கொள்ள — to grow lustful.
  • மோகந்தீர–தீர்த்துக்கொள்ள — to gratify one's lust.
  • மோகன்–மன்மதன் — Kama, the Hindu Cupid, .

Tamil Moli Akarathi (1928)

மோகம் (mōkam)
  1. ஆசை, உட்பகையாறினொன் று, உன்மத்தம், காமம், தம்பிதம், பஞ்சமாயையினொன்று அது விபரீத ஞானமுண்டாக்குவது, பஞ்சபாணா வத்தையினொன்று அது அழுங்கலும் பிதற்றலும், பாதிரி, மயக்கம், மதியீ னம், முருங்கை, வருத்தம், வாழை, விகாரமெட்டினுமொன்று
மோகம் (mōkam)
  1. ஆசை, அழுதல், பிதற்றல்
மோகம் (mōkam)
  1. ஆசை, உன்மத்தம், காமம்

IndoWordNet

மோகம் — noun
  1. பாலுணர்வு வேட்கை.
மோகம் — noun
  1. ஒன்றின் மீது ஆசைப்படுவது

காமம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் நாகரீகம் பாணி பாங்கு செயல்முறை செய்முறை நடவடிக்கை நிபந்தனை விதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மோகம்
  1. ஆசை
  2. காமமயக்கம்: விருப்பம்
  3. வேட்கை
  4. மூர்ச்சை
  5. மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
  6. திகைப்பு
  7. பாதிரிமரம்

Tamil Wiktionary

மோகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
  2. திகைப்பு மோகமெங்கு முளவாக ( நாகபாச. 84)
  3. காம மயக்கம்
  4. ஆசை
  5. மூர்ச்சை
  6. மோகநட்சத்திரம் - சனி நிற்கும் நட்சத்திரத்திற்கு ஆறாவதும் பத்தாவதும் பதினோராவதும் இருபதாவதுமாகிய நட்சத்திரங்கள்
  7. மோர் மோகமுறை யிணக்கம் ( 87)
  8. பாதிரிப் பூ
  9. விருப்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மோகம்¹ (mōkam) — noun
  1. < mōha
  2. Loss of consciousness; fainting; மூர்ச்சை. (சூடா.)
  3. Delusion of mind which prevents one from discerning the truth; மாயையால் நிகழும் மயக்க வுணர்ச்சி. (சி. போ. பா. 2, 2)
  4. Confusion, distraction; திகைப்பு. மோகமெங்கு முளவாக (கம்பரா. நாகபாச. 84)
  5. Fascination due to love; infatuation; காமமயக்கம்
  6. Love, affection; ஆசை
  7. See மோகநட்சத்திரம். (விதான. குணாகுண. 41, உரை.)
மோகம்² (mōkam) — noun
  1. Trumpet-flower. See பாதிரி¹. (மலை.)
மோகம்³ (mōkam) — noun
  1. See மோசம்². (சங். அக.)