வரலாறு

History

Winslow (1862)

வரலாறு (varalāṟu) — noun
  1. Circumstances, adjuncts, details, சங்கதி
  2. Origin, மூலம்
  3. example in grammar, or science, of the use of words, உதாரணம்
  4. A table of contents, அட்டவணை
  5. To wit, namely, as follows, on this wise, திருஷ்டாந்தம்
  6. (Beschi.) A passage; a coming, வருமாறு; [ex வரல் et ஆறு Way.]
  • வரலாற்றுவஞ்சி — A panegyric in the வஞ்சிப்பா verse on high birth, greatness and fame. See பிரபந்தம். நதியின்வரலாறு. The tributaries of a river.

Fabricius (1972)

வரலாறு — noun
  1. (வரல்+ஆறு, way), வருமாறு, s. source, beginning, origin, மூலம்
  2. circumstances, detail
  3. example in grammar or science, உதாரணம்
  4. a table of contents, அட்டவணை
  5. a passage, a coming

Tamil Moli Akarathi (1928)

வரலாறு (varalāṟu)
  1. ஒழுங்கு, மூலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வரலாறு (varal-āṟu) — noun
  1. < வா- + ஆறு¹
  2. Order of events; நிகழ்ச்சிமுறை
  3. History; சரித்திரம். ஈதிவன்றன் வரலாறுங் குலவரவும் (கம்பரா. குலமுறை. 29)
  4. Antecedents; பூர்வ சரித்திரம்
  5. Circumstances; சங்கதி
  6. Details; விவரம்
  7. Means, device; உபாயம். ஆவிதாங்கும் வரலாறு கேளும் (அழகர்கல. 86)
  8. Example, illustration; உதாரணம். (W.)

IndoWordNet

வரலாறு — noun
  1. கடந்த காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் அவற்றைப் பற்றிய பதிவு
வரலாறு — noun
  1. நமக்கு எழுதும் முறையில் பயன்படும் ஒரு சாது மகாத்மவின் வார்த்தை
வரலாறு — noun
  1. ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு, சரித்திரம்
வரலாறு — noun
  1. ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல் சமூக பொருளாதாரத் துறையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு.

வர்ணனை வாக்கு கூற்று சரித்திரம் குணம் அறிவியல்