குணம்

ஒன்றின் தன்மை, இயல்பு. பண்புப் பெயர். கிழக்கு

character, disposition quality, attribute healing, cure

Tamil Moli Akarathi (1928)

குணம் (kuṇam)
  1. இராசதமுதலியகுணம், இலட சணம், கயிறு, குடம், சத்து, சுகம், சீர்மை, தத்துவம், தன்மை, நாணி, நிறம், பண்பு, மேன்மை
குணம் (kuṇam)
  1. இயல், இயல்பு, உரிமை, உழு வல் ஊழ், கிழமை, கொள்கை, கோ ள், சால்பு, சீலம், தகவு, தகுதி, தகை தகைமை, தன்மை, திறன், நிலை நிறம், நீர், நீர்மை, நுனித்தல்படி, பண்பு, பரிசு, பாடு, பால், பான்மை, பிரகிருதி, பெற்றி, மரபு, மாலை, முறை, வண்ணம், விதி, இவற்றுட் டீயகுணத்தின் பெயர்-கரளம், கராளி
குணம் (kuṇam)
  1. 3- தத்துவம், இராசதம், தாமத ம் அவையாவன
  2. ஞானம், அருள், தவம், பொறை, வாய்மை, மேன் மை, மோனம், ஐம்பொறி, யடக்க வெனவெட்டுஞ் சத்துவம், மனவூக் கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வியெனவெட்டு மிராசதம், பேருண்டி, நெடுந்துயில், சோம்பு, நீதிவழு, ஒழுக்கவழு, வஞ் சம், மறதி, பொய், கோபம், காமம், கொலை, இவை தாமதம்
குணம் (kuṇam)
  1. 8- அறிவு, நிறை, ஒர்ப்பு, கடை ப்பிடி, நாணம், மடம், அச்சம், பயிர் ப்பு, இவற்றுள் முன்னைய நான்கும் ஆடூ, உக்குணம், பின்னைய நான்கும் மகடூ உக்குணமென்றறிக
குணம் (kuṇam)
  1. குடம், சீர்மை, நாணி, நிறம், நூல், பண்பு, முக்குணம்

Winslow (1862)

குணம் (kuṇam) — noun
  1. Quality, attribute, property, பண்பு
  2. Disposition, temper, nature, தன்மை
  3. Good quality, moral or physical; proper temperament, virtue, நற்குணம்
  4. Attribute, perfection, excellence–as of a deity, இலட்சணம்
  5. Grace, beauty–as of a style or composition; merit, freedom from fault or defect–opposed to குற்றம், மேன்மை
  6. Wholesomeness, healthfulness, சுகம்
  7. Soundness of intellect; normal state of the mental feelings, சொஸ்த புத்தி
  8. Indication, symptoms–as of a disease, வியாதியின்குறி
  9. Color–as a quality, நிறம்
  10. Smoothness, சீர்மை
  11. Properties; functional powers or principles in nature, operative in all sentient beings; the sourses of the dispositions, &c., தத்துவம்
  12. Thread, cord, string, &c., நூல், கயிறு
  13. A bow-string, நாணி
  14. Property, essence, original principle, சத்து
  15. [in physics.] Varieties, modifications, products of bodies, உடற்குணம். Wils. p. 291. GUN'A
  16. A water-pot, a pitcher–as குடம். குணத்தைமாற்றக்குருவில்லை. No guru can change the temper. குணத்தோடேகேள். Hear me with a right spirit and patience. குணநாடிகுற்றமுநாடி. Having examined the excellencies and faults–as of a style, a speech, &c. குணமதுகைவிடேல். Hold to what is good and proper; cease not to show a good disposition. குணமென்னுங்குன்றேறிநின்றார்வெகுளிகணமேயுங் காத்தலரிது. It is hard to divert, even for a moment, the anger of those who stand upon the mountain of virtue; i. e. who excel virtue. (குறள்.) அதிலுமிதுகுணம். This is better than that. அவனுக்குத்தாய்தந்தைகுணம்பிடிபடுகிறது. His parents' disposition and temper begin to be visible in him
  • குணகுணி — Attribute and subject–as in செந்தாமரை, where செம்மை is the attribute, குணம், and தாமரை the subject, குணி.
  • குணகுணிப்பெயர்கள் — Abstract noun and subjective noun. (நன்.)
  • குணக்ஞன்–குணஞ்ஞன் — A pleasant, good-natured, agreeable person; one of an excellent disposition, நற்குணமுள்ளவன். Wils. p. 291. GUN'AG'NA.
  • குணக்குன்று — A virtuous man; lit. a mountain of excellent qualities.
  • குணக்கேடு — Bad temper, bad disposition; disobliging, unkind, கெட்டகுணம். 2. Fatal symptoms in disease, அசாத்தியக் குறி.
  • குணக்கேடன்–குணங்கெட்டவன்–குணமில்லாதவன் — An ill-natured person.

Fabricius (1972)

குணம் — noun
  1. quality, attribute or pro- perty in general, பண்பு
  2. excellence, attribute (of a deity), இலட்சணம்
  3. dispositon, nature, temper, தன்மை
  4. good disposition of the mind or body, probity, சீர்மை
  5. whole- someness, healthfulness, சுகம்
  6. bowstring, வின்னாண்
  7. thread, நூல்
  8. a water-pot, குடம்
  9. colour, நிறம்
  • அவன் குணம் பேதலித்திருக்கிறது–பேதித்திருக்கிறது — he is changed for the worse.
  • அதிலும் இது குணம் — this is better than that.
  • குணத்தோடே கேள் — hear me with a right spirit and patience.
  • குண குணிப்பெயர்கள்–செந்தாமரை–தாமரை — abstract noun and subjective noun, subjects with attributes as ( . or குணி, செம் attribute or குணம்.)
  • குணக்குன்று–நிதி — a person of noble character, a virtuous man; 2. God.
  • குணங்குறி — disposition, charac- teristics.

IndoWordNet

குணம் — noun
  1. குணம்
குணம் — noun
  1. இப்படிப்பட்டவர், இப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளும்படியாக இருக்கும் இயல்பு
குணம் — noun
  1. மனிதர்களிடையே காணப்படும் குணம், இயற்கை குணம்

பொருள் அறிகுறி அடையாளம் லச்சினை கூறு இலச்சினை அச்சு தன்மை கோள் தகுதியின்மை திறன்யின்மை ஆற்றலின்மை யோக்கிதையின்மை சக்தியின்மை லாக்கியின்மை இலாக்கியின்மை சுவாபம் பண்பு ஞானம் அறிவு மிதமிஞ்சி செலவு செய்தல் இயற்கையான வெட்கம் நாணம் கூச்சம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குணம்
  1. பொருளின் தன்மை
  2. ஒழுக்கத் தன்மை
  3. குணாலம் - ஒருவகை மகழ்ச்சிக்கூத்து
  4. வீரா சாத்துவிக இராசத தாமதமாகிய மூல। வேசத்தாற் கொக்கரித்தல்
  5. ஒரு பறவை. குணங்கள்
  6. காப்பியத்தைச் சிறப்பிக்கும் குணாலயன் - நற்குணமுள்ளவன், குணங்களுக்கு செறிவு, தெளிவு முதலிய தன்மை
  7. அனுகூலம்
  8. இருப்பிடமானவன்

Tamil Wiktionary

குணம் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒன்றின் தன்மை
  2. இயல்பு.
  3. பண்புப் பெயர்.
  4. நிறம்
  5. கிழக்கு

[object Object]

தனம் தன்மை குணவான் குணாளன் குணவதி குணாளினி குணபாடம் குணாம்சம் நற்குணம் தீயகுணம் நிர்க்குணம் துர்க்குணம் மருத்துவ குணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குணம்¹ (kuṇam) — noun
  1. < guṇa
  2. Attribute, property, quality; பொருளின் தன்மை. அதன் குணங்கருதி (தொல். சொல். 416)
  3. Character; ஒழுக்கத்தன்மை. மாண்ட குணத்தொடு மக்கட்பே றில் லெனினும் (நாலடி, 56)
  4. Fundamental quality; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்
  5. Opinion, belief; கொள்கை. (திவா.)
  6. (Rhet.) Inherent excellence of style in a poetic composition; காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு தெளிவு முதலிய தன்மை. அவற்றுள் சொற்சுவை குணம் அலங் காரமென இருவகைத்து (குறள், 420, உரை)
  7. Favourableness; அனுகூலம். காரியம் குணமாயிற்று
  8. Convalescence; சொஸ்தம். வியாதி குணமாயிற்று
  9. Excellence, merit, virtue; மேன்மை. Colloq
  10. Soundness of intellect; புத்தித்தெளிவு. (W.)
  11. Colour; நிறம். (பிங்.)
  12. Rope, cord; கயிறு. (திவா.)
  13. Bow-string; வில்லின் நாண். தன்சிலை . . . குணத்தினிசை காட்டினன் (கந்தபு. அமரர்சிறை. 44)
  14. See குணவிரதம். குணநூற்றுக்கோடியும் (சீவக. 2818)
குணம்² (kuṇam) — noun
  1. cf. kuṭa. Water-pot, pitcher; குடம். (பிங்.)