விடுப்பு
அனுமதியற்ற விடுப்பினை அலுவலகத்தில் எடுத்தால், அன்றைய நாளுக்கு ஊதியம் விடுபடும்(இல்லை). தேவையற்ற ஒரு செய்தி (இப்படிப் பொருளிலும் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது.) ஆங்கிலம் - leave
Leave
Winslow (1862)
விடுப்பு (viṭuppu) — noun
Inquisitiveness, ஆராயுங்குணம் A show, curiosity, விநோதம்
விடுப்புக்காட்ட — To show a curious sight.
Fabricius (1972)
விடுப்பு — noun
inquisitiveness, ஆராயுங் குணம் a show, curiosity, விநோதம்
Tamil Moli Akarathi (1928)
விடுப்பு (viṭuppu)
ஆராயுங்குணம், பூராயம், வே டிக்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விடுப்பு (viṭuppu) — noun
< விடு²- Separation; நீக்கம். விடுப்பில் குணகுணி (வேதா. சூ. 127) Inquisitiveness; துருவியறியுந் தன்மை. (W.) That which is strange or curious; வினோதமானது. அவன் விடுப்புக்காட்டுகிறான். (W.) Desire; விருப்பம். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விடுப்பு
நீக்கம் விடுமுறை துருவியறியுந் தன்மை விநோதமானது விருப்பம்
சொல் அகராதி
சொல் தேடு