வைரம்
வைரம் என்பது படிக நிலையில் உள்ள கரிமக்கல். கடினத்தன்மை, உறுதி அறுபது
diamond
Tamil Moli Akarathi (1928)
வைரம் (vairam)
- நவமணியினொன்று, பகை, வி ரோதம், வீரத்தின்றன்மை.வியிரம், வலாசுரன்கொல்லப்பட்டபோது அவனது ஏலும்பு சிதறி பல மலைக ளின்மேலும் விழுந்து வைரமணிக ளாயின, ததீசியெலும்பு ஏன்பாருமு ளர், அவ்வயிரம் ஒளிவேறுபாட்டால் நான்காகும்
- "அந்தணன் வெள்ளை யரசன் சிவப்பு, வந்தவைசியன் பச் சை, சூத்திரன், அந்தமில் கருமை யென்றறைந்தனர் புலவர்."
- அவை பிரமவயிரம் க்ஷத்திரயவயி ரம் வைசிய வயிரம் சூத்திரவயிரம் ஏன்பனவாம்
- வயிரத்திற்குக் குற்றமாவன:-
- "சரைமலங்கீற்றுச் சம்படிபிளத்தல், துளைகரிவிந்து காகபாதம், இருத்துக் கோடிகளிலாதன் முரிதல், தாரை மழுங்கறன்னோ, டீராறும் வயிரத் திழிபெனமொழிப"
- ஏன்றபடி பன் னிரண்டாம், அவற்றுள் பெருங்குற் றம் நான்கும் பயனுமாவன
- "1. காகபாதநாகங்கொல்லும்"
- "2. விந்துசிந்தையிற்சந்தாபந்தரும்"
- "3. மலம்பிரியாத துநிவந் தருகிளை கெடும்"
- "4. கீற்றுவரலினைபெற்றவர் மாய் வர்"
- ஏனப்படும்
- குணமாவன:- பலகை யெட்டுங் கோணமாறும், இலகிய தாபையுஞ் சுத்தியுந்தராசமும், ஐந்துங்குணமெ ன்றறைந்தனர்புலவர், இந்திரசாபத் திக வொளிபெறினே
- " ஏன்பன. சில சாத்திரங்களில் வயிரம் ஒரு வகைக் கல்லென்று கூறப்பட்டுள்ள து யுயிரம், மதங்கமலை இமயமலைவே ணாநதி முதலிய இடங்களி லுண்டா மென்பது ஆரியநூற்றுணிபு வயிரத் தைச் சரீரத்திலணிவதனால், கர்ப்ப தோஷத்தால் புத்ரோத்பத்தியில்லா த பெண்களுக்குப் புத்திரலாபமும், ஏல்லார்க்கும் இடிவிஷம்முதலியவற் றுக்கு அஞ்சாமையு முண்டாகும். வ லாசுரன்வயிற்றின் புறத்தைக் கொடுத் திவிழுங்கிய கருடன் அதனைக் கழித் துமிழ, அது வீழ்ந்து பலமலைகளிலு மூறிப் பிறந்த கற்கள் மரகதமெனப் படும், கருடோத்காரம் ஏனப்படுவது மதுவே, பச்சைக்கு, "
- நெய்த்த ம யிற்கழுத்தொத்தபைம்பயிரிற், பசுத் தல்பொன்மை தன்னுடன் பசுத்தல், வக்கிபாய்தல், பொன்வண்டின் வயி, றெத்துத்தெளிதலோடெட்டுங் குணமே
- கருகுதல் வெள்ளை கன்மணல் கீற்று, பரிவுதார் சாயையிறுகுதன் மரகதத், தெண்ணிய குற்ற மிவை யென மொழிப
- " இனி மாணிக்கம் பதுமராகம் சௌ கந்தி குருவிந்தம் கோவாங்கு ஏன நான்கு. "
- தாமரை கழுநீர் சாதகப்
- " புட்கண கோபமின்மினி கொடுங் கதிர்விளக்கு, மாதுளைப் பூவிதை வன்னியீரைந்து, மோது சாதுரங்க வொளியா கும்மே"
- "திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக் கவிமலர்குன்றி முயலுதிரம் மே, சிந்தூரங் குக்கிற் கண்ணென வெட்டும், ஏண்ணிய குருவிந்தமன் னிய நிறமே"
- "கோகிலக்கண் செம்பஞ்சு கொய் மலர்ப்பலாசம், அசோகப் பல்லவ மணிமலர்க்குவளை, இலவத்தர்க ளென்றா றகுணமும்சௌகந்திக்குச் சாற்றிய நிறனே"
- "கோவை நற்செங்கல் குராமல மஞ்சளெனக், கூறி நான்குங் கோ வாங்கு நிறனே"
- இனிப் புருடராகத்தின் குணம், பொன்னையுருக்கி மாசறத் தெளிய வைத்தாலொத்த நிறத்தினை யுடை மை, வைடூரியம் - தோன்றுளி நிறத் தினையுடையது
- நீலம்,
- "வெள்ளை"
- சிவப்புப்பச்சை கருமையென்றெண் ணிய நாற்குலத்திலங்கிய நிறமே
- கோகிலக்கழுத்துக்குவளைசுரும்பர்
- ஆகுலக் கண்களவுரிச்சாறு, காயா நெய்தல் கனத்தல்பத்தி, மாய்தலெ னக்குணம் பதினொன்றாமே" ஏன வருவனவற்றாலே தெளியப்படும்
- நீலத்துக்குக் கற்றமெட்டு, இது வரைக்கும் சொல்லிய மணிகளெல் லாம் ஒருமுதலிற் றோன்றின
- இனி முத்துக்குரிய குற்றம் காற் றேறு, மணலேறு, கல்லேறு, நீர்நிலை யென்பன, குணம்- சந்திரனிறமும், வெள்ளியின் சோதியும், செவ்வாயி னெளியும் ஏன மூன்றாம், ஏல்லாம் உருண்டனவாதல்வேண்டும்
- பவளத்தின்குணம் - துனையின்மை யும், உருட்சியும், சிந்துர நிறமும், முசு முசுக்கைக் கணிநிறமும் உடை மை, முத்தினால் மேகவெப்பந் தணி யும், பவளத்தினால் சர்மரோகம் நீங் கும், இவற்றின்விரிவெல்லாம்இரத்ந பரீக்ஷையென்னும்நூல் முதலியவற் றிற் காண்க
Tamil Wiktionary
வைரம் — பெயர்ச்சொல் (Noun)
- வைரம் என்பது படிக நிலையில் உள்ள கரிமக்கல்.
- கடினத்தன்மை
- உறுதி
- வீரம்
- அறுபது
- மூர்த்திகன்
- வயிரகடவுள்
[object Object], [object Object]
Winslow (1862)
வைரம் (vairam) — noun
- Enmity, hostility, hatred, விரோதம்
- Bravery, championship, வீரம்–For the compounds, see வயிரம்
Fabricius (1972)
வைரம் — noun
- enmity, hostility, விரோதம்
- bravery, வீரம்
- see வயிரம்
- வைரஞ் சாதிக்க — to cherish hatred.
- வைரன் — ( வைரி) one that bears an obstinate hatred.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வைரம்¹ (vairam) — noun
- < vajra
- Hardness; கடினமானது
- Core of a tree; மரக்காழ். (திவா.)
- Diamond. See வயிரம்¹
- அட்டுநீ ரருவிக் குன்றத் தல்லது வைரந் தோன்றா (சீவக. 2925)
வைரம்² (vairam) — noun
- < vaira
- Anger. See வயிரம்²
- Enmity; பகைமை
- Bravery, heroism; வீரம். (W.)
வைரம்³ (vairam) — noun
- Musical instrument; வாச்சியப்பொது. (பிங்.)
IndoWordNet
வைரம் — noun
- ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்நிறக் கல்
வைரம் — noun
- ஏதாவது ஒரு பொருளின் உள்ளேயுள்ள அடிப்படை தத்துவம் அல்லது பகுதி
கோஹினூர் சாரம் பொருள் அர்த்தம் கருத்து