சாரம்

சாராம்சம், மையப் பொருள், கருப்பொருள் லுங்கி, கைலி ஒரு வகைக் கீழாடை essence, gist, summary

dhoti, sarong sap (as of plants), juice relish, sweetness

Winslow (1862)

சாரம் (cāram) — noun
  1. The sap of vegetables, juice, இரசம்
  2. Savor, flavor, relish, sweetness, tastefulness, palatableness, இனிமை
  3. Essence, essential or vital part of a discourse, book, &c., கருத்து
  4. Strength, vigor, fertility in discourse; engagingness, interestingness, solidity, fulness of meaning, பயன்
  5. The hard or solid part of a tree, மர வைரம். W. p. 920. SARA
  6. Metallic cement, நவச்சாரம். (சது.)
  7. Washerman's lye, வண்ணான்காரம்
  8. Ashes for lye, &c., காரச்சாம்பல். W. p. 263. KSHARA.
  9. Scaffolding for a building; sticks tied to the smaller branches of flower trees, serving as a scaffold for a person to stand on and gather flowers, சாரமரம். (c.)
  10. (Sa. Chara, Sara.) Going, motion, course, progress in general, நடை
  11. [mostly in combination.] Motion or passage of the planets, கிரகசாரம்
  12. (in combin.) Going into an immoral course of conduct, as in விபசாரம், அபசாரம், &c
  13. (in combin.) Passing, voiding, evacuating–as in அதிசாரம்
  14. Elevation, eminence, rising, high ground, மேடு
  15. The நிலாமுகி bird; (சது.) (perhaps from the நிகண்டு "சாரமாம் நிலாமுகிப்பேர்சகோரம்.")
  16. The wild olive, இலுப்பை
  17. The Cashew-nut-tree, கொட்டைமுந்திரிகை
  18. The French honey-suckle, பாலடை. Hedysarum, L. சாரமில்லாதபேச்சு. Vain and empty discourse
  • சாரமெடுக்க — To extract juice or virtue from herbs, &c. 2. To take the substance of a composition, discourse, &c.
  • சாரமிறக்க — To take down a scaffolding. 2. To express juice. 3. To swallow the juice of any thing chewed or dissolved in the mouth.
  • சாரபூமி — Rich, fertile land. (Rare.)
  • சாரமேற்ற — To communicate or infuse virtue, savor, force, vigor, &c.
  • சாரமற்ற — Insipid, unsavory, unrelishable. 2. [in discourse.] Powerless, vapid, uninteresting, not sound, profound, forcible or impressive, &c., உருசியற்ற.
  • சாரமற்றவன் — One without knowledge, learning, strength, vigor, property, merit of austerities, &c.

Fabricius (1972)

சாரம் — noun
  1. juice, இரசம்
  2. savour, fla- vour, sweetness, இனிமை
  3. essence, essential part of a discourse, கருத்து
  4. strength, fulness of meaning, பயன்
  5. scaffolding, சாரமரம்
  6. going, motion, movement, progress, நடை
  7. (in combin.) immoral con- duct (as in விபசாரம், அபசாரம்)
  8. Iye, வண்ணான்காரம்
  9. the cashew tree, கொட்டை முந்திரி
  10. the core of a tree, மரவயிரம்
  11. the south Indian mahua, இலுப்பை
  • சாரக்கட்டை — a temporary wall or support for an arch.
  • சாரஸ்திரி–சோரஸ்திரி — an adulteress.
  • சாரத்தண்ணீர்–காரத்தண்ணீர் — Iye, .
  • சாரத்துளைகள் — scaffold holes in a wall.
  • சாரத்துவம்–விபசாரம் — adultery, .
  • சாரமில்லாத பேச்சு — a dry and empty discourse, insipid talk.

Tamil Moli Akarathi (1928)

சாரம் (cāram)
  1. இலுப்பை, இனிவை, உருக்கு, ஏதண்டை, சத்து, நடை, நிலாமு கிப்புள் , பாலாடை, புடவையழுக்க கற்றுங்காரம், மரவயிரம், முந்திரி கை, மேடு, விபசாரம்
சாரம் (cāram)
  1. இனிமை, ஓர்மருந்து, கிரகசாரம், நடை, நிலாமுகிப்புள், மரவயிரம், மேடு

IndoWordNet

சாரம் — noun
  1. மொழியில் சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது.
சாரம் — noun
  1. ஒரு பொருளின் பிரதான பாகம் அல்லது குணம்

அர்த்தம் பொருள் கருத்து கரு பொருண்மை எண்ணம் சிந்தனை நினைப்பு நினைவு நெனவு நெனப்பு உள்அர்த்தம் உட்பொருள் உள்ளர்த்தம் வாக்கியப்பொருள் வாக்கிய அர்த்தம் உட்கருத்து சேர்த்து எழுதுதல் மறைமுகப்பொருள் உள்ளுறைப்பொருள் ரசம் வைரம் ஊட்டச்சத்து குனைன் பெப்பர் மிண்ட்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாரம்
  1. மேலேறக் கட்டும் மரம்
  2. மேடு
  3. கோளின் இயக்கம்
  4. சாறு
  5. இனிமை
  6. மருந்து
  7. சிறந்தது
  8. பயன்
  9. ஆற்றல்
  10. மரவயிரம்
  11. இலுப்பை
  12. கொட்டைமுந்திரிகைமரம்
  13. சித்திரப் பாலா டைப் பூடு
  14. நவச்சாரம்
  15. வண்ணான்காரம்
  16. காரச் சாம்பல்
  17. விபசாரம்
  18. வடித்தெடுத்த சாருசம் - கல்லுப்பு. பகுதி
  19. மரவகை. சாரூப்பியம் - கடவுளைப்போல் உருப்பெற்

Tamil Wiktionary

சாரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. சாராம்சம்
  2. மையப் பொருள்
  3. கருப்பொருள்
  4. லுங்கி
  5. கைலி ஒரு வகைக் கீழாடை

[object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாரம்¹ (cāram) — noun
  1. < சார்-
  2. [K. sāra.] Scaffolding, sheers, sticks tied to the smaller branches of a flower-tree, as a scaffold for picking flowers; மேலேறக்கட்டும் மரம். உதரரோமச் சங் கிலி சார மாக்கி (குற்றா. தல. தருமசா. 70)
  3. Elevation, eminence, high ground; மேடு. (W.)
சாரம்² (cāram) — noun
  1. Motion, course, as of planets; கிரகத்தின் இயக்கம். சனியின் சாரம். (பஞ்சாங்க.)
சாரம்³ (cāram) — noun
  1. < sāra
  2. Sap, as of plants; juice; இரசம். வழியு மாசாரமுஞ் சிறந்தீர் (அழகர்கல. 67)
  3. Relish, sweetness; இனிமை. (பிங்.)
  4. Medicine, elixir; மருந்து. (பிங்.)
  5. That which is of superior quality; சிறந்தது. மாமணிச்சாரம் வைத்த வலயமொன்று (பாரத. சூதுபோர். 175)
  6. Essence; gist; வடித்தெடுத்த பகுதி. பதார்த்த மெல்லாஞ் சாரமாச் சேகரித்து (சிவரக. சிவதன்மா. 34)
  7. Advantage, use; பயன்
  8. Strength, vigour; ஆற்றல்
  9. Hard inner part or heart of a tree; மரவயிரம். (பிங்.)
  10. Cuddapah almond, Buchanania latifolia; மரவகை. (L.)
  11. South Indian mahua. See இருப்பை. (மலை.)
  12. Cashew tree. See கொட்டைமுந்திரி. (மலை.)
  13. Pointed-leaved, tailed tick-trefoil. See சித்திரப்பாலடை. (மலை.)