ஒரு கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்வது போல, தானும் ஏற்றுக்கொண்டு இணங்கிப் போதல். ( எடுத்துக்காட்டு ) நாங்கள் வரிக்கட்ட ஒத்துக் கொண்டோம், நீ பிடிவாதம் செய்யாமல் இணங்கி, வரிக்கட்டு.
to consent, comply with union, friendship match, fit mate
, கிறேன், இணங்கினேன், வேன், இணங்க, v. n. To agree, consent, yield, comply with, to be reconciled; to acquiesce in, be agreeable to, &c., உடன்பட. அதற்கவனிணங்கவில்லை. He has not acquiesced in, or been satisfied with it.
இணங்கலர்–இணங்கார் — Enemies, பகைவர்.
இணங்கி — A lady's female friend or companion, தோழி.
Fabricius (1972)
இணங்கு — v. i.
v. i. agree, consent, submit, yield, comply, be brought over or drawn in, உடன்படு.
அதற்கு அவர் இணங்கவில்லை — he has not acquiesced in, or been satisfied with it.
இணங்கலர் — foes.
Tamil Moli Akarathi (1928)
இணங்கு (iṇaṅku)
இணங்கென்னேவல், பிசாசம்
இணங்கு (iṇaṅku)
உடன்படென்னேவல், பிசாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இணங்கு² (iṇaṅku) — noun
< இணங்கு-
Union, friendship; இணக்கம். உள்ளப்பெறாரிணங் கை யொழிவேனோ (திருப்பு. 288)
Match, fit mate; ஒப்பு. இணங்காகு முனக்கவளே (திருக்கோ. 68)
Devil; பேய். (திவா.)
இணங்கு² (iṇaṅku) — noun
Comrade; நண்பின-ன்-ள். அவனது துணை அவனது இணங்கு என்பன துணைக்கிழமை (தொல். சொல். 80, சேனா.).