இயல்

இயற்கை -ology ( the formative for all sciences and fields of study) nature

to be able to, be possible to go on foot; to move forward to be made of, constituted

Tamil Wiktionary

இயல் — பெயர்ச்சொல் (Noun)
  1. துறை
  2. இயற்கை

[object Object], [object Object]

இயல்பு இயற்கை அழகியல் வடிவியல் முக்கோணவியல் மொழியியல் ஒலிப்பியல் எழுத்தியல் சொல்லியல் பொருளியல் சொற்பிறப்பியல் மெய்யியல் தொல்லுயிரியல் சமூகவியல் மகப்பேறியல் உணவியல் கனிமவியல் கல்வெட்டியல் மனிதவியல் பாறையியல் இறையியல் வங்கியியல் புவியியல் அறிவியல் இயற்பியல் அளவையியல் மின்னியல் ஒலியியல் ஒளியியல் காந்தவியல் எந்திரவியல் இயக்கவியல் நிலையியல் பாய்ம இயக்கவியல் வெப்ப இயக்கவியல் மின்காந்தவியல் நிலைமின்னியல் மின்னோட்டவியல் அணு இயற்பியல் அணுக்கரு இயற்பியல் மட்டுவ இயற்பியல் வானியல் அண்டவியல் புவி இயற்பியல் வேதியியல் உயிரியல் நுண்ணுயிரியல் நரம்பியல் உளவியல் நோயியல் எலும்பியல் தோலியல்

Winslow (1862)

இயல் (iyal) — noun
  1. Nature, natural property or quality, குணம்
  2. Good conduct, conduct appropriate to a person's caste, rank, office, &c., ஒழுக்கம்
  3. Order, course, rule, method, ஒழுங்கு
  4. Aspect, appearance, shape, likeness, சாயல்
  5. Melody, musical harmony, இசை
  6. A chapter, section treating of a series of subjects or things in order, ஓத்து
  7. Natural and plain Tamil. (See இயற்றமிழ்.)
  8. Destiny, appointment, assignation, decree, allotment, விதி
  9. Grammar, இலக்கணம். (p.) கோவியலோம்புறுகொள்கையன். One disposed to maintain a course of conduct proper for a king
  • இயலுவமம் — A comparison of the properties of different things, பண்புவமை.
  • இயற்சீர் — The ஆசிரியவுரிச்சீர், verse–a metrical foot of four அசை. See சீர்.
  • இயற்சீர்வெண்டளை — Combination of two simple or ஆசிரியம் feet, or connection of an ஆசிரியம் foot, ending with a compound அசை, with another beginning with a simple one, or vice versa, மாமுன்னிரையும்விளமுன்னேருமொன்றிவருவது.
  • இயற்சொல் — A word in common use–in distinction from திரிசொல்–exclusively poetic usage–words understood both by the learned and unlearned.
  • இயற்பெயர் — Proper or arbitrary names, titles, terms of office, &c., இயல்பாயிடப்பட்டபெயர்; also names of things indicating a whole–as distinguished from parts. 2. Simple or original names –as distinguished from ஆகுபெயர் or derived names, செம்பொருளையுணர்த்தும்பெயர்.
  • இயற்றமிழ் — Natural Tamil, whether common or poetic–as distinguished from இசைத்தமிழ், or Tamil adapted to music, and நாடகத்தமிழ் or dramatic Tamil, in both of which various changes occur in combination, construction, &c., முத்தமிழினொன்று.
இயல் (iyal)
  1. –இயலு, கிறது, இயன்றது, இயலும், இயல, v. n. To be able, be possible, கூடியதாயிருக்க
  2. (p.) To be incident to, be exposed, பொருந்த
  3. To agree, suit, be adapted to, இசைய
  4. To be done, performed, made or composed, ஆக
  5. To be destined, decreed, allotted, விதிக்கப்பட
  6. To happen, pass, to be in vogue, நடக்க.–Note. This word is often changed to ஏலு both in poetry and in the colloquial language. இயல்வதுகரவேல். Do not refrain from doing what is in your power. வெயிலியல்வெஞ்சுரம். The parched desert exposed to the scorching beams of the sun. தச்சனாலியன்றவீடு. A house made by the carpenter. ஏன்னாலியலாது. I am not able, I cannot do it

Fabricius (1972)

இயல் — noun
  1. nature, quality, குணம்
  2. good conduct, order, ஒழுக்கம்
  3. chapter, section, ஒத்து
  4. likeness. ஒப்பு
  5. literary Tamil
  • இயற்றமிழ் — natural plain Tamil (5).
  • இயற்சொல்–திரிசொல் — words well known in common use, colloquial words (x .)
  • இயல்வேதம் — natural religion.
  • இயல்வாதி — (christ), a naturalist.
  • பதியியல் — theology.
  • உலகியல் — cosmology.
இயல் — v. i.
  1. "church History" by Rev. S. Zehme page 184. , இயலு, (எல், ஏலு, coll.) I. v. i. be possible, be able, கூடியதாயிரு
  2. be done; or made or performed, ஆகு
  3. be adopted, suited, பொருந்து (see ஏல் I and ஏல் 5)
  • தச்சனாலியன்ற வீடு — a house made by the carpenter.
  • இயலாதவன் — an unfit or incompetent man.
  • இயலாமை — incompetency, impossibility.
  • இயல்பு–இயல்வு — ability.
  • இயன்றகாரியம் — a thing that is possible.
  • இயன்றமட்டும்–மாத்திரம்–ஏன்றமட்டும் — as much as possible.
இயல் — noun
  1. rivalry (as in) இயலாடுதல், competing.

Tamil Moli Akarathi (1928)

இயல் (iyal)
  1. ஆகமம், இயற்கை, இசை, இய லென்னேவல், இயற்றமிழ், இலக்க ணம், ஒழுங்கு, ஒத்து, குணம், சா யல், நடை, பகுதி
இயல் (iyal)
  1. இசை, இயற்றமிழ், ஒத்து, குணம் சாயல், நடை, பொருந்தென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இயல்² (iyal) — noun
  1. < இயல்-
  2. Nature, property, quality; தன்மை. ஈண்டுசெலன் மரபிற் றன் னியல் வழாஅது (புறநா. 25, 2)
  3. [M. iyal.] Fitness, worth; தகுதி. இயலன் றெனக்கிற்றிலை (திருக்கோ. 240)
  4. Delicacy, softness, tenderness; சுகுமாரதை. (சூடா.)
  5. Good conduct; conduct appropriate to one's caste, rank or office; ஒழுக் கம். (சூடா.)
  6. Affection continued from birth to birth; உழவலன்பு. தொல்லியல் வழாமை (கலித். 2)
  7. Pace; gait, as of a horse; செலவு. புள்ளியற் கலிமா (தொல். பொ. 194)
  8. Likeness, similitude; ஒப்பு. மின்னியற்சடை மாதவர் (திருவிளை. குண்டோ. 2)
  9. Literary Tamil. See இயற்றமிழ். (பிங்.)
  10. Treatise, esp. the Āgama works; நூல். இயலோதேல் (சைவச. பொது. 346)
  11. Section of a work containing chapters treating of a series of subjects or things in order; chapter; நூலின்பகுதி. அரசியல் (குறள்)
  12. Chanting in a chorus the Tivya-p-pirapantam constituting the Vaiṣṇava sacred hymns; திவ்யப்பிரபந்தத்தைக் கோஷ்டியாக நின்று ஓதுகை
இயல்⁴ (iyal) — noun
  1. Rivalry, competition; மாறுபாடு. இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய (தேவா. 979, 9).
இயல்¹ (iyal) — noun
  1. < இயல்-
  2. Resemblance; சாயல். (நாநார்த்த.)
  3. Greatness; பெரு மை. இது தமிழ்முனிவன் வைகு மியறகு குன்றம் (கம்பரா. மீட்சிப். 174)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இயல்
  1. தன்மை
  2. தகுதி
  3. சுகுமாரதை
  4. ஒழுக்கம்
  5. உழுவலன்பு
  6. செலவு
  7. ஒப்பு
  8. இயற்றமிழ்
  9. இலக்கணம்
  10. நரல்
  11. நூலின் பகுதி
  12. திவ்வியப் பிரபந்தத்தைக் குழுவாக நின்று ஓதுகை
  13. மாறுபாடு
  14. சாயல்
  15. பெருமை