எண்
கணக்கிட பயன்படுத்தும் உருபு அல்லது குறியீடு. அளவீடு எட்டு(1813550 )
number mathematics calculation, computation
Fabricius (1972)
எண் — noun
- thought, estimation, எண்ணம்
- number, enumeration, இலக்கம்
- arithmetic, கணிதம்
- deliberation, counsel, ஆலோசனை
- knowledge, அறிவு
- mind. மனம்
- astronomy, astrology, சோதிட நூல்
- logic, தர்க்கம்
- fineness of gold or silver, மாற்று
- esteem, honour, மதிப்பு
- bound, limit, வரையறை
- எண்ணுமெழுத்தும் கண்ணெனத் தகும் — arithmetic and grammar may be regarded as eyes.
- எண்ணுக்குள் அடங்காதது — that which is innumerable, or incomprehensible.
- எண் கூட்டல் — addition.
- எண் சுவடி — the multiplication table.
- எண் பெருக்கல் — multiplication.
- எண்ணிலா–எண்ணிறந்த — innumerable.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எண்¹ (eṇ) — noun
- Calculation, computation; கணக்கிடுகை. (சீவக. 2353. உரை.)
- Thought; imagination; intention; எண்ணம். எண்பிறக் கொழிய விறந்தோய் நின்னடி (மணி. 11, 65)
- Deliberation; counsel; ஆலோ சனை. எண்சேர்ந்த நெஞ்சத்து (குறள், 910)
- Knowledge; அறிவு. தொக்கிருந் தெண்ணினா னெண் ணப்படும் (நான்மணி. 77)
- Mind; மனம். கலைவ லோ ரெண்சுழன்று (பாரத. நிவாத. 125)
- Esteem, honour, respect; மதிப்பு. வீரனை யெண்பெறக் கொணர்வாயென (பாரத. அருச். தவ. 168)
- Number; இலக்கம். (சூடா.)
- Mathematics; கணிதம். எண்ணென்ப வேனை யெழுத்தென்ப (குறள், 392)
- Astronomy, including astrology; சோதிடநூல். கற்பங்கை சந்தங்கா லெண்கண் (மணி. 27, 100)
- Bound, limit; வரையறை. (தொல். எழுத். 308, உரை.)
- Logic; தர்க்கம். ஏரணங்காணென்பர் எண்ணர் (திருக்கோ. நூற்சிறப். உரை)
- Fineness of gold or silver as tested by the touchstone; மாற்று. எண்ணில்பொன் (சீவக. 72)
- Mantras; மந்திரம். பல்பச்சிலையா லெண்ணுண்டு சாத்த (பட்டினத். திருப்பா. பொது, 5)
- One of the component parts of the kali verse. See அம்போதரங்கம். (தொல். பொ. 452, உரை.)
எண்² (eṇ) — noun
- See எள்¹. எண்ணெ னுணவுப்பெயர் (தொல். எழுத். 308).
எண்¹ (eṇ) — noun
- Lowness; எளிமை. (அக. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எண்
- எண்ணிக்கை
- கணக்கிடுதல்
- எண்ணம்
- ஆலோசனை: அறிவு
- மனம்
- கவலை
- மதிப்பு
- இலக்கம்
- கணக்கு
- சோதிடநூல்
- இலக்கியம்
- வரையறை
- தருக்கம்
- மாற்று
- மந்திரம்
- அம்போதரங்கம்
- எளிமை
- வலி
- எள்