ஒளி

கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்; ஒளிர்வு வெளிச்சம்

light, brightness; splendour; brilliancy lamp, light fame; celebrity; renown

Tamil Wiktionary

ஒளி — பெயர்ச்சொல் (Noun)
  1. மறைத்து வை; எளிதாகக் கண்டுபிடிக்க இயலாதவாறு மறைத்து வை

[object Object]

ஒளிவு ஒளிதல் ஒளிப்பு ஒளித்தல் காணொளி கண்ணொளி ஒலி ஒழி

Winslow (1862)

ஒளி (oḷi) — noun
  1. A hiding place, a lurking place, a covert, ஒளிப்பிடம்
  2. A screen behind which a person hides himself, or a cover carried before a fowler to conceal him from the view of birds, வேட்டைக்காரர்பதிவிருக்குமறைப்பு
  3. Light as shining in, issuing from, or reflected by a luminous body, not as the medium of sight; ray, pencil, brightness, splendor, coruscation, brilliancy, reflection, luminousness, a luminous body, பிரகாசம்
  4. The sun, சூரியன்
  5. The moon, சந்திரன்
  6. Fire, நெருப்பு
  7. Fame, celebrity, renown, புகழ்
  8. A star, விண்மீன்
  9. Flame, சுவாலை
  10. Sun-shine, வெயில்
  11. The apple of the eye, கண்மணி
  12. A lamp, விளக்கு
  13. Object of vision, நேத்திரேந்திரியவிடயம். (See அணு.)
  14. Illumination of mind, intelligence, அறிவு
  15. God, கடவுள்
  16. A decoy animal, பார்வைமிருகம். மன்னாவாமனனர்க்கொளி. (If kings swerve from justice) their renown cannot last
  • ஒளிகால — To issue out as light.
  • ஒளிக்கடல் — Teeth, பல், (M. Dic.)
  • ஒளிசெய்ய — To give light, illuminate.
  • ஒளிபடர — To spread as light.
  • ஒளிப்பிழம்பு — Flame, flame of alamp, அக்கினிச்சுவாலை.
  • ஒளிமங்க–ஒளிமழுங்க — To grow dim–as light, splendor, lustre, ஒளிகெட.
ஒளி (oḷi) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To hide, conceal, put out of sight, secret, cloak, மறைக்க
  2. To keep a thing unrevealed, to disguise, conceal in the mind, மனதிலடக்க
  3. v. n. To hide, steal away, elope, flee into concealment, lurk unseen, desert, பதுங்கியிருக்க. காரியத்தைச்சொல்லாமலொளித்துப்போட்டான். . . . He has concealed the matter
  4. He has not told the secret
  • ஒளித்துக்கொள்ள — To conceal one's self, to hide, மறைந்துகொள்ள. 2. To conceal a thing, மறைத்துக்கொள்ள.
  • ஒளித்துத்திரிய — To stray, wander in private, in a state of concealment.
  • ஒளித்துவிளையாட — To play at hide and seek, கண்பொத்திவிளையாட. மோதிரமொளித்துவிளையாடல். The game or play of hiding a ring.
  • ஒளிப்பு — Hiding, concealing, concealment, lurking, ஒளிக்கை. 2. Absconding, slinking or stealing away, escaping, desertion, பதுங்குகை. 3. Secret, covert, disguise, மறைவு. ஒளிப்புமறைப்புப்பண்ணாமற்சொல்லு. Tell all, conceal nothing.
  • ஒளிப்பாகச்செய்ய — To practise vice secretly–commonly in concert.
  • ஒளிப்பிடம் — A hiding place, an ambush, a covert, மறைவிடம்.

Fabricius (1972)

ஒளி — noun
  1. light, splendour, பிரகாசம்
  2. hiding place, மறைவிடம்
  3. screen for the fowler to catch birds
  4. fame. கியாதி
  5. a lamp, விளக்கு
  6. the 18th lunar asterism, கேட்டை
  7. distinction, excellence, மேன்மை
  8. sun-shine, வெய்யல்
  9. lightning, மின்
  10. fire, நெருப்பு
  11. a star, நட்சத்திரம்
  • ஒளிசித்திரப் படம் — magic lantern slides.
  • ஒளிபடர — to spread as light.
  • ஒளிமங்க–மழுங்க — to grow dim.
  • ஒளிவீச–விட — to shine to emit light; to cast rays.
  • ஒளிவைத்துப் பிடிக்க — to catch the game by setting a snare.
ஒளி — v. i.
  1. v. i. hide, steal, away, flee into concealment, மறைந்துகொள்
  2. fail, தவிர்
ஒளி — v. t.
  1. v. t. (caus. of ஒளி II) hide, conceal, மறை VI; v. i. abscond, மறை II.
  • ஒளித்திருக்க — to lurk unseen.
  • ஒளித்துக்கொள்ள — to conceal or hide one-self.
  • ஒளித்துக்கொண்டு திரிய — to abscond, to stray, to wander in private, in a state of incognito.
  • ஒளித்து விளையாட — to play at, play at hide-and-seek.
  • ஒளிப்பிடம்–ஒளிவு — a hiding place, an ambush, .

Tamil Moli Akarathi (1928)

ஒளி (oḷi)
  1. அறிவு,ஒளிப்பிடம்,ஒளியென்னே வல், கடவுள்,கண்மணி,சந்திரன், சுவாலை, சூரியன்,நெருப்பு, பார்வை மிருகம், பிரபை, புகழ், விண்மீன், விளக்கு, வெயில்
ஒளி (oḷi)
  1. அரி, ஆதபம், இலக்கம், ஏல், கடி, கதிர், கரம், காந்தி, கானல், கிரணம், கிளர், கேழ், சவி, சுடர், செடி, சோ தி, தாமம், துணி, துளக்கம், தேசி கம், தேசு, நகை, நிலவு, நிழல், நீமம், மின்வாமம், வாள், விரியல், வில், வெமில், மிகுமாளி-சுப்பிரம்
ஒளி (oḷi)
  1. ஒளிப்பிடம், ஒளியென்னேவல், சந்திரன், சூரியன், நெருப்பு, புகழ், விண்மீன், விளக்கு, வெயில்
ஒளி (oḷi)
  1. ஒழுங்கு, யானைக்கூட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒளி¹ (oḷi) — noun
  1. Light, brightness; splendour; brilliancy; காந்தி. (திவா.)
  2. Sun; சூரியன். (பிங்.)
  3. Moon; சந்திரன். (பிங்.)
  4. Star; நட்சத்திரம். (திவா.)
  5. The 18th nakṣatra; கேட்டை. (பிங்.)
  6. Fire; நெருப்பு. (பிங்.)
  7. Scorching; எரிக்குந் தன்மை. வெஞ்சுட ரொளியுநீ (பரிபா. 3, 67)
  8. Lightning; மின்னல். (பிங்.)
  9. Sunshine; வெயில். (பிங்.)
  10. Lamp, light; விளக்கு. உடையானாம் வேந்தர்க் கொளி (குறள், 390)
  11. Sense of sight, one of aim-pulam; கட்புலன். சுவையொளி (குறள், 27)
  12. Apple of the eye; கண்மணி. (W.)
  13. Conspicuousness, distinction, excellence; பெருமை. நீற்றி னொளிதழைப்ப (பெரியபு. திருஞான. 1019)
  14. Fame; celebrity; renown; புகழ். ஒளியு மாற்றலு மோம்பா வீகையும் (பு. வெ. 9, 1)
  15. Artificial beauty; செயற்கையழகு. ஒண்மையு நிரையு மோங்கிய வொளியும் (பெருங். உஞ்சைக். 34, 151)
  16. Divinity of kingship; அரசனது கடவுட்டன்மை. மன்னவன்றன்னொளி . . . வையகங்காக்குமால் (சீவக. 248)
  17. Illumination of mind; wisdom; ஞானம். தனையறிந்தோர்க் கொளியுருவாய் (ஞானவா. தாசூர. 6)
  18. Eulogy in verse; சொன்மாலை. (பிங்.)
ஒளி⁴ (oḷi) — noun
  1. Hiding; withdrawing from view; மறைகை. ஒளிகொள் காரண முன்னாதோரே (ஞானா. 29, 13)
  2. Lurking place; covert; மறைவிடம். (பிங்.)
  3. Screen, a cover for a fowler; வேட்டைக்காரர் பதிவிருக்கு மறைப்பு
  4. Decoy animal; பார்வைமிருகம். ஒளி வைத்துப் பிடித்தான். (W.)
ஒளி (oḷi) — noun
  1. A quality of verse, one of pāṭaṟ-payaṉ; பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.)

IndoWordNet

ஒளி — noun
  1. வெளிச்சம்
ஒளி — verb
  1. பயம், வெட்கத்தின் காரணமாக மறைந்துக்கொள்வது

பளபளப்பான மறை பதுங்கு