ஓரம்
Tamil Wiktionary
ஓரம் — பெயர்ச்சொல் (Noun)
ஓர் + அம் ஓரம் - விளிம்பு. (எ.கா) - சாலை ஓரத்தில் நடப்பது பாதுகாப்பானது ஆகும்.
[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]
Winslow (1862)
ஓரம் (ōram) — noun
Side, edge, border, margin, brim, brink, bank, shore, விளிம்பு Partiality in speaking, pleading, &c., பட்சவாதம் A kind of salt of burning and acrid taste, சத்திசாரம்
ஓரக்கண் — A squint, சாய்வான பார்வை. ஓரக்கண்ணன் — A squint-eyed person. 2. (fig.) A partial man. ஓரக்கண்ணாய்ப்பார்த்தல் — Squinting. 2. Looking partially. ஓரக்காரன் — A biased, partial person. ஓரம்பேசுதல் — Speaking so as to please, speaking with partiality. ஓரஞ்சொல்லேல். Speak not partially. வழக்கோரம்பேசேல். Pass not partial judgment. மண்ணிலிருந்துவழக்கோரஞ்சொல்லாதே. . . . Whilst on earth incline not to partiality in judgment. ஓரவஞ்சனை — Great or criminal partiality.
Fabricius (1972)
ஓரம் — noun
extremity, margin, edge, side, the border of anything; விளிம்பு shore, strand, கரை partiality in speaking etc. பட்சவாதம் pudenda muliebre, பெண்குறி
வழக்கோரஞ் சொல்ல — to pass partial judgment. ஓரக்கண் — squint eye. ஓரக்கண்ணன் — a squint-eyed person; a partial man. ஓரம் பேச — to speak partially. ஓரவஞ்சனை பண்ண — to act with partiality. ஆற்றோரம் — the river-side, the bank of a river.
Tamil Moli Akarathi (1928)
ஓரம் (ōram)
காரசாரம், சந்திச்சாரம், பக்கபா தம், பக்கம், விளிம்பு
ஓரம் (ōram)
பக்கவாதம், விளிம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஓரம்¹ (ōram) — noun
perh. ஓர் + அகம். [T. K. ōra, M. ōram.] Edge, border, margin, brim, brink; விளிம்பு Partiality in speaking, pleading; பட்சபாதம். மன்றோரஞ் சொன்னார் மனை (நல்வழி, 23) Pudenda muliebre; பெண்குறி. (J.)
ஓரம்² (ōram) — noun
An acid salt; சத்திசாரம். (மூ. அ.)
ஓரம் (ōram) — noun
cf. வாரம். Help, aid, support; சகாயம். (அக. நி.)
சொல் அகராதி
சொல் தேடு