கரை

ஆற்றின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு - dissolve, bank, as in "river bank" கரை, காகம் கரைதல்

shore bank bound, limit

Tamil Wiktionary

கரை
  1. ஆற்றின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு

[object Object]

கரைதல் கரைத்தல் கரைப்பு கரைதிறன் கரையோரம் கரையேறு கரையேற்று ஆற்றங்கரை குளக்கரை குளத்தங்கரை ஏரிக்கரை அணைக்கரை கடற்கரை கறை கறையான்

Winslow (1862)

கரை (karai) — noun
  1. The natural bank, or shore of a sea, river, tank, &c., கடல்முதலியவற்றின் கரை
  2. Border, extremity of a field, &c., வயல்வரம்பு
  3. Border, edge of a cloth, &c., சீலையின்விளிம்பு
  4. Boundary, limit, ஏல்லை. (தத். 100.)
  5. End, முடிவு
  6. (p.) Word, speech, வார்த்தை
  • கரைகடக்க — To overflow its bank–used of a tank or river.
  • கரைகட்ட — To make a bank. 2. To make the selvedge of cloth.
  • கரைகட்டுப்பட்டாடை — A silk cloths for women with colored borders.
  • கரைகாண — To see the end, to reach the destined port. 2. To understand a book, science, &c., thoroughly.
  • கரைகண்டவன் — One who is skilled in business.
  • கரைகாணாதது — That which is inexplorable, incomprehensible, unascertainable.
கரை (karai) — noun
  1. , கிறது, ந்தது, யும், ய v. n. To dissolve, melt–as salt, sugar, &c.; to be macerated in water, reduced to a liquid or slime; to relax in consistency by moisture, கரைந்துபோக
  2. To waste away as earth by rain, &c., to be washed away, மண்கரைய
  3. To be emaciated–as the body, இளைக்க
  4. To sound, make a noise, பெரிதொலிக்க
  5. To weep, cry-as a child, whine, cry aloud, அழ
  6. To call, shout, அழைக்க
  7. To tell, speak, சொல்ல
  8. To be over-ripe –as fruits, to be well ripe, become mellow, பழம்பதனழிய. அவன்கையிலிருந்தபணமெல்லாங்கரைந்துபோயிற்று. The money he had is all wasted away. கனமழைபெய்ததினாலேசுவரெல்லாங்கரைந்து போயிற்று. The whole wall has been washed away by the heavy rain. மகன்பட்டதைக்கண்டுமனங்கரைந்துநொந்தான்..... When he saw the sufferings of his son, he pined away through grief. கட்டிகரைந்துபோயிற்று. The tumor is reduced by external applications. ஈறுகரைகின்றது. The gum is wasting away
  • கரைகன்று — A slink calf.
  • கரைகுட்டி — A slink production.
  • கரைந்தபழம் — A mellow ripe fruit.
  • கரையப்பாடம்பண்ண — To learn–as a lesson, &c., perfectly.
  • சரீரங்கரைந்துபோக — To waste –as the body, to be emaciated.
  • செல்வங்கரைந்துபோக — To waste–as riches.
கரை (karai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. to dissolve, melt solubles, by water, damp, &c., to reduce to a liquid or slimy state, to macerate, liquify, dilute, உருக்க
  2. To wash away by water, கரையச்செய்ய
  3. To reduce a tumor, &c., by drawing it, கட்டியைக்கரைக்க
  4. To melt the heart, cause commiseration, மனதையுருக்க
  • கூட்டுக்கரைக்க — To dissolve a lump of ground spices for curry.
  • புளிக்கரைக்க — To dissolve tamarind fruit for curry.
  • கரைத்தல் — Indistinct or inarticulate sound, a buzzing, ஏழுத்தில்லா வோசை. 2. Sound, சொல்லாலெழுமொலி.

Fabricius (1972)

கரை — noun
  1. border, boundary, ஏல்லை
  2. bank, sea-shore, river-side, ஓரம்
  3. border of a field, வரப்பு
  4. border of a cloth, விளிம்பு
  5. end, முடிவு
  6. side, proximity, usually in compounds as in வழிக்கரை, அடுப்பங்கரை, பக்கம்
  7. place, இடம்
  • கரை கடக்க — to overflow.
  • கரைகாணாப் பேரொளி — the infinitely great light, God.
  • கரைக்கட்டுப் பட்டாடை — silk cloths for women with coloured borders.
  • கரைக் காற்று — land breeze; wind blowing from the land or along the sea-shore.
  • கரைதுறை — landing place, sea-coast; the end.
  • கரை பிடிக்க — to sight land, to come into a port.
கரை — v. i.
  1. v. i. dissolve, melt as sugar or salt in water, கரைந்துபோ
  2. waste away, languish, இளை
  3. pine away with grief, சோரு
  4. weep, cry as a child, அழு
  5. pity, இரங்கு
  6. be over-ripe, பதனழி
  7. linger, delay, தாமதி
  8. sound, roar, ஒலி; v. t. call, invite, அழை
  9. tell, சொல்லு
  • பணமெல்லாம் கரைந்து போயிற்று — all the money has been wasted.
  • தாய் மனம் கரைந்து நொந்தாள் — the mother was overcome with distressing emotions.
  • சரீரம் கரைந்து போகிறது — the body is reduced or emaciated.
  • காக்கை கரைகிறது — the crow croaks
  • கரைகுட்டி–கன்று — a slink production.
  • கரைவு — dissolving; 2. tenderness of mind slope, சரிவு.
கரை — v. t.
  1. v. t. take as a load, கொண்டுபோ.

Tamil Moli Akarathi (1928)

கரை (karai)
  1. அருகு, ஏல்லை, கரையென்னேவ ல், கானல், முடிவுவார்த்தை
கரை (karai)
  1. ஏல்லை, கரையென்னேவல், சொ ல், முடிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கரை⁵ (karai) — noun
  1. Shore of a sea; கடற்கரை. நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப (நாலடி. 224)
  2. Bank, bund, as of a tank; நீர்க்கரை. யமுனைக் சரைக் கென்னை யுய்த்திடுமின் (திவ். நாய்ச்சி. 12, 4)
  3. Bound, limit; எல்லை. கல்வி கரையில (நாலடி, 135)
  4. Ridge of a field; செய்வரம்பு
  5. Border of a cloth; சீலைவிளிம்பு. பூங்கரை நீலம் (கலித். 111)
  6. Side, proximity, usu. in compounds, as அடுப்பங்கரை, வழிக்கரை; பக்கம்
  7. Place; இடம். (சூடா.)
  8. Word; வார்த்தை. (நன். 458.)
  9. Large division of co-parcenary land in a village consisting of dry and wet lands and garden fields; கிராமப் பெரும்பங்கு. (S. I. I. ii, 114: G. S. A. D. i, 288.)
கரை (karai) — noun
  1. A species of white cedar; கரைவிளங்கு. (L.)

IndoWordNet

கரை — noun
  1. ஒன்றின் விளிம்பு.
கரை — noun
  1. நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.
கரை — noun
  1. கிணற்றின் மேலேயுள்ள மேடை

ஓரம் நுனி முனை அக்கரை மறுகரை கடைக்கண் கூர்மை இடம் ஸ்தாபனம் படித்துறை சரிவான கரை சேறு அசறு குழம்பு சகதி செய்யல் சேதகம் மகோரா விளிம்பு மேடை