கமலம்

Lotus

Winslow (1862)

கமலம் (kamalam) — noun
  1. A lotus, தாமரை
  2. Water, நீர். (p.)
  3. A kind of salver made in imitation of a full-blown lotus, ஓர்வகைத் தட்டு. Wils. p. 190. KAMALA
  • கமலக்கண்ணன் — Vishnu, the lotus-eyed, விஷ்ணு.
  • கமலயோனி — Brahma, the lotus- born, பிரமன்.
  • கமலவூர்தி — Argha whose throne is the lotus, அருகன்.
  • கமலாகாரம் — . The figure of a lotus delineated on a jewel, salver, &c., தாமரை வடிவம்.
  • கமலாக்கினி — A fire of moderate heat spread out like the lotus for preparing medicines.
  • கமலாசனன் — Brahma, பிரமன். Wils. p. 190. KAMALASANA. 2. Argha, அருகன்.
கமலம் (kamalam)
  1. A small flat diamond, வைரத்தரிப்பு. (Colloq.)

Fabricius (1972)

கமலம் — noun
  1. lotus, தாமரை
  2. a salver for presenting betel
  3. water, நீர்
  4. faceted diamond, பட்டை தீர்ந்த வயிரம்
  • கமலக் கண்ணன் — Vishnu, the lotus-eyed.
  • கமலகுண்டலமாய்–தலைகீழாய் — head foremost, up- side down, .
  • கமலத்தேவி–கமலவல்லி — Lakshmi; also .
  • கமலத்தோன் — Brahma.
  • கமலயோனி — Brahma.
  • கமலாகாரம் — the shape of the lotus.

Tamil Moli Akarathi (1928)

கமலம் (kamalam)
  1. ஒருவகைத்தட்டு, தாமரை, நீர், வைரத்தரிப்பு
கமலம் (kamalam)
  1. தாமரை, நீர்
கமலம் (kamalam)
  1. அழுக்கு

IndoWordNet

கமலம் — noun
  1. தாமரை, கமலம், பங்கஜம்
கமலம் — noun
  1. ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.
கமலம் — noun
  1. வெள்ளைத் தாமரையின் செடி

தாமரை பங்கஜம் பூ மலர் புஷ்பம் சிவப்புத் தாமரை செந்தாமரை சிவப்பு பங்கஜம் சிவப்பு பங்கயம் சிவப்பு கமலம் செங்கமலம் வெண்தாமரை வெள்ளைத்தாமரை தாமரைப்பூ அம்புஜம் அம்புயம் பங்கயம் பதுமம் புண்டரிகம் நீர்த்தாவரம் நீர்வாழ் தாவரம் நீலதாமரை கோகாபெரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கமலம்¹ (kamalam) — noun
  1. < kamala
  2. Lotus; தாமரை. (திவா.)
  3. Water; நீர். (திவா.)
  4. A large number; ஒரு பேரெண். கமலமும் வெள்ளமும் (பரிபா. 2, 14)
  5. Circular salver, like a full-blown lotus; ஒருவகைத்தட்டு. Colloq
  6. Faceted diamond; பட்டைதீர்ந்த வயிரம்
கமலம்² (kamalam) — noun
  1. Cow that has lost its calf, but which nevertheless gives milk by other inducements; கன்றிழந்த பசு. Madr.
கமலம் (kamalam) — noun
  1. cf. கம்பலம். Scarlet-cloth; செம்படாம். (அக. நி.).