குற்றம்

crime

Winslow (1862)

குற்றம் (kuṟṟam) — noun
  1. Fault; moral or physical imperfection, blemish, defect, deformity. பிழை
  2. Crime, misdemeanor, guilt, தீங்கு
  3. Impurity; ceremonial or moral defilement–as cause of offence to the deity, of blight to plants, &c., சூதகம்
  4. Reproach, stigma, charge, accusation, blame, குறை
  5. Amercement, mulct, fine, அபராதம்
  6. (சது.) Sickness, நோய்
  • முக்குற்றம் — The three kinds of evil, incident to the soul in connexion with births, as darkening the understanding and leading to sin. 1. காமம், sexual desire, lust. 2. வெகுளி, anger. 3. மயக்கம், bewilderment, mental illusion.
  • யாக்கைக்குற்றம் — The five defects of the body; 1. கொட்டாவி, yawning. 2. நெட்டை, snapping the joints. 3. குறுகுறுப்பு, snoring. 4. கூன்கிடை, lying shrunk up. 5. நட்டுவிழல், nodding.
  • அஷ்டகுற்றம் — The eight imperfections of creatures. 1. ஞானாவரணியம், ignorance, or want of wisdom. 2. தரிசனாவரணியம், defective perception. 3. வேதநீயம், comprehensibleness. 4. மோகநீயம். subjection to the passions. 5. ஆயு, age, limited duration. 6. நாமம், having a name or describableness. 7. கோத்திரம், parentage, descent. 8. அந்தராயம். liability to impediments and accidents. The opposite of these are peculiar to the deity. See ஏண்குணம் under குணம்.
  • நூற்குற்றம் — The ten faults or defects in a literary composition. 1. குன்றக்கூறல், a partial statement–saying too little. 2. மிகைபடக்கூறல், redundancy–saying too much. 3. கூறியதுகூறல், tautology–repetition. 4. மாறுகொளக்கூறல், inconsistency–contradictory statements. 5. வழூஉச்சொற்புணர்த்தல், the employment of improper or inappropriate words and terms. 6. மயங்கவைத்தல், obscurity, mystification. 7. வெற்றெனத்தொடுத்தல், emptiness, barrenness. 8.மற்றொன்றுவிரித்தல், digression–introducing another subject. 9. சென்றுதேய்ந்திறுதல், gradual loss of vigor and tone. 10. நின்றுபயனின்மை, useless statements; verbosity; bombast. இமைக்குற்றங் கண்ணுக்குத்தெரியாது. The eye does not see the defect of the eye- lashes; i. e. one's own errors, and those of his family and friends, are unnoticed.
  • குற்றங்கடிய — To avoid guilt.
  • குற்றங்களைய — To free from errors.

Fabricius (1972)

குற்றம் — noun
  1. fault, பிழை
  2. guilt, crime, தீங்கு
  3. stigma, பழி
  4. bodily deformity, அங்கக்குறை
  5. penalty, fine, அபராதம்
  • குற்றங்காண — to find fault, to pick holes.
  • குற்றங்குறைகள் — grievances.
  • குற்றச்சாட்டு–ச்சாட்டம் — accusation.
  • குற்றஞ்சாட்ட–சுமத்த — to accuse; to incriminate.
  • குற்றஞ் சுமக்க — to be guilty.
  • அவன்மேல் குற்றஞ் சுமந்தது — he has been found guilty.

Tamil Moli Akarathi (1928)

குற்றம் (kuṟṟam)
  1. அபராதம், குறை, தவறு, நோ ய்,பழுது, பிழை
குற்றம் (kuṟṟam)
  1. அரி, அரிப்பு, அரில், ஆசு, இழி வு, ஏசு, ஏதம், கசடு, கடவை, கரில, கழிப்பு, களங்கம், களை, கறை, காசு குறை, கொழிப்பு, கோது, சழக்கு, செயிர், தட்டு, தப்பு, தவறு, தீங்கு, தீது, துகள், தோம், நவை, நறை, பழி பழுது, பிழை, புகர், புரை, போக்கு மறு, மாசு, அவமானம், மிறைமை, வசை, வடு, விண்டு, விடல், பூதி
குற்றம் (kuṟṟam)
  1. 10- குன்றக்கூறல், மிகபடக்கூற ல், கூறியதுகூறல், மாறுகோளக் கூ றல், வெற்றெனத் தொடுத்தல், மற் றொன்றுவிரித்தல்
  2. வழூ உச்சொற் புணர்த்தல், மயங்கவைத்தல் சென்று தேய்ந்திறுதல், பயனின்மை
குற்றம் (kuṟṟam)
  1. 3- காமம், வெகுளி, மயக்கம்
குற்றம் (kuṟṟam)
  1. 5- ஞானவாணீயம், தரியனாவர ணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயு காமம், கோதாரம், அந்தராயம்

IndoWordNet

குற்றம் — noun
  1. சட்டத்திற்கு புறம்பான செயல்.
குற்றம் — noun
  1. பாவம் செய்தவர்
குற்றம் — noun
  1. தவறு மற்றும் பிழை
குற்றம் — noun
  1. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காரியம்

சட்டவிரோதமான காரியம் தீயச்செயல் பாவச்செயல் கெட்டசெயல் முறையற்றசெயல் ஒழுக்கங்கெட்டசெயல் முறைகேடானசெயல் தீச்செயல் தீமைச்செயல் உபத்திரவச்செயல் அபச்சாரச்செயல் துர்செயல் துஷ்டசெயல் குற்றச்செயல் கொடுஞ்செயல் தவறானச்செயல் இன்னாச்செயல் பொல்லாதச்செயல் அபகரணச்செயல் தீயொழுக்கச்செயல் அபகாரச்செயல் அபத்தச்செயல் அறியாத குற்றம் அறியாத பிழை அறியாத தவறு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குற்றம்
  1. பிழை
  2. பழி
  3. துன்பம்
  4. உடற்குறை
  5. தீங்கு
  6. அபராதம்
  7. தீட்டு

Tamil Wiktionary

குற்றம்

குற்றச்சாட்டு குற்றவாளி குற்றவியல் குற்றப்பத்திரிகை போர்க்குற்றம் கொலைக்குற்றம் சொற்குற்றம் பொருட்குற்றம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குற்றம் (kuṟṟam) — noun
  1. prob. குறு-மை. [T. korata, K. korate, M. kuṟṟam.]
  2. Fault, moral or physical blemish, defect, flaw, error; பிழை. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பின் (குறள், 190)
  3. Reproach, stigma, blame; பழி. குற்றமின் முனிவரும் (கந்தபு. வரைபுனை. 218)
  4. Pain, distress; துன்பம். குடும்பத்தைக் குற்றமறைப் பான் (குறள், 1029)
  5. Bodily deformity; அங்கக் குறை. உறுப்புக்குற்ற முள்ளவன்
  6. Crime, offence; தீங்கு. கோடாதவேதனுக் கியான்செய்த குற்றமென் (கந்தரலங். 76)
  7. Impurity, ceremonial or moral defilement, as cause of offence to the deity, of blight to plants; தெய்வகோபமுதலியவற்றிற்குக் காரணமான தீட்டு. (W.)
  8. Penalty, mulct, fine; அபராதம். குற்றமிறுத்தல். (W.)