கையூட்டு

Manual

Tamil Wiktionary

கையூட்டு
  1. இலஞ்சம்
  2. கையூட்டு ஊழலின் ஒரு வடிவம் ஆகும். வாங்குபவர் தனது கடமைகளுக்குப் பொருத்தமில்லாத வகையில், அல்லது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்காகப் பணம் அல்லது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதை இது குறிக்கும்
  3. பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள அலுவலர் அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு ஆகும்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கையூட்டு (kai-y-ūṭṭu) — noun
  1. +. Bribe; லஞ்சம். எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் (சோழவமி. 53).

IndoWordNet

கையூட்டு — noun
  1. தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்
கையூட்டு — noun
  1. ஒருவரை திருப்தி அல்லது மகிழ்வூட்டுவதற்காக கொடுக்கப்படும் பணம்
கையூட்டு — noun
  1. தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள் கையூட்டு
கையூட்டு — noun
  1. ஒருவருக்கு ஏதாவது கொடுத்து அவரை தனக்கு சாதகமாக்கிக் கொடுக்கும் செயல்

லஞ்சம் பொருள் இலஞ்சம் சொத்து வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கையூட்டு
  1. இலஞ்சம்