சாதி

மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு ஜாதிமல்லி பிறப்பு

caste, jati to attain, accomplish

Tamil Wiktionary

சாதி — பெயர்ச்சொல் (Noun)
  1. மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு
  2. ஜாதிமல்லி
  3. கள்
  4. குலம்
  5. பிறப்பு
  6. ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை
  7. இனம்
  8. தன்மையிற் சிறந்தது
  9. திரள்
  10. சாதிமல்லிகை
  11. சிறு சண்பகம்
  12. சாதிக்காய்
  13. தாளப்பிரமாணம் பத்தனுள் ஒன்று
  14. போலிப் பதில்
  15. திப்பிலி
  16. பிரம்பு
  17. பிரப்பம் பாய்
  18. ஆடாதோடை
  19. சாதனை புரி
  20. (பந்திகளில்) உணவு பரிமாறு

[object Object]

Winslow (1862)

சாதி (cāti) — noun
  1. The ratan-cane, பிரம்பு. (நிக.)
  2. The teak tree, தேக்கமரம்
  3. The சிறு சண்பகம் tree. (நிக.)
  4. Toddy, vinous liquor, கள்
  5. The சீந்தில் plant
  6. The ஆடாதோடை shrub. (p.)
  • சாதிப்பாய் — Ratan-mat, பிரப்பம் பாய். (சது.)
சாதி (cāti) — noun
  1. Sex, tribe, caste–as Hindu castes, குலம்
  2. Lineage, race, family, மரபு
  3. Kind, class, sort, species, இனம்
  4. Nutmeg, the tree, சாதிக்காய்மரம்
  5. The right kind or best of the class, &c., சாதியிலுயர்ந்தது. (c.)
  6. One of the ten modes of beating time, தாளப்பிரமாணம்பத்தினொன்று. W. p. 347. JATI
  7. (சது.) A tree in general, மரப்பொது.–Note. Hindu caste in the time of Menu. according to the சூடாமணிநிகண்டு was as follows
  8. பிராமணர், Brahmans, the sacerdotal caste–reputed to have sprung from the face of the god Brahma
  9. சத்திரியர் or க்ஷத்திரியர், the royal or military caste–said to have sprung from his shoulders
  10. வைசியர், Vaisya caste as sprung from his thighs. This class is three-fold; (a) கோவைசியர், herds- men. (b) தனவைசியர், the mercantile caste including செட்டிகள். (c.) பூவைசியர், the agriculturalists embracing வேளாளர்
  11. சூத்திரர், Sudra caste, embracing artificers and other servile tribes, supposed to have sprung from Brahma's feet. Of these eighteen are named, but the number is much greater. See குடிமை.–Note
  12. All the Tamil authorities, except the Nighandu, make the கோவைசியர் and பூவைசியர் including the வேளாளர் as the fourth or சூத்திரர் caste, and all inferior to these as சங்கர சாதி or mixed caste.–Note
  13. Brahmans call the கோவைசியர் and the பூவைசியர், சற்சூத்திரர் or superior Sudras, and the சூத்திரர் they call தற்சூத்திரர் or real Sudras. ஏந்தச்சாதியாடுவேணும். What kind of sheep do you want? நான்குபதினெட்டுச்சாதி. A mixture of the castes, high and low, (lit.) the four and eighteen castes intermixed, in contempt. சாதிக்குத்தக்கபுத்தி. The different degrees of intellect that characterize the respective castes; commonly spoken of inferiors. சாதியந்தப்புத்திகுலமந்த ஆசாரம். Every caste, has its degree of intellect, and every tribe its peculiar habits, usages, &c.–spoken when one of low caste does wrong
  • சாதிகுலம் — High caste. 2. Caste.
  • சாதிகெட்டவன் — One of low caste. 2. One degraded from caste.
  • சாதிக்கட்டு — Customs of caste. See கட்டு.
  • சாதிக்கலப்பு — A mixed caste. 2. See கல. v. a.
  • சாதிக்கலாபம் — Caste disturbance, commonly, the quarrel between இடங்கை and வலங்கை; the right and left hand castes.
  • சாதிக்காரன் — A person of good caste, of unmixed descent. 2. A genuine European, or one of pure European descent.
சாதி (cāti) — infinitive
  1. க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [ex Sa. Sadha. W. p. 916.] To persist in denying, affirming, &c., to maintain firmly or tenaciously; to support declarations, argument, doctrine; to argue, to stand to, உறுதியாகச்சொல்ல
  2. To inure one's self to, to perservere, to adhere to, to practise, to continue the observance of, to retain and act on any principle or feelings –as hatred, &c., சலஞ்சாதிக்க
  3. To overcome, to conquer, வெல்ல
  4. To effect, to accomplish, to attain, நிறைவேற்ற. (c.)
  5. [vul.] To triturate, to rub on carefully–as oil, plastering, paint, &c., தேய்க்க
  6. To continue the use of–as medicine, &c., until it becomes a second nature; to practise an art or course of devotion, அப்பியாசிக்க
  7. (c.) [ex Sa. Sata, to give.] To give, as a superior to an inferior, அருள
  8. To conclude, deduce, அனுமிக்க. தான்பிடித்தமுசலுக்கு மூன்றுகாலென்று சாதிக்கிறான். He persists in saying that the hare he caught had only three feet; i. e., he will affirm any thing. சுவாமிசாதித்தார். Swamy gave, or spoke. ஏனக்குப் பிரசாதஞ் சாதிக்கவேண்டும். Please give me of the sacred food
  • பொய்சாதிக்க — To stand to a lie.
  • கோபஞ்சாதிக்க — To retain and give vent to anger.
  • பகைசாதிக்க — To cherish or retain and give vent to hatred.
  • பகைவரைச்சாதிக்க — To overcome enemies, சத்துருக்களையழிக்க.
  • பத்திசாதிக்க — To persevere in devotion. (p.)
  • நிஷ்டைசாதிக்க — To continue in silent meditation, as an act of devotion.

Fabricius (1972)

சாதி — noun
  1. ஜாதி, s. sex, tribe, caste, குலம்
  2. kind, class, இனம்
  3. race, family, குடும்பம்
  4. high caste, best sort or kind, மேற்சாதி
  5. nut-meg tree, சாதி மரம்
  6. a group, a multi- tude
  7. (logic.) a futile answer
  • சாதிகுலம் — high caste; 2. caste, tribe.
  • சாதிகெட்டவன் — one who has lost his caste; 2. one of low caste.
  • சாதிக்கட்டு — caste rules.
  • சாதிக்கலப்பு — mixed caste.
  • சாதிக்கலாபம் — caste disturbance.
  • சாதிக்காய் — nut-meg.
சாதி — noun
  1. rattan-cane, பிரம்பு
  2. toddy, கள்
  3. the perfume sac of a civet cat, புனுகுச்சட்டம்
  4. long pepper, திப்பிலி
  5. the teak, தேக்கு
  • சாதிப்பாய்–பிரப்பம் பாய் — a rattan-mat, .
சாதி — v. t.
  1. v. t. maintain firmly, insist upon, persist in denying, affirming, acting, suffering etc, அழுத்து
  2. persevere, succeed by dint of perse- verance, effect, நிறைவேற்று
  3. conquer, overcome, வெல்
  4. grant, bestow favour, அருள்
  5. punish, தண்டி
  6. conceal, hide, மறை
  7. paint, polish
  8. adhere to the observance of, விடாது பற்ற
  • இல்லையென்று சாதிக்க — to deny obstinately.
  • ஒரே சாதனையாய்ச் சாதிக்க — to maintain firmly, to adhere steadfastly; to affirm.
  • காரியத்தைச் சாதிக்க — to effect a thing by perseverance.
  • சாதித்துப் பேச — to persist in an assertion.
  • சாதித்து வாங்க — to secure an object by persevering efforts.
  • பகைசாதிக்க — to cherish hatred.

Tamil Moli Akarathi (1928)

சாதி (cāti)
  1. ஆடாதோடை, உயர்வானது, கள், குலம், சாதிக்காய், சாதிமரம், சாதியென்னேவல், சிறுசண்பகம், சீந்தில், தாளப்பிரமாணம் பத்தி னொன்று, தேக்கமரம், தேர்ப்பாக ன்,பிச்சி,பிரம்பு,பிறப்பு, புழுகுசட் டம், மரப்பொது, யுத்தவீரன்
சாதி (cāti)
  1. 4- ஆந்திரம், கன்னடம், திரா விடம், மகராட்டிரம்
சாதி (cāti)
  1. 91- குண்டகர், கோளர், சுவர் ணர், நக்ஷத்திரசீவகர், அம்பட்டர், கும்பகாரர், பாரசவர், நிடாதர், போ சர், நாவிதர், சூதர், கூவிரர், மாகிட்டி யர், விசன்மர், உக்கிரர், சூலிக்கியர், மணிகாரர், புளிந்தர், க்ஷத்தர், மிலேச் சர், மாதகர், அத்தர், தௌட்டியந் தர், கடகாரர், மாலாசிதர், உற்பலர், சண்டாளர், பாகுதாயர், வைதேகர், பலதர், அயோகவர், சத்திரியர், ஆவந் தியர், மல்லர், சுதன்மர், வைத்தியர், பலகண்டர், இரசகர், புட்பதர், தக்க கர், சுவமசர், குகபர், கரணர், கரும காரர், பாரகர், வேணுகர், கனகர், அத்திகர், வர்த்தனசாலிகர், கருமகா ரர், தண்டகபோலர், மார்க்கவர், சல் லர், வந்திகர், வாடதானர், கண்டகர், கற்பர், சவுண்டிகர், சாத்துவதர், தசி யவர், பைரவர், ஆசிரயிகர், கரண்டர், காமுத்த்திரர், மாலாகாரர், கைவர்த்தர், நீலகாரர், வருணகரர், பிங்களர், நர் த்தகர், மாதங்கர், நடர், திரமிளர், கர்மசீவியர், நீலாதிவர்ண விக்கிரேத ர் சுவபாகர், குக்குடர், வேணர், புலக சர், ஆவிரதம், ஆபீரர், திக்குவணர், கசர், சைரந்திரியர், மைத்திரேயர், பா ர்க்கவர், காரூவாரர், பாண்டுசோபாக ர், ஆகிண்டிகர், சோபாகர், அந்தியாவ சாயிகர் இப்பஞ்சம சாதியாரின் வர லாறாவன, நான்கு வருணத்தவருள் ளும் உயர்குலத்தானும் இழிகுலப் பெண்ணுங் கூடிப்பிறந்தவர் அநு லோமர், இழிகுலத்தானும் உயர்குல ப்பெண்ணுங் கூடிப்பிறந்தவர் பிரதி லோமர், அநுலோமத்தானுக்கும் பிரதிலோம பெண்ணுக்கும் பிறந்த வர் அந்தராளர், பிரதிலோமத்தானு க்கும் அநுலோமப் பெண்ணுக்கும் பிறந்தவர் விராத்தியர், பார்ப்பனக்க ன்னி தன் குலத்துச் சோரநாயக னோடு கூடிப் பிறந்தவர் குண்டகர், பார்ப்பன விதவை அங்ஙனங்கூடிப் பிறந்தவர் கோளகர், பிராமணன் வி வாக முறைப்படி க்ஷத்திரிய கன்னி கையுடன்சேரப்பிறந்தவர் சவர்ணர், இவர் கவசனர் ஏனவும் தெலுங்கர் ஏனவும் வழங்கப்படுவர், பிராமணன் க்ஷத்திரியகுல மகளிரைச் சோரத் தாற் சேரப்பிறந்தவர் நக்கத்திர சீவ கர்
  2. இவர் யாவரும் விரும்புங் குடியா ராதலின் வீழ்குடியார்ஏனவும், காணி யாளர்ஏனவும், சிற்றரசராகலின்வே ளாண் சாமந்தா ஏனவும் பெயர்பெ றுவர், பிராமணன் வைசியக் குலக்க ன்னியை விவாகஞ்செய்து பிறந்தவ ர், அம்பட்டர்
  3. வைசியகுலப் பெண்க ளைச் சோரத்தாற் கூடிப்பிறந்தவர் கும்பகாரர், இவர்க்குநாவிதர், குயவர் ஏனவும்பெயர்
  4. பிராமணன் சூத்திர குலக் கன்னியை விவாகஞ் செய்து பிறந்தவர் பாரசவர், சோரத்தாற்கூ டிப்பிறந்தவர் நிடாதர், இவர்க்குச் சி த்தர் வேட்‌டைக்காரர் ஏனவும் பெய ர், க்ஷத்திரிய கன்னியும் விதவையும் தங்குலத்துச் சோரபுருடரைக் கூடி ப்பெற்றவர் முறையே போகர், நாவி தர் ஏனப்படுவர், க்ஷத்திரியன் பார் ப்பன மகளிரைவிவாகமுறையாகவு ஞ் சோரத்தானுஞ் சேரப்பிறந்தவா முறையே சூதர் கூவிரர் ஏனப்படு வர், அரசர்சபையில் நின்றேத்துவா ர் சூதர் ஏனப்படுவர், க்ஷத்திரியன் வைசிய சூத்திர குலமகளிரை விவா கத்தானுஞ் சோரத்தானுஞ் சேர்ந்து பெற்றவர் முறையே மாசிட்டியர் வி சனமர், உக்கிரர் சூலிக்கியர் ஏனப் படுவர் வைசியக்குலக் கன்னியும் விதவையும் தங்குலத்துச் சோரபுரு டரோடு சேர்ந்து பெற்றவர் முறை யே மணிகாரர் புளிந்தர் ஏனப்படு வர்
  5. வைசியனானவன் பிர்மக்ஷத்திரி யசூத்திர மகளிரை விவாகத்தினாலு ஞ் சோரத்தினாலுஞ் சேரப்பிறந்தவ ர்முறையே க்ஷத்தர், மிலேச்சர், மாக தர், அத்தர், தெளட்டி யந்தர்
  6. இவரு ள் மாகதர் ஏன்பவர், அரசசபையில் இருந்து புகழ்சொல்வோராம், தெள ட்டியந்தர் குந்தவேளாளர் ஏனப் பெ யர்பெறுவர்
  7. சூத்திரக் குலக்கன்னி யும் விதவையுந் தன்குலத்து சோர புருடரோடு கூடிப்பெற்றவர் முறை யேமாலாசிதர், உற்பலர் ஏனப் பெய ர்பெறுவர், சூத்திரனானவன் பிராம ணர் முதலிய முக்குலமகளிரையும் முறையானுஞ் சோரத்தானுங்கூடிப் பிறந்தவர் முறையே சண்டாளர், பா குகாயர், வைதேசர், பலதர், அயோ கவர், சத்தியார் ஏன்று சொல்லப்ப டுவர்
  8. பிரமவிராத்தியர்முதல் சூத் திரகுல விராத்திய ரீறாகவுள்ள நாற் குலத்து விராத்தியரும் நாற்குலப் பெண்களோடுஞ்சேர்ந்து, பெற்றவர் முறையே ஆவந்தியர், மல்லர், சுதன் மர், மைத்திரர்ஏன அழைக்கப்படுவர் தௌட்டியந்தர், வைதேகர், நிடாதர், உக்கிரர், சண்டாளர், சுவபசர், குக பர், அயோவகர் ஏன்பவர்களுக்கும் பிராமணப் பெண்களுக்குந் தனித் தனி பிறந்தவர்முறையே பலகண்ட ர், இரசகர், புட்பதர், தச்சகர், சுவப சர், குகபர், கரணர், சருமகாரர், ஏனப் பெயர்பெறுவர், சடாதர், நாவிதர், மாகதர், விராத்தியர், வைதேகர், கர ணர், சண்டாளர், கனகர் ஏன்பவர் கள், க்ஷத்திரிககுல மகளிருடன் மு றைமுறையே சேறப்பிறந்தவர் பார கர், வேணுகர், கர்ணர், அத்திகர், வர் த்தனசாலிகர், கருமகாரர், தண்டக போலர், மார்க்கவர் ஏனப் பெயர்பெ றுவர், பாரசவர், மாகிட்டியர், நிடா தர், உக்கிரர், கர்னர், கற்பர், கவுண்டி கர், சாத்துவதர் ஏன்பவர்கள் வை சியமகளிரோடு சேர்ந்து பெற்றவர் முறையே சல்லர், வந்திகர், வாடதா னர், கண்டகர், சற்பர், சவுண்டிகர், சாத்துவதர், தசியவர்ஏனப் பெயர் பெறுவர், நிடாதர், சண்டாளர், மாக தர், பலதர், தசியவர், சாத்துவர், சவு ண்டிகர், தண்டகபோலர், ஏன்பவர் களுக்குஞ் சூத்திரப்பெண்களுக்கும் பிறந்தவர் முறையே பைரவர், ஆசிர யிகர், கரண்டர், சாமுத்திரர், மலா காரர், கைவர்த்தர், நீலகாரர், வருணா கரர் ஏன்று பெயர்பெறுவர்
  9. பிரமா ணனுக்கும் அயோவகப்பெண்ணுக் கும் பிறந்தவர், பிங்களர்
  10. கவர்னனு க்கும் அம்பட்டப்பெண்ணுக்கும் பிற ந்தவர் நாத்தகர்
  11. மாகிட்டியனுக்கும் கரணப் பெண்ணுக்கும் பிறந்தவர் மாதங்கர் மல்லனுக்கும் விச்சுலை கு லப்பெண்ணுக்கும் பிறந்தவர் நடர், கற்பனுக்கும் க்ஷத்திரியப்பெண்ணுக் கும் பிறந்தவர் திரமிளர் நிடாதனுக் கும் காரோசருமப் பெண்ணுக்கும் பிறந்தவர் சர்மசீவியர்அயோகவனுக் கும் நீலகாரப்பெண்ணுக்கும் பிறந் தவர் நீலாதி வன்ன விக்கிரோதர் க்ஷத்தாவுக்கும் உக்கிரசாதிப்பெண் ணுக்கும் பிறந்தவர் சுவபாகர்
  12. சூத் திரனுக்கும் நிடாதப்பெண்ணுக்கும் பிறந்தவர் குக்குடர்
  13. வைதேகனுக் கும் அம்பட்டசாதிப்பெண்ணுக்குஞ் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்த வர் புல்கசர், பிராமணனுக்கு உக்கி ரசாதிப்பெண்ணிடம் பிறந்தவர் ஆ விரதர், அம்பட்டக்கன்னிகையிடம் பிறந்தவர் ஆபீரர்
  14. ஆயோகவப்பெண் ணிடம்பிறந்தவர் திக்குவணர்
  15. தண் டகபோலனுக்கும் பிராமணப்பெண் ணுக்கும் பிறந்தவர்கசர்
  16. தசியுவென் பவனுக்கும் அயோவகப் பெண்ணுக் கும்பிறந்தவர் சைரந்தியர், வைதேக வனுக்கும் அயோவகப்பெண்ணுக்கு ம்பிறந்தவர்மைத்திரேயர் நிடாதனுக் கும் அயோகவசாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் பார்க்கவர்
  17. கரண்டனுக் கும் விதேகசாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் காருவாரர்
  18. சண்டாளனு க்கும் கைதேகப்பெண்ணுக்கும் பி றந்தவர் பாண்டுசோபாகர், நிடாத னுக்கும் புல்கசாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் சோபாகர்
  19. அவனுக்கும் நி டாதசாதிப்பெண்ணுக்கும் பிறந்தவர் அத்தியாவசாயிகர்
  20. இங்ஙனம் ஒவ் வோர்குல ஆடவர்களுக்கும் மகளிர்க ளும் தத்தம் முறைதவறிக் கூடிப் பிறந்ததனாற் பல சாதிகளிலுள்ளன
  21. அவற்றையெல்லாம் சுப்பிரபேதாக மம், பிரமபுராணம், வைகாநசம், மா தவியம், சாதிவிளக்கம் முதலிய நூல் களிற்கண்டுதெளிக
சாதி (cāti)
  1. 10- அங்கம், ஈகாமிருகம், சம் வாகாரம், இடிமம், நாடகம், பாணம், பிரகசனம், பிரகரணம், வியாயோ கம், வீதி
சாதி (cāti)
  1. கள், குலம், சாதியென்னேவல், சிறுசம்பகம், தேக்கமரம், பிரம்பு, மரப் பொது, வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாதி⁶ (cāti) — noun
  1. < jāti
  2. Family, clan, race; குலம். (பிங்.)
  3. Hindu caste. See வருணண். சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டு (திருவாச. 31, 5)
  4. Birth; பிறப்பு. (தொல். பொ. 307, உரை.)
  5. Attribute common to a class; ஓரினப்பொருள்களிற் பொதுவாகிய தன்மை. (சி. போ. பா. அவை. பக். 13, சுவாமிநா.)
  6. Kind, class, species; இனம். ஆன் சாதிகளே முதல விலங்கு (கூர்மபு. பலவ. 8)
  7. That which is superior, genuine; தன்மையிற் சிறந்தது. சாதிமாணிக்க மென்கோ (திவ். திருவாய். 3, 4, 4)
  8. Group, multitude; திரள். பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229)
  9. See சாதிமல்லிகை
  10. Ilangilang. See சிறுசண்பகம்
  11. Nutmeg. See சாதிக்காய் கற்பூரஞ் சாதியோ டைந்து (சிலப். 5, 26, உரை)
  12. (Mus.) Element of time-measure which specifies the different sub-divisions in accordance with the variety of laku, of five kinds, viz., caturaciram, tiriciram, miciram, kaṇṭam, caṅkīraṇam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப்பிரணம் பத்தனுள் ஒன்று. (பரத. தாள. 47.)
  13. (Log.) Futile answer; போலியுத்தரம். ஏத்துவாபாச சலம்விளங்குஞ் சாதி (பிரபோத. 42, 5)
சாதி⁷ (cāti) — noun
  1. Teak. See தேக்கு. (பிங்.)
  2. Long pepper; திப்பலி. (W.)
  3. Common rattan of S. India; பிரம்பு. (பிங்.)
  4. Rattan matting; பிரப்பம்பாய். (பிங்.)
  5. Malabar-nut tree; ஆடாதோடை. (மலை.)
  6. Toddy; கள். (பிங்.)
  7. Gulancha. See சீந்தில். (மலை.)
  8. Perfume sac of a civet cat; புழுகுச்சட்டம். அமிர்தை முக்கடு சாதி (தைலவ. தைல. 34)

IndoWordNet

சாதி — noun
  1. இந்துக்களின் நான்கு பிரிவு - பிராமணன், சத்திரியன், வைஷ்ணவர், சூத்திரர்
சாதி — noun
  1. சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தினர் உறவினர் போன்றவர்களைச் சார்ந்திருப்பதும் பல படி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவு.
சாதி — noun
  1. மொழி,மதம் போன்ற ஏதேனும் ஒரு காரன அடிப்படையில் அமையும் மக்கள் பிரிவு

கூட்டம் சமுதாயம் சமூகம் சூத்திரர் தீண்டத்தகாதவர் தாழ்ந்தவர் பிராமணன் பிராமணர் சத்திரியன் வைஷியர் ஜாதி மக்கள் ஜனங்கள் இடைச்சாதி ஆரிய ஜாதி பிராமண ஜாதி மீனவர்கள் மீனவன் செம்படவன் வலையர்கள் இந்துக்களின் ஒரு இனம் இந்துக்களின் ஒரு பிரிவு இந்துக்களின் ஒரு குலம் ஆரியரில்லாத சாதி ஆரியற்ற சாதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாதி
  1. குலம்
  2. பிறப்பு
  3. ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை
  4. இனம்
  5. தன்மையிற் சிறந்தது
  6. திரள்
  7. சாதிமல்லிகை
  8. சிறு சண்பகம்
  9. சாதிக்காய்
  10. தாளப்பிரமாணம் பத்தனுள் ஒன்று
  11. போலிப் பதில்
  12. திப்பிலி
  13. பிரம்பு
  14. பிரப்