சிதை

இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். தன்மை கெடு சிதறுதல்

funeral pyre

Tamil Wiktionary

சிதை — வினைச்சொல் (Verb)
  1. இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
  2. தன்மை கெடு
  3. சிதறுதல்
  4. அறுபடுதல்
  5. கோபித்தல்
  6. சொல் முதலியன வழக்கால், காலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல், அழிதல்
  7. பொய்யாதல்
  8. வரம்பழிதல்
  9. குலைதல்
  10. இசை முதலியன கெடுதல்

[object Object]

விறகு

Winslow (1862)

சிதை (citai) — noun
  1. Inferiority, lowness, baseness, கீழ்மை. (p.)
  • சிதையர் — Low or mean people, கீழ் மக்கள். (சது.)
சிதை (citai) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be injured, spoiled, marred, ruined; to decay, to be worn out, to waste, moulder, கெட; [ex Sa. Sita.]
  2. (Compare சேதி, v.) To be sundered, divided, cut to pieces, to be mutilated, வெட்டுண்ண
  3. To expire, சாக
  4. To change, to be contracted–as words or language by time, to grow obsolete, மருவிச்சிதைய
  5. To be changed, transformed, to vary as custom, religion, &c., வழக்கமாற
  6. To be destroyed, to perish, to melt away–as an army, இரிய
  7. To degenerate, deteriorate, சீர்கெட
  8. To be wrong, to get out of tune–as music; to go wrong–as a tune, சந்தஞ்சிதைய
  9. To be defective, deficient in letters, words, &c., ஏழுத்துமுதலியகுறைய
  • சிதைந்தவேடு — An ola-book injured by white-ants, &c.
  • சிதைந்துமருவியசொல் — A word changed by time; a contraction. (p.)
  • சிதைவு — Destruction, perishing, ruin, loss, கெடுதி. 2. Decay, waste, squandering, abuse, பதனழிவு. 3. Fragments, ruins, &c.–as சிதை, v. 4. Change by contraction of a word; corruption or change of language, custom or religion, குன்றுதல். 5. Rout, defeat, இரிவு. 6. Injury of wealth, character, &c.; suffering detraction, &c., பெயர்முதலியகெடுதல். 7. Defect of a letter or word chiefly in poetry, தளைமுதலியவழுவுதல். 8. Getting out of tune, or going wrong, as a tune, சந்தச் சிதைவு. 9. Degeneracy, deterioration, சீர்கேடு.
  • சிதைவுறாமங்கலவரிசி — Consecrated entire rice. See அட்சதை. (R.)
  • ஏழுத்துச்சிதைவு — Change of letters –as in the adoption of words from Sanscrit. 2. Omission or loss of a letter in a word by time.
  • சொற்சிதைவு — Change of a word from its original form, by elision, &c. 2. The change of Sanscrit words into Tamil. 3. Omission of a word.
சிதை (citai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To injure, spoil, mar, waste, mutilate, கெடுக்க
  2. To abrogate, abolish, annul, resound, கொலைக்க
  3. (நிக.) To sound, ஒலிக்க
  4. To destroy, ruin, demolish, kill, அழிக்க. See சேதி. v
  5. To sunder, divide, cut to pieces, பின்னமாக்க. (Sa. Ch'hida.)
  6. To squander, lavish, or waste property, பொருள்செலவழிக்க
  7. [prov. vul. for சிரைக்க.] To shave, shear, &c., மயிர்சிரைக்க. செய்தாரினல்லார்சிதையாதவர். Those who are greatful for favors, (lit. who murder them not,) are preferable to those that bestow them. (p.)
  • நன்றிசிதைக்க — To be ungrateful, (lit.) to destroy benefits received. (p.)
  • சிதைப்பு — Destroying, demolition, ruin, அழிப்பு. 2. Injury, wasting, rout, defeat, &c., கெடுதல்.

Fabricius (1972)

சிதை — noun
  1. baseness, தாழ்மை
  2. a sail, கப்பற்பாய்
  3. vulgar words, இழி சொற்கள்
  • சிதையர் — mean people.
சிதை — noun
  1. funeral pile, pyre, ஈமவிறகு.
சிதை — v. i.
  1. v. i. be destroyed, perish, be brought to nothing, அழி
  2. be injured or spoiled, கெடு
  3. be angry
  4. become corrupt, as words
  5. exceed limit, வரம்பழி
  • சிதைந்த கட்டடம் — a building in ruins.
  • சிதைவு — destruction, ruin, wreck.

Tamil Moli Akarathi (1928)

சிதை (citai)
  1. ஈமவிறகு, கீழ்மை, சிதையென் னேவல், பாய்மரம்
சிதை (citai)
  1. கீழ்மை, சிதையென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிதை³ (citai) — noun
  1. < சிதை¹-
  2. See சிதைவு
  3. கொழுமணிச் சிகர கோடி சிதைபட (திருவிளை. மாயப். 20)
  4. Sail; கப்பற்பாய். தெய்வநீறு மைந்தெழுத்து மே சிதைக்கல னாக (திருவிளை. திருநகர. 88)
  5. Vulgar words; இழி சொற்கள். சிதையுரையான் (ஏலா. 34)
சிதை⁴ (citai) — noun
  1. Funeral pile, pyre; ஈமவிறகு. (யாழ். அக.)
சிதை (citai) — noun
  1. cf. சீத்தை. Low persons; கீழ்மக்கள். (அக. நி.)

IndoWordNet

சிதை — noun
  1. சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவைஅடுக்கப்பட்ட அமைப்பு
சிதை — verb
  1. ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
சிதை — verb
  1. ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது
சிதை — verb
  1. சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

ஈமவிறகு கலைப்பொருள்கள் நசுங்கு அமுங்கு அழுத்து இடி வேலைசெய் பணிசெய் தகர் உடை விழச்செய் தள்ளிவிடச்செய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிதை
  1. சிதைவு
  2. பிணஞ்சுடு விறகு
  3. இழிவுச் சொற்கள்
  4. கப்பற்பாய்
  5. கீழ்மக்கள்