சிற்பம்

கல், மரம், உலோகம் முதலியவைகளில் செதுக்கப்பட்ட கடவுள், விலங்கு முதலிய உருவம் statue of gods, animals etc.; sculpture மகாபலிபுரச் சிற்பங்கள் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

sculpture artistic skill fine or artistic workmanship

Tamil Wiktionary

சிற்பம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கல், மரம், உலோகம் முதலியவைகளில் செதுக்கப்பட்ட கடவுள், விலங்கு முதலிய உருவம்

Winslow (1862)

சிற்பம் (ciṟpam) — noun
  1. Architecture, சிற்பவிலக்கணம்
  2. The manual or mechanical arts; any fine or curious art, சிற்பத்தொழில்
  3. The shastras which treat on architecture, சிற்பசாத்திரம்
  • சிற்பசாத்திரம்–சிற்பசாஸ்திரம்–சிற்ப நூல் — The shastras which teach architecture and other mechanical arts.–Note. These consist of thirty-two books, viz.: 1. விச்சுவதருமம். 2. விச்சுவேசம். 3. விச்சுவசாரம். 4. விருத்தம். 5. தாவட்டம். 6. நளம். 7. மயம். 8. அனுமான். 9. பானு. 10. கற்பாரியம். 11. சிருட்டம். 12. மானசாரம். 13. வத்துவித்தியாபதி. 14. பாராசாரியம். 15. அரிடிகம். 16. சயித்தகம். 17. வாத்துபோதம். 18. வித்தாரம். 19. ஐந்திரம். 20. வச்சிரம். 21. சௌமம். 22. விச்சுபகாசிபம். 23. மகதந்திரம். 24. விசாலம். 25. சித்திரம். 26. காபிலகாலயூபம். 27. நாமசங்கிதை. 28. சாத்திகம். 29. விச்சுவபோதம். 30. ஆதிசாரம். 31. வெகுச்சுருதம். 32. மானபோதம்.
  • சிற்பசாலை — A goldsmith's shop, தட்டார்வேலைசெய்யுமிடம். (Colloq.)
  • சிற்பத்தொழில் — Architecture, masonry.
  • சிற்பத்தொழிற்குறுப்பு — Materials, or requisites for a building, being ten. viz.: 1. கல், stone. 2. உலோகம், metal. 3. செங்கல், brick. 4. மரம், timber. 5. மண், mud or clay. 6. சுதை, lime-mortar. 7. தந்தம், ivory. 8. வண்ணம், paint. 9. கண்டசர்க்கரை, jaggery. 10. மெழுகு, wax.
  • சிற்பர் — Masons, stone-cutters, mechanics, artizans, limners, artificers, கம்மியர்.
  • சிற்பாசாரியர்–சிற்பசாஸ்திரிகள் — Architects, head-masons, &c., சிற்பர்.

Fabricius (1972)

சிற்பம் — noun
  1. architecture, any mechanical fine work, சிற்பத்தொழில்
  2. artistic skill, தொழிலின் திறமை
  • சிற்ப சாஸ்திரம் — a treatise on archi- tecture, the art of sculpture, science of architecture.
  • சிற்பசாலை — a manufactory.
  • சிற்பநூல்–சிற்பசாத்திரம் — ancienttrea- tises on architecture and allied arts 32 in number.
  • சிற்பன்–சிற்பி — ( சிற்பர், சிற்பியர்) stonecutters, architects, mecha nies, artisans.
சிற்பம் — noun
  1. thinking (சித்)
  2. fewness, shortness, as of duration (ஸ்வல்பம்), அற்பம்

Tamil Moli Akarathi (1928)

சிற்பம் (ciṟpam)
  1. அறுதொழிலி னொன்று, அற் பம், சிறிசு, சிற்பநூல், நுண்மை
சிற்பம் (ciṟpam)
  1. சிற்பநூல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிற்பம்¹ (ciṟpam) — noun
  1. < šilpa
  2. Artistic skill; தொழிலின் திறமை. செருக்கயல் சிற்பமாக (சீவக. 2716)
  3. Fine or artistic workmanship; நுட்பமான தொழில். சிற்பந் திகழ்தரு திண்மதில் (திருக்கோ. 305)
  4. See சிற்பநூல். தெளிதரு சிற்ப நன்னூல் (திருவாலவா. 1, 24)
சிற்பம்² (ciṟpam) — noun
  1. perh. cit. Thinking; சிந்திக்கை. அவர்தஞ் சிற்பங்க டரும் புகழும் (கோயிற்பு. பாயி. 21).
சிற்பம்³ (ciṟpam) — noun
  1. cf. svalpa. Fewness; shortness, as of duration; அற்பம். சிற்பங்கொள் பகலென (கம்பரா. சடாயுகாண். 8).

IndoWordNet

சிற்பம் — noun
  1. கற்களால் செய்த ஒரு வடிவம்.

சிலை கலைப்பொருள்கள் புத்தசிலை பௌத்த சிலை கல்சிலை கற்சிலை உலோக சிலை கடவுள்சிலை தேவ சிலை நகல் சாயல் துருப்தாதித்ய சிறு உருவச்சிலை செதுக்குதல் வடித்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிற்பம்
  1. கல்லில் செதுக்கிய உருவம்
  2. நுண் தொழில்
  3. சிற்பக்கலை
  4. சிந்திக்கை
  5. அற்பம்
  6. தொழில்திறமை