சூது
சூதாட்டம் உபாயம் தந்திரம்
gambling trick secret
Tamil Wiktionary
சூது — பெயர்ச்சொல் (Noun)
- சூதாட்டம்
- உபாயம்
- தந்திரம்
- இரகசியம்
- வெற்றி
- தாமரை
- சூரியகாந்தி
[object Object]
Winslow (1862)
சூது (cūtu) — noun
- Lotus, தாமரை. (சது.)
- Lotus with one flower leaf, ஓரிதழ்த்தாமரை. (R.)
சூது (cūtu) — noun
- (probably a change of Sa. Dyootaha.) Conical pieces in the play of draughts, to mark the progress of each player, சூதாடுகருவி
- The play of dice or draughts, சூதாட்டு
- Gaming, gambling of all kinds including cock-fighting, &c., பலவகைச்சூது
- Trick, deception, guile, circumvention, வஞ்சகம். (c.)
- சூதடி — Deception, tricks, பித்தலாட்டம்.
- சூதன்–சூதுக்காரன் — A deceitful person. 2. A gambler.
- சூதாடுகிறவன் — A gambler.
- சூதுவிளையாட — To gamble.
- சூதாடல் — Gambling, playing at any game of chance.
- சூதாடுவோர் — Gamblers.
Fabricius (1972)
சூது — noun
- a play of dice or draught gambling, சூதாட்டு
- fraud, trick, deception, வஞ்சகம்
- means, device, உபாயம்
- success, victory, வெற்றி
- சூதாட–சூது விளையாட — to play with dice for money etc., to gamble.
- சூதாடுகிறவன்–சூதாட்டக்காரன்–சூதாடி — a gambler, a player.
- சூதாட்டம்–சூதாட்டு — gambling.
- சூதுக்காரன் — a deceitful person.
- சூதுபண்ண — to deceive, to play trick.
- சூதுவாது — trick, deception.
Tamil Moli Akarathi (1928)
சூது (cūtu)
- ஓரிதழ்த்தாமரை, சூதாடுகருவி, சூதாட்டுதாமரை, தாய்விளையாட்டு, வஞ்சகம்
சூது (cūtu)
- கழங்கு, காசு, வல்லு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சூது¹ (cūtu) — noun
- Gambling; சூதாட்டம். வேண்டற்க வென்றிடி னுஞ் சூதினை (குறள், 931)
- Conical pieces in dice-play; சூதுக்கட்டத்தில் வைக்குங் கருவி. சூதும் பங்கிய முகையுஞ் சாய்த்து (பெரியபு. தடுத்தாட். 21)
- Means, device; உபாயம். களவு கடனாகக் கடிந்திடுதல் சூதே (சீவக. 2870)
- Victory, success; வெற்றி. வெல்வது சூதென வேண்டி (சீவக. 879)
- Secret; இரகசியம். Loc
- Trick; தந்திரம். இந்தச் சூது எங்கிருந்து கற்றான்?
சூது² (cūtu) — noun
- perh. jala-jāta
- Lotus; தாமரை. (அக. நி.)
- See சூரியகாந்தி
- (மலை.)