வினை

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக்காலமொடு தோன்றும் காலம் தாமே மூன்று என மொழிப இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை உடைய தோன்றலாறே

act, action, deed, work, reaction verb karma (deeds in the previous birth which affect the course of one's present life)

Winslow (1862)

வினை (viṉai) — noun
  1. Act, action, deed, work, தொழில்
  2. Accumulation of moral actions, the results of deeds in former births, ஊழ்
  3. An evil deed, mischief, the actions or intentions of enemies, தீவினை
  4. Design, thought, counsel, கருத்து
  5. War, போர்
  6. [in gram.] A verb.–Note. Of verbs are தன்வினை, பிறவினை.முற்றுவினை, ஏச்சவினை, தெரிநிலைவினை, குறிப்புவினை, உடன்பாட்டுவினை or விதிவினை. மறைவினை or ஏதிர்மறைவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, செயப்படுபொருள்குன்றியவினை, செயப்படுபொருள்குன்றாதவினை; which see. அது அதிக விலைசெய்யும்போலேயிருக்கிறது. It appears that it will cause me much pain. வினைக்காலம்வருங்கால்மனைவழியுந்தெரியாது. When misfortunes come, we know not even our own house, i. e. are perplexed. [prov.] தன்வினைத்தன்னைச்சுடும். His devices injure himself. வினையின்காலம். A time of misfortunes. வினைவழி. According to fate
  • வினை–2–நல்வினை–தீவினை — . The two-fold actions, good and bad, , .
  • வினைக்குணம் — Spitefulness, sulkiness.
  • வினைக்குறிப்பு — A conjugated appellative.
  • வினைக்குறிப்புமுற்று — A finite conjugated appellative.
  • வினைசூழ — To plot evil. (p.)
  • வினைசெயல்வகை — Means of accomplishing an action.

Fabricius (1972)

வினை — noun
  1. act, action, deed, work, தொழில்
  2. thought, temper (good or bad) கருத்து
  3. malignity, evil, misfortune, malice, தீவினை
  4. a verb, வினைச்சொல்
  5. war, போர்
  • தன்வினை தன்னைச்சுடும் — his own knavery will betray him.
  • வினைக்குணம் — spitefulness, sulkiness.
  • வினைசூழ — to plot evil.
  • வினைசெய்வோர் — servants; 2. doers of evil deeds.
  • வினைஞர்–கம்மாளர்–கூத்தர்–சூத்திரர் — artificers, ; 2. ploughmen; 3. dancers, ; 4. Sudras, .
  • வினைத்திட்பம்–வலி — boldness in action.

Tamil Moli Akarathi (1928)

வினை (viṉai)
  1. இரண்டு, ஊழ், கருத்து கள்ளம், தொழில், போர், வஞ்சகம்
வினை (viṉai)
  1. கருமம், தொழில், விதி, பணி, வினையம் செயல்
வினை (viṉai)
  1. 2- நல்வினை, தீவினை
வினை (viṉai)
  1. கருத்து, தொழில், போர்

IndoWordNet

வினை — noun
  1. வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.
வினை — noun
  1. வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி

செயல் காரியம் சொல் செயப்படுபொருள் செயப்படுபொருள் வினை விளைவு அடுக்கு தந்திரம் சாணக்கியம் சாலக்கு சூது வஞ்சகம் கீலகம் குத்திரவித்தை வேலை பணி

Tamil Wiktionary

வினை
  1. வினைச்சொல்
  2. செயல்
  3. reaction (வேதியியல்)

[object Object], [object Object]

வினா வினைச்சொல் வினைமுற்று வினையெச்சம் வினைத்தொகை வினையாலணையும் பெயர் வினைஞர் வினையாட்டி வினையாளன் தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டுவினை உடன்பாட்டுவினை எதிர்மறைவினை தனிவினை கூட்டுவினை இருவினை முன்வினை பின்வினை தீவினை நல்வினை ஊழ்வினை எதிர்வினை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வினை (viṉai) — noun
  1. Act, action, deed, work; தொழில். செய்திரங்கா வினை (புறநா. 10)
  2. Karma, as the accumulated result of deeds done in former births, of two kinds, viz., nal-viṉai, tī-viṉai; நல்வினை தீவினை என இருவகைப் பட்ட பூர்வகருமம். இருள்சே ரிருவினையுஞ் சேரா (குறள், 5)
  3. (Jaina.) The four results of karma, viz., vētanīyam, āyuṣyam, nāmam, kōttiram; வேதநீயம் ஆயுஷ்யம் நாமம் கோத்திரம் என்ற நான்கு கருமங்கள். (சீவக. 3114, உரை.)
  4. (Gram.) Verb; வினைச்சொல். (தொல். சொல். 198.)
  5. Thing to be done; செய்தற்குரியது. அவனை வேறல் வினையன்றால் (கம்பரா. சூளா. 2)
  6. Remedial measure; பரிகாரச் செயல். வினையுண்டே யிதனுக் கென்பார் (கம்பரா. நாகபாச. 194)
  7. Work on hand; மேற்கொண்ட செயல். வினைவகை யென்றிரண்டி னெச்சம் (குறள், 674)
  8. Evil deed; தீச்செயல். தாய்வினை செய்யவன்றோ கொன் றனன் றவத்தின் மிக்கோன் (கம்பரா. கும்பகர்ண. 143)
  9. Effort; முயற்சி. வினைக்கண் வினையுடை யான் கேண்மை (குறள், 519)
  10. War; போர். செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் (புறநா. 6)
  11. Deceitfulness, guile; வஞ்சகம். வினைகளைந்தனர் நண்புகொண் டொழுகினர் (உபதேசகா. பஞ்சாக். 33)
  12. Art; cunning; தந்திரம். வினையி னென்வயின் வைத்தனன் (கம்பரா. அயோத். மந்திரப். 69)
  13. Thought, design; கருத்து. (யாழ். அக.)
  14. Trouble; தொந்தரவு. அது அதிக வினை செய்யும் போலிருக்கிறது. (W.)
  15. Pus; சீழ். இந்தப்புண் ணில் இன்னும் வினை யிருக்கின்றது
  16. A cant term signifying two; இரண்டைக் குறிக்கும் குழூஉக் குறி. (தைலவ. தைல.)