தனம்

புறமொழிச்சொல்--பிராகிருதம்--tanamtva--பொருள் 1 & 2க்கு மூலச்சொல் புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धन--த4ந--பொருள் 3-8 வரை மூலச்சொல் புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- स्तन--ஸ்த1ந--பொருள் 9க்கு மூலச்சொல்

wealth, substance, property breast calf

Tamil Wiktionary

தனம்
  1. தன்மை
  2. பண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல்
  3. செல்வம்
  4. பொன் ()
  5. முத்திரை ()
  6. உத்திரம் ()
  7. காண்க...தனஸ்தானம் ( மரபிய. 4.)
  8. கூட்டற்கணக்கு ...()
  9. முலை
  10. பசுக்கன்று ()
  11. சந்தனம் ()
  12. வருத்தம் ()

தன்மை குணம் குழந்தைத்தனம் முட்டாள்தனம் சண்டித்தனம் ஊதாரித்தனம் மூடத்தனம் கோமாளித்தனம் மட்டித்தனம் அசட்டுத்தனம் கேப்புமாரி த்தனம்

Winslow (1862)

தனம் (taṉam)
  1. (Tel.) Nature, state, quality, disposition, தன்மை–as பெரியதனம், greatness
  2. A termination of nouns applicable to persons, expressing state–as குடித்தனம், துரைத்தனம், &c
தனம் (taṉam) — noun
  1. Gold, wealth, substance, property, ஆஸ்தி. (c.)
  2. [in numbers.] affirmation, quantity, plus, ஏண்ணிலோரடையாளம். W. p. 436. DHANA
  • தனதன் — A liberal person, ஈகையாளன். 2. A name of Kuvêra a bestower of wealth, குபேரன்.
  • தனதானியம் — Gold and grain.
  • தனபதி — The god of wealth, குபேரன். 2. Any wealthy king.
  • தனபதித்துவம் — An opulent state; also beneficence, liberality.
  • தனரேகை — Lines indicating wealth to the possessor, கையிரேகையினொன்று.
  • தனலக்குமி–தனலட்சுமி — Lukshmi, the goddess of wealth, one of the eight இலட்சுமி.
தனம் (taṉam) — noun
  1. Female breasts or bosom, முலை. See ஸ்தனம்.
  • தனபாரம் — As ஸ்தனம்; used in poetry as a term of beauty, or dignity.
  • தனபோகம் — Enjoyment of woman. சையோகம்.

Fabricius (1972)

தனம் — s. (Tel.)
  1. (Tel.) nature, quality, தன்மை
  2. a particle by which certain abstract nouns are formed (as in கொஞ் சத்தனம், littleness, பெரியதனம், greatness, magnificence, துரைத்தனம், authority etc.)
தனம் — noun
  1. wealth, riches, property, substance, ஆஸ்தி
  2. (ஸ்தனம்) female breasts, முலை
  • தனதற்பம் — pride of wealth.
  • தனதன் — a liberal person; 2. a name of Kubera, a bestower of wealth.
  • தனதாநுசன்–தனசானுசன் — Ravana, (as the brother of Kubera).
  • தனதானியம்–தானதான்யம் — gold and grain.
  • தனபதி — the god of wealth; 2. a rich and liberal person.
  • தனபதித்துவம் — an opulent state, benificence, liberality.

Tamil Moli Akarathi (1928)

தனம் (taṉam)
  1. ஏண்ணிலோரடையாளம், சம் பத்து, தன்மை, பசுக்கன்று, பொன்
தனம் (taṉam)
  1. பொன், முலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தனம்¹ (taṉam) — noun
  1. tanam < tva. Affix added to many nouns giving them an abstract meaning; பண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல். வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி (பெருங். நரவாண. 8, 6).
தனம்² (taṉam) — noun
  1. < dhana
  2. Wealth, substance, property; செல்வம். (W.)
  3. Gold; பொன். (பிங்.)
  4. Seal; முத்திரை. (பிங்.)
  5. Beam across roofing; உத்திரம். (அக. நி.)
  6. See தனஸ்தானம். (விதான. மரபிய. 4.)
  7. (Arith.) Addition; கூட்டற்கணக்கு. (W.)
தனம்³ (taṉam) — noun
  1. Woman's breast; முலை. அரும்பெருந் தனத்தை வேட்டாண் டினவளை . . . விற்பான் வந்தோன் (திருவாலவா. 23, 15).

IndoWordNet

தனம் — noun
  1. பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு திரட்சியாக இருக்கும், குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் உறுப்பு.

மார்பகம் மார்பு முலை நெஞ்சு ஸ்தனம் கொங்கை முளையிடம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தனம்
  1. செல்வம்
  2. பொன்
  3. பொருள்
  4. முலை
  5. தன்மை
  6. உத்திரம்
  7. பசுவின்கன்று
  8. வருத்தம்
  9. கூட்டற்கணக்கு
  10. பண்புணர்த்தற்குப் பெயரின் பின்வரும் இடைச்சொல்
  11. சாதகத்தில் சென்மலக்கனத்திலிருந்து செல்வத்தைக் குறிக்கும் இடமான இரண்டாம் வீடு