கோடு

(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு (தோலில் ஏற்படும்) சுருக்கம் குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம்

to bend; be crooked line, stripe line

Tamil Wiktionary

கோடு
  1. (ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
  2. (தோலில் ஏற்படும்) சுருக்கம்
  3. குன்று
  4. மலை
  5. மலைப்பகுதி
  6. முகடு
  7. மேட்டு நிலம்
  8. கொம்பு
  9. தந்தம்
  10. எயிறு
  11. மரக்கொம்பு
  12. வளைவு
  13. கோணல்
  14. நடுநிலை நீங்குகை
  15. நடுநிலை பிறழ்தல்
  16. கொம்புக் குறியீடு (கெ
  17. கே போன்ற உயிர்மெய் எழுத்துகளில் வரும் குறியீடு)
  18. (இலங்கையில்) நீதிமன்றம்

நேர்க்கோடு வளைகோடு எல்லைக்கோடு திருச்செங்கோடு

Winslow (1862)

கோடு (kōṭu) — infinitive
  1. , (Gen, ட்டின், s. Crookedness, flexture, obliquity, a crooked thing, வளைவு. W. p. 250. KÔTA
  2. A diagram or figure, as a square, a circle, an ellipse, &c., வடிவம்
  3. Dividing or describing lines, கீற்று
  4. A chank, சங்கு
  5. The horn or tusk of a beast, விலங்கின்கொம்பு
  6. The horn or chank for blowing, ஊதிடுகொம்பு
  7. The symbol of the ஏ, ெ, or ே, ஏழுத்தின்கொம்பு
  8. A branch, மரக்கொம்பு
  9. The summit of a hill, மலையினுச்சி
  10. Shore, bank of a river, margin of a tank or well, &c., நீர்க்கரை
  11. Ridge, dam, bank in rice–field, வரம்பு
  12. (sa. Kota.) A strong hold, a fort, a fortified place, அரணிருக்கை
  13. Guile, deceit, வஞ்சனை
  14. Crowd, numbers, multitude, திரள். (பிங்.)
  15. Side, பக்கம். (பிங்.)
  16. A cusp, the horn of the crescent moon, &c., பிறைக்கோடு
  17. [loc. for.] Court of justice, நீதிஸ்தலம்
  • கோடுகீற–கோடுகிழிக்க — To draw lines; to make diagrams, figures, &c. நீர்கிழித்தகோட்டுக்குள்ளடங்கியிருக்கிறேன். I am within the line you drew, i. e., I obey your order.
  • கோடுகீறிமறிக்க — To draw a circle on the ground round a debtor, adjuring him not to pass it till the debt is paid. 2. To draw a circle round one in order to extort a promise from him. 3. To draw a magic line in order to stop a wild beast, தடைகட்ட.
  • கோடுபோட — To rule a paper to write (c.)
  • கோட்டிலக்கம் — Magic squares. [limited usage.]
  • கோட்டில்வாழ்விலங்கு — Animals that live on trees as squirrels, monkeys, &c.
  • கோட்டுநீறு — Shell-lime, conch-lime. (p.)
கோடு (kōṭu) — noun
  1. , கிறேன், கோடினேன், கோட, v. a. (Sans. KÔT'A, crooked.) To be crooked, oblique; to bend, வளைய
  2. To swerve, to deviate, to diverge, கோண
  3. To be partial, biased, நடுவுநிலைகோண
  4. To be envious, displeaced, to take umbrage, to have antipathy, வெறுப்புற
  5. v. a. To break, to snap off, முறிக்க. (p.)
  • கோடாதகோல் — A right sceptre, just government.
  • கோடாதமனம் — A liberal mind, a benevolent mind. 2. A mind free from envy, guile, bias, &c.
  • கோடாதமொழி — Unfailing promises. (p.)
  • கோடாமை — Straight forwardness, unbiasedness, &c.
  • கோட்டம் — Crookedness, bent, flexture, வளைவு. 2. Grudging, malice, envy, அழுக்காறு. 3. Partiality, swerving from rectitude, injustice, obliquity, கோணல். 4. [prov.] Lines, figures, diagrams made of rice-flour, &c., on the floor in religious ceremonies, மாக்கோலம்; (ex கோடு.)
  • முகங்கோடுதல் — Making a wry face through discontent, dissatisfaction, umbrage, sorrow, &c. சொற்கோட்டமில்லதுசெப்பமொருதலையாவுட் கோட்டமின்மைபெறின். Freedom from obliquity of speech is rectitude, if there be a (corresponding) freedom from bias of mind. (குற.)

Fabricius (1972)

கோடு — noun
  1. a line or draught, வரி
  2. a horn, cornet, கொம்பு
  3. a branch of a tree, கிளை
  4. a peak or top of a hill, மலையினுச்சி
  5. tusk of an elephant, தந்தம்
  6. the horn or extre- mity of the waxing or waning moon, பிறைக்கோடு
  7. a dam, bank, வரம்பு
  8. multitude, திரள்
  9. crookedness, வளைவு
  10. a fortified place, a strong- hold, அரணிருக்கை
  11. a conch, சங்கு
  12. a tank, குளம்
  13. stripe or border as of a cloth, ஆடைக்கரை
  14. side, பக்கம்
  15. a bunch or cluster, குலை
  16. coil of hair, மயிர் முடி
  • கோடியர் — professional dancers.
  • கோடு கிழிக்க–கீற–போட — to draw lines.
  • கோடு கோடாயிருக்க — to be full of lines.
  • கோடுவாய்–வாயிலிருந்து வழி யும் நீர்–கோட்டுவாய் — dribble, . Also .
  • கோட்டுப்பூ–பூ — see under .
  • கோட்டில் வாழ்விலங்கு — animals living on branches of trees as squirrels, monkeys etc.
கோடு — noun
  1. hardship (கொடுமை)
  2. (Eng. court) a court of justice நீதிஸ்தலம்
கோடு — v. i.
  1. v. i. (கோணு) bend, be crooked, வளை
  2. deviate, swerve, be partial or biassed, நெறிதப்பு
  3. be displeased or dissatisfied; v. t. bend, break, முறி
  • கோடாத கோல் — a right sceptre, just and impartial government.
  • கோடாமொழி — an infalliable word, unfailing promise.
  • கோடாத மனம் — an unbiassed mind, a liberal mind.
  • கோடாமை — straight forwardness.
  • கோட்டம் — crookedness, partiality; 2. malice, envy.
  • மனக்கோட்டம் — bias or prejudice of the mind.

Tamil Moli Akarathi (1928)

கோடு (kōṭu)
  1. அரனிருக்கை, அறை, ஊதிடு கொம்பு, கூட்டம், கோடென்னேவ ல், சங்கு, சுழி, திரள், நத்தை, நீர்க் கரை, பக்கம், மரக்கொம்பு, மலையினு ச்சி, வஞ்சனை, வட்டம், வரம்பு, வரி, வரிசூழ்ந்தவிடம், வளைவு, விலங்கின் கொம்பு
கோடு (kōṭu)
  1. அரணிருக்கை, ஊதிடுகொம்பு கோடென்னேவல், சங்கு, நீர்க்கரை, மரக்கொம்பு, மலையினுச்சி, யானைக் கொம்பு, வஞ்சனை, வரம்பு, விலங் கின்கொம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோடு² (kōṭu) — noun
  1. < கோடு-
  2. [K. kōḍu.] Crookedness, flexure, obliquity; வளைவு
  3. Partiality, bias; நடுநிலை நீங்குகை. கோடிறீக் கூற் றம் (நாலடி, 5)
  4. [K. kōḍu.] Tusk; யானை பன்றிகளின் தந்தம். மத்த யானையின் கோடும் (தேவா. 39, 1)
  5. Horn; விலங்கின் கொம்பு. கோட்டிடை யாடினை கூத்து (திவ். இயற். திருவிருத். 21)
  6. Blowing-horn; ஊது கொம்பு. கடுங்கட் காவலர் கொடுங்கோடு சிலைப்ப (பெருங். உஞ்சைக். 58, 25)
  7. A horn-like contrivance used for discharging water in jets; நீர்வீசுங் கொம்பு. நீர்மணக் கோட்டி னர் (பரிபா. 6, 34)
  8. [K. kōḍu.] Branch of a tree; மரக்கொம்பு. (பிங்.)
  9. Body of a lute; யாழ்த்தண்டு. மகர யாழின் வான்கோடு தழீஇ (மணி. 4, 56)
  10. Symbol 'ெ', 'ே',, as in கெ, கே, etc.; 'கெ' 'கே' முதலியவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு. விலங்கு பெற்றும் கோடுபெற்றும் புள்ளி பெற்றும் (தொல். எழுத். 17, உரை)
  11. Crescent moon; பிறைமதி. கோடு மிலைந்தான் (திருக்கோ. 149)
  12. Chank; சங்கு. கோடுமுழங் கிமிழிசை யெடுப்பும் (பதிற்றுப். 50, 25)
  13. Bunch, cluster; குலை. (பிங்.)
  14. Coil of hair; மயிர்முடி. குரற்கூந்தற் கோடு (கலித். 72, 20)
  15. [K. kōḍu, M. kōṭu.] Summit of a hill, peak; மலைச்சிகரம். பொற்கோட் டிமயமும் (புறநா. 2, 24)
  16. Mountain; மலை. குமரிக் கோடும் (சிலப். 11, 20)
  17. High ground, elevation; மேட்டுநிலம். நறுங்காழ் கொன்று கோட் டின் வித்திய (மதுரைக். 286)
  18. Line; வரி
  19. Diagram, figure, as a square, circle, etc., drawn for playing games; ஆட்டம் முதலியவற்றுக்காக வகுத்த தானம். கோடின்றி வட்டாடல் கொள்வ தொக்கும் (தாயு. நினை. 2)
  20. [T. kōḍu.] Bank of a river, bund of a tank or well; நீர்க்கரை. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள், 523)
  21. Tank; குளம். கோடெலா நிறையக் குவளைம் மலரும் (தேவா. 425, 4)
  22. [M. kōṭṭa.] Cycle of time; காலவட்டம். கலியுகக் கோட்டுநாள் (T.A.S. H.O.P. 5)
  23. Ridge, as in a field; border, limit; வரம்பு. (பிங்.)
  24. Stripe, border, as of a cloth; ஆடைக்கரை. கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடி, 131)
  25. Cusp, horn, as of the crescent moon; முனை. கோடுகூடு மதியம் (பதிற்றுப். 31, 12)
  26. Side; பக்கம். கோடுய ரடுப்பு (புறநா. 164)
  27. [M. kōṭṭa.] Stronghold, fortified place; அரணிருக்கை. (W.)
கோடு³ (kōṭu) — noun
  1. Hardship, oppression; கொடுமை. கோடற வைத்த கோடாக் கொள்கையும் (பதிற்றுப். 37, 11).
கோடு⁴ (kōṭu) — noun
  1. court. [T. kōṭu.] Court of justice; நீதிஸ்தலம். கோடுகச்சேரி. Colloq.

IndoWordNet

கோடு — noun
  1. ஒரு பரப்பில் ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு.
கோடு — noun
  1. மெல்லிய அல்லது நீளமான அடையாளம்

பொருள் அட்ஷரேகை அட்சரேகை அட்சக்கோடு விட்டம் பூமத்தியரேகை பக்கம் வளைந்த கோடு நேர்குத்துக்கோடு தையல் நிறுத்தற்குறி கைரேகை ரேகை அறிகுறி அடையாளம் லச்சினை கூறு இலச்சினை அச்சு தன்மை கோள் ஒப்பனை அணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோடு
  1. வளைவு
  2. நடுநிலை நீங்குகை
  3. யானையின் '