veerar சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று. போர்ப் படைகள் ---ஓர் அரசின் பாதுகாப்புக்குத்தேவையான ஆறுவகைப் படைகள்...மூலப்படை, கூலிப்படை,நாட்டுப்படை, காட்டுப்படை,துணைபடை,பகைப்படை..
army forces, troops military
Tamil Wiktionary
படை
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
போர்ப் படைகள் ---ஓர் அரசின் பாதுகாப்புக்குத்தேவையான ஆறுவகைப் படைகள்...மூலப்படை
கூலிப்படை
நாட்டுப்படை
காட்டுப்படை
துணைபடை
பகைப்படை..
பரிவாரம்...ஒருவரின் உற்றார் உறவினர்களும்
வேண்டியவர்களும்
ஆய்தம் (பொது)
கருவி
சாதனம்
இரத்தினத்திரயம்
முசுண்டி ()
கலப்பை () படை யுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு
Lying down for sleep, சயனிக்கை; [ex படு, v. a.] அஞ்சு, ஆறு, ஏழுபடை. The wall has five six or seven layers. படைமுறிகின்றது. The army is defeated. படையிற்பட்டான். He fell in battle
படைக்கால்–படைக்காற்பலகை — The wooden part of the plough-share to which the iron point is attached.
படைக்குழப்பம் — Insurrection, war; commotion of war.
படைக்கோலம் — Equipment for war, accoutrements, warlike costume.
படைச்சனம்–படையாள் — An army, military troops.
படை (paṭai) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To make, create, form, cause to be, &c. See சிருஷ்டி, v
To present or distribute food to guests, &c., பரிமாற. (சது.)
To devote or offer boiled rice, &c., to the gods, manes, or idols, நிவேதிக்க
To acquire, to secure, to possess, சம்பாதிக்க
To keep and sustain, as a wife, child, &c., உடைத்தாக.– For compounds, explaining the different meanings, see சோறு, புகழ், பெயர், &c. அவன்நன்றாய்ப்படைத்தான். He has served him up; i. e. given him a beating
படைத்துக்கழித்தல்–படைத்துமாற்றுதல் — Presenting offerings to the idol, and then removing them.
படைத்தோன் — The Supreme Being, கடவுள். 2. As சிருட்டிகர்த்தா.
படைப்பு — Greating, evolving, &c., as சிருட்டிப்பு, which see. 2. Meat-offering; distribution of food, acquisition, possession, &c., as the verb. படைப்புப்போடுதல். Presenting an offering to a deity.
Fabricius (1972)
படை — noun
a layer in a mud wall, அடுக்கு
an army, சேனை
battle, warfare போர்
a weapon, arms to any kind, ஆயுதம்
a plough- share, கொழு
a saddle, கல்லணை
a mob, a rabble, திரள்
படை கூட்ட — to gather troops.
படைக் கப்பல் — a man of war.
படைக்கலம் — a weapon, an instrument.
படைச்சனம்–படையாள் — an army, military troops.
படைச்சால் — a furrow in ploughing.
படைத்தலைவன் — the captain or commander of an army, a military reader.
படை — v. t.
v. t. make, create, சிருஷ்டி
set in order, ஒழுங்குப்படுத்து
keep and sustain (as a wife etc.) ஆதரி
offer (boiled rice etc. to an idol)
பெண்சாதியைப் படைக்க — to keep & sustain a wife.
அவனை நன்றாய்ப்படைத்தான் — he has served him up, he has given him a good flogging.
படைத்தோன் — the creator.
படைப்பு — creating; 2. creature; 3. meat-offering.
அதிபம், அனீகம், ககனம், கவனம், சேனை, ஞாட்சு, தண்டம், தண்டு, தந் திரம், தளம், தார், தானை, பகுதி, பதா சினி, பதாதி, பலம், பாடி பூகம், வா கினி வானி, படைத்தலைவன் சேநா பதி பொருநன்
படை (paṭai)
ஆயுதம், கலப்பை, கல்லணை, தானை, படையென்னேவல், போர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
படை² (paṭai) — noun
Army; சேனை. (பிங்.) படையியங் கரவம் (தொல். பொ. 58)
Forces for the defence of a kingdom, of six kinds, viz., mūla-p-paṭai, kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai, tuṇai-p-paṭai, pakai-p-paṭai; மூலப்படை, கூலிப் படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்ற அறவகைச்சேனை. (குறள், 762, உரை.)
Mob, rabble, crowd; திரள். Colloq
Relations and attendants; பரிவாரம். அவன் படைகளுக்கு யார் போட்டுமுடியும்?
Weapons, arms of any kind; ஆயுதம். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள், 828)
Instrument, implement, tool; கருவி
Means, agency; சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள், 555)
(Jaina.) Traid of excellent things. See இரத்தினத்திரயம். படை மூன்றும் (சீவக. 2813)
A sledge-like weapon, used in war; முசுண்டி. (பிங்.)
Ploughshare; கலப்பை. (பிங்.) படை யுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு. 7)