கழகம்
ஓலக்கம் கழ் + அகம் கழகம் புலவர் கூடிய சபை.
assembly assembly of poets party
Tamil Wiktionary
கழகம் — பெயர்ச்சொல் (Noun)
- ஓலக்கம்
- கழ் + அகம் கழகம்
- புலவர் கூடிய சபை.
- கல்விபயிலும் இடம்
- படை மல் முதலியன பயிலும் இடம்
- சூதாடும் இடம்
- சூது
Fabricius (1972)
கழகம் — noun
- , கழகு, s. a college, கலாசாலை
- the assembly of the learned, கல்விச் சங்கம்
- a theatre, stage, a place for wrestling, boxing etc; கல்விபயில்சாலை
- a place of gambling, gambling
Tamil Moli Akarathi (1928)
கழகம் (kaḻakam)
- கல்லி, சூது, படை, மல், இவை பயிலிடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கழகம் (kaḻakam) — noun
- Assembly; ஒலக்கம். கழகமேறேல் நம்பீ (திவ். திருவாய். 6, 2, 6)
- Assembly of poets; புலவர் கூடிய சபை. (திவா.)
- Public place of learning, college; கல்விபயிலும் இடம். கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பரா. நாட்டுப். 48)
- Place for practising the use of arms; place for wrestling; boxing hall; gymnasium; படை மல் முதலியன பயிலும் இடம். (திவா.)
- Place of gambling; சூதாடும் இடம். கழகத்துக் காலை புகின் (குறள், 937)
- Gambling; சூது. கழகத் தியலும் (பு. வெ. 12, வென்றிப். 16)