பறி

ஒன்றில் இருந்து பிரித்து எடு பறிப்பு - pluck,snatch

to slip out, run away; flow out to be displaced suddenly; to be uprooted to be loosened; cut off; torn apart; lost

Tamil Wiktionary

பறி — பெயர்ச்சொல் (Noun)
  1. பறிப்பு

[object Object]

பறிமுதல் பறிகொடு இழுப்பறி வழிப்பறி பூப்பறி தட்டிப்பறி குழிப்பறி பணம்பறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பறி³ (paṟi) — noun
  1. < பறி²-
  2. Plucking, cropping, picking off; பிடுங்குகை. பறிகொடலையினார் (தேவா. 572, 10)
  3. Seizure, plunder, depredation, pillage, extortion; கொள்ளை
  4. Goods unloaded or discharged, as from a cart, a boat; இறக்கின பாரம். (W.)
  5. Contrivance for catching fish; மீன்பிடிக்குங் கருவி. பறியுடைமுன்றில் (பெரும்பாண். 265.)
  6. Mat of palm leaf; பனை யோலைப் பாய். பறிப்புறத் திட்ட பானொடை யிடை யன் (நற். 142)
  7. Body; உடம்பு. பறியே சுமந்துழல் வீர் பறிநரி கீறுவ தறியீர் (தேவா. 1154, 2)
  8. Gold, a slang term; பொன். பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றும் (தொல். சொல். 17, இளம்பூ.)

Winslow (1862)

பறி (paṟi) — noun
  1. A basket for catching fish, மீன் படுக்குங்கருவி. (c.)
  2. A loose kind of basket for fish, grass, &c., மீன்பெய்யுங்கருவி. (சது.)
  3. See பறி, v. a
  • பறிபின்ன–பறிமுடைய — To braid the பறி basket.
  • பறிபோட–பறிவைக்க — To set the பறி in the water for fishing.
பறி (paṟi)
  1. [among goldsmiths.] Gold, பொன். (சது.) W. p. 614. B'HARU.
பறி (paṟi) — infinitive
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To be displaced suddenly, to escape, to slip out, to run away, as a horse, சுழிய
  2. To be capsized, to give way, to tilt or be on the poise, நிலைபெயர
  3. To escape, as breath in breathing, sighing, &c., or as air from a bottle; to fly off, as steam, heat from the system, &c., வெளிப்பட
  4. To fly as an arrow, to be discharged, பிரயோகிக்கப்பட. 5.To explode, to be voided, as wind &c., from the stomach or bowels, வெடியெழ
  5. To move forward, as the sight in reading, the feet in walking முன்செல்ல. (c.)
  6. To overflow, as tears; to flow off quickly, as water, சொரிய
  7. To be gone or lost. as property, office, influence, இல்லாமற்போக
  8. [in combin.] To be at a distance, to get to a distance, தூரப்பட
  9. To sink in, as the belly by hunger, the cholera, &c., ஒட்டிப்போக
  10. (R.) To be gathered, as tribute, debt, &c
  • அவனுக்குப்பறியவில்லை–கடன்பறியவில்லை–பறிந்துபோகிறமேகங்கள்–அவனுக்குமூச்சுப்பறிகிறது — . He has not succeeded. . The debt is not collected. . . . . . . .Disappearing clouds. . He sighs.
  • பறிய — A little further.–For the compounds expressing the different meanings, see சத்தம்,, சூடு, பிராணன். வாயு, &c. பறியப்பார். Look further on.
  • பறியவிட — To let go, let fall out.
  • பறிவு — Discharge, sudden dislodgement, slipping out, கழிவு. 2. Snapping, explosion, அதிருகை. 3. Giving way, as a post, நிலைபெயர்கை. 4.Sinking, falling in, as of the belly, ஒட்டுகை.

Fabricius (1972)

பறி — s. (among goldsmiths)
  1. (among goldsmiths) gold, பொன்.
பறி — noun
  1. a basket for catching fish
  2. a basket for storing fish
  3. (v. n.) pillage, depredation, taking by force
  • பறிகாரன் — a spoiler, a robber.
  • பறிகொடுக்க–பட — to be spoiled or robbed.
  • பறிபின்ன–முடைய–பறி — to braid the basket.
  • பறிபோட–வைக்க–பறி — to set the in the water for fishing.
பறி — v. i.
  1. v. i. be displaced, get loose, slip out, run away (as a horse), கழி
  2. overflow with water (as the eyes or a cup), escape (as breath), fly off
  3. sink in as the belly by hunger, cholera etc
  • கடன் பறியவில்லை — the debt is not collected.
  • பறிந்துபோகிற மேகங்கள் — clouds that are dispersed.

Tamil Moli Akarathi (1928)

பறி (paṟi)
  1. பறித்தல், பறியென்னேவல், பொன், மீன்படக்குங்கருவி, மீன் பெய்யுங் கருவி
பறி (paṟi)
  1. பறியென்னேவல், பொன், மீன்ப டுக்குங்கருவி, மீன்பெய்யுங்கருவி

IndoWordNet

பறி — verb
  1. ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்
பறி — verb
  1. அறுத்து தனியாக்குவது
பறி — verb
  1. பூ,காய் போன்றவற்றைச் செடி, கொடி போன்றவற்றிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்தல்.
பறி — verb
  1. பிடுங்குதல்
பறி — verb
  1. மலரை செடியிலிருந்து தனிமைப் படுத்துதல்

எடு பிடுங்கு நீக்கு களை அகற்று விலக்கு தனித்திரு தனியாக்கு கடிக்க

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பறி
  1. பிடுங்குகை
  2. கொள்ளை
  3. இறக்கின பாரம்
  4. மீன்பிடிக்குங் கருவி
  5. பனையோலைப் பாய்
  6. உடம்பு
  7. பொன்