பழுப்பு
Winslow (1862)
பழுப்பு (paḻuppu) — noun
- Yellow orpiment, அரிதாரம்
- A leaf, &c., yellow by age, முதிர்ந்து மஞ்சணிறப்பட்டஇலை. See பழு. v
Fabricius (1972)
பழுப்பு — noun
- yellow orpiment, அரிதாரம்
- a leaf yellow by age
- v. n. of பழு
- பழுப்பானது–பழுப்புண்டானது–பழுப் படைந்தது — that which is withering or fading.
Tamil Moli Akarathi (1928)
பழுப்பு (paḻuppu)
- அரிதாரம், ஒருநிறம், நென்பு, பழுத்தலாயிருப்பது
பழுப்பு (paḻuppu)
- அரிதாரம், இலைமுதலியமுதிர்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பழுப்பு¹ (paḻuppu) — noun
- < பழு-
- Ripeness; yellowness of fruits; change of colour; natural colour of gold; பொன்னிறம்
- Yellow orpiment; அரிதாரம். பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287)
- Leaf turned yellow with age; முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை
- Pink, reddish colour; light pink, as of cloth; சிவப்பு. அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3)
- Pus; சீழ். புண்ணிலுள்ள பழுப்பை யெடுத்துவிடவேண் டும்
பழுப்பு² (paḻuppu) — noun
- See பழு³
- பழுப்பேணி (கந்தபு. வள்ளியம். 50)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பழுப்பு
- பொன்னிறம்
- அரிதாரம்
- முதிர்ந்து மஞ்சள் நிறப்பட்ட இலை
- சிவப்பு
- சீழ்
- ஏணியின் படிச்சட்டம்