புகை

- smoke புகைபோக்கி - exhaust

smoke, fume mist, haze incense (fragrant smoke of frankincense)

Tamil Wiktionary

புகை

[object Object]

Winslow (1862)

புகை (pukai) — noun
  1. Smoke, fume, தூமம்
  2. Mist, haze, பனிப்படலம்
  3. Vapor, exhalation, steam, fumigation, நீராவி. (c.)
  4. Sign of the guardian of the south-east, தென்கீழ்த்திசைப் பாலன்குறி
  5. The distance of a yojana, யோசனைதூரம். (சது.)
  • புகைகட்ட — To smoke, to fumigate parts of the body, for local ailments, as for tooth-ache, impaired gums, &c. 2. [fig.] To impart a gold or silver color by fumigation.
  • புகைகாட்ட — To smoke, to fumigate for a disease. 2. To expel flies, devils, &c., by fumigation. 3. To apply or infuse incense. 4. To tincture or impregnate with smoke.
  • புகைகுடித்தல்–புகையிலைகுடித்தல் — Smoking tobacco.
  • புகைக்கப்பல் — A steam vessel.
  • புகைக்காடு — A great smoke, a thick mist, a fog.
  • புகைக்கூடு — A chimney. 2. A balloon.
புகை (pukai) — verbal noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To smoke, to fume, to reek, புகையெழ
  2. To emit vapor or steam, to be exhaled, ஆவியெழ
  3. [fig.] To begin to be spoken of, or made public to get air, to come out, செய்திவெளிப்படத்தொடங்க
  4. To burn as the heart, to be chagrined, to have ill-will, to fume with anger, to be furious, மனமெரிய
  5. [prov.] To become unfruitful as grain, to wither as plants, பயிர்தீய
  6. To be ruined as a family, குடிநாசமாக. (c.) ஏனக்குத்தொண்டைபுகைகிறது. I feel irritation in the throat. கண்புகைகிறது. My sight is dim. இரசம்புகைந்துபோயிற்று. The quicksilver is all gone to smoke
  • புகைதல்–புகைவு — Smoking, fuming, reeking, ஆவிபறிவு. 2. Steaming, exhaling, ஆவியெழுகை. 3. Fuming with anger, சினக்குறிப்பு.
புகை (pukai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cause to smoke, to fumigate, புகையச் செய்ய. (c.)
  • புகைத்தல் — Fuming with anger, being in a fury, heated with rage, சினக்குறிப்பு. (சது.)
  • புகைப்பு — Smoking, fumigation, smouldering, புகையெழச்செய்கை.

Fabricius (1972)

புகை — noun
  1. smoke, fume, தூமம்
  2. vapour, steam, நீராவி
  3. mist, haze, பனிப் படலம்
  4. the distance of a yojana, ஒரு யோசனைதூரம்
  5. sign of the guardian of the south-east, தென் கீழ்த்திசைப் பாலன்குறி
  • புகை கட்ட — to fumigate parts of the body for local ailments; to impart a gold or silver colour by fumigation.
  • புகை காட்ட — to fumigate.
  • புகை குடிக்க — to smoke tobacco.
  • புகைக்கப்பல் — a steam vessel.
  • புகைக்காடு — a great or thick smoke.
  • புகைக்கூடு — a chimney; a balloon.
புகை — v. i.
  1. v. i. smoke, emit smoke or vapour, reek
  2. burn (as the heart). fume with anger, மனமெரி
  3. be smoked
  4. be dried in smoke
  • புகைதல் — smoking steaming, being enraged.
புகை — v. t.
  1. v. t. smoke something, fumigate, புகைகாட்டு
  2. dry in smoke, perfume, புகையூது
  • புகைத்தல் — fuming with anger.
  • புகைப்பு — smoking, fumigation.

Tamil Moli Akarathi (1928)

புகை (pukai)
  1. தூபம், இதுதென்கீழ்த்திசைப் பாலன்குறி, நீராவி, பனிப்படலம், புகையென்னேவல், யோசனைதூரம்
புகை (pukai)
  1. அரி ஆலி, தூபம், தூமம் அன்றி யும் நறும்புகையின் பெயர்
  2. இந்தன ம், குய், நறை, வெடி
புகை (pukai)
  1. தூமம், தென்கீழ்த்திசைப் பா லன்குறி, புகையென்னேவல், யோ சனைதூரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புகை¹ (pukai) — noun
  1. prob. புகு¹-. [T. poga, K. poge, M. puga.]
  2. Smoke, fume; எரிகின்ற பொருளினின்றெழும் கரும்படலம். வேள்விக்கொழும் புகையும் (சீவக. 2977)
  3. Mist, haze; பனிப் படலம். (W.)
  4. Vapour, steam; ஆவி. புகை வேய் குன்றத்து (பெரும்பாண். 19)
  5. Sign of the guardian of the South East; தென்கீழ்த்திசைப் பாலன் குறி. (சூடா.)
  6. Distance of a yōjana; யோசனைத்தூரம். ஐஞ்நூறுபுகைபெறும் (யசோதர. 1, 34)
  7. Cataract of the eye; கண்ணில்விழும் படல வகை. (சீவரட்.)
  8. Distress; துக்கம். சிந்தைபுகை யில்லை (திருமந். 1346)
  9. Flaw in a ruby; மாணிக் கத்தின் குற்றவகை. புகையொடு திருகல் (திருவாலவா. 25, 14)
  10. Incense; சாம்பிராணித் தூபம். புகையும் சாந்தும் (சிலப். 5, 198)
  11. Gong struck while incense is burnt. See தூபமணி. புகை யணங்க (பு. வெ. 10, பொது. 8)
  12. A hell. See புகைவட்டம். ஈரும் புகையிரு ளோடு (ஏலாதி, 67)

IndoWordNet

புகை — noun
  1. ஒரு பொருள் எரியும் போது உண்டாக்கும் கரித்தூள் நிரம்பிய சாம்பல் நிற வாயு.

இயற்கைப் பொருட்கள் குங்கிலியம் உலூகலம் குக்குலுவம் குங்குலிகம் குற்குலு சலோர்ச்சம் சாளம் திசாயம் துசம் தேவகந்தம் உலூகம் குங்குகுலியம் சலோர்க்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புகை
  1. நெருப்பிலிருந்து தோன்றும் கரும்படலம்
  2. பனிப்படலம்
  3. ஆவி
  4. தென்கழ்த் திசைப்பாலன்