முளை

சிறு செடி, அரும்பு கோல், குச்சி விதையிலிருந்து செடியாக மாறு

to sprout sprout, shoot

Tamil Wiktionary

முளை — பெயர்ச்சொல் (Noun)
  1. முள்
  2. சிறு செடி
  3. அரும்பு
  4. கோல்
  5. குச்சி

[object Object]

Winslow (1862)

முளை (muḷai) — noun
  1. A germ, a shoot, the young shoot of a tree or plant, அங்குரம்
  2. a wedge of a conical shape, not so flat as the ஆப்பு
  3. A peg, தறி
  4. Hook of a hinge, கதவின்முளை
  5. Staple of a padlock, பூட்டின் முளை
  6. A son, மகன்
  7. The core of a boil, பருவின்முளை
  8. Bambu, மூங்கில்
  9. A club, தண்டாயுதம்
  10. [in anat.] a process. விளையும்பயிர்முளையிலேதெரியும். The nature of the harvest is known by the young shoot. as, Anglice, "the child is father of the man." [prov.]
  • முளைகடாவ — To drive a peg, wedge, &c. 2. (fig.) To restrain, restrict.
  • முளைகட்ட — To put moistened seed, as கம்பு or துவரை, into a basket to germinate for eating; or, paddy, &c., for sowing.
  • முளைக்கீரை — A kind of tender greens.
  • முளைக்குச்சி–முளைக்கூர்ச்சு — A pin or peg.
  • முளைக்கொட்டு — A kind of play among girls, dancing around pots of sprouting seeds. (Beschi.)
  • முளைதெளிக்க — To sow seeds, or plant young plants.
முளை (muḷai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To spring, to sprout–as seeds, shoots, horns, hair, the beard, &c., to germinate, vegetate, வெளிப்பட. (c.)
  2. To appear, to come to light, அரும்ப. நீஏங்கேயிருந்துமுளைத்தாய். Where did you come from?
  • முளைப்பு — Growth, growing, production, வளருகை. 2. Springing, sprouting as seeds; shooting as horns, hair, &c., அரும்புகை.

Fabricius (1972)

முளை — noun
  1. a germ, a young shoot of a tree or plant, துளிர்
  2. a wedge, ஆப்பு
  3. a peg, a stake fixed in the ground, தறி
  4. hook of a hinge
  5. the core of a boil
  6. a stamp to coin money with
  7. a wooden pin on which yarn is wound
  8. bambu, மூங்கில்
  9. a club, தண்டாயுதம்
  10. (in anat.) a process
  • முளை வருகிறது–கிளம்புகிறது — the seed shoots, grows up.
  • முளைகடாவ — to drive a peg, wedge etc.; 2. to restrain.
  • முளை கட்ட — to put moistened seeds into a basket to germinate.
  • முளைக்கீரை — a kind of tender greens.
  • முளை தெளிக்க — to sow seeds or plant young plants.
  • முளையடிக்க — to drive wooden pegs into the earth; to coin, to stamp metal.
முளை — v. i.
  1. v. i. grow up, shoot, germinate, துளிர்விடு
  2. come to light, come out, appear, வெளிப்படு
  • நீயும் முளைத்தாயோ — didst thou also appear?

Tamil Moli Akarathi (1928)

முளை (muḷai)
  1. அங்குரம், ஆப்பு, தண்டாயுதம், தறி, நாணயவச்சு, பருவின் முளை, மகன், முளையாணி, முளையென்னே வல், மூங்கில்
முளை (muḷai)
  1. அங்குரம், கால், தரி
முளை (muḷai)
  1. அங்குரம், தண்டாயுதம், தறி, ம கன், முளையென்னேவல், மூங்கில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முளை³ (muḷai) — noun
  1. Shoot, tender shoot of trees or plants; seed-leaf; வித்தினின்று வெளிப்படுவது. (சூடா.) வித்திய வெண்முளை (ஐங்குறு. 29)
  2. Tenderness; இளமை. முளையமை திங்கள் (கம்பரா. கும்பக. 16)
  3. Young tender plant; seedling; மரக்கன்று. அதன்றாள் வழியே முளையோங்குபு (சீவக. 223)
  4. See முளையான். Colloq
  5. Bamboo; மூங்கில். (பிங்.)
  6. Son; மகன். (பிங்.)
  7. Core of a boil; புண்முளை. கட்டி யில் முளை இன்னும் வெளிவரவில்லை
  8. Piles. See மூலமுளை
  9. Club with knobs; தண்டாயுதம். (பிங்.) முசுண்டியு முளையும் (கம்பரா. பிரமாத். 108)
  10. Peg, stake; குறுந்தறி. குத்து முளை செறித்த விதானத்து (பெருங். இலாவாண. 5, 24)
  11. Handle, as of a millstone; திரிகையின் கைப்பிடி. Loc
  12. Pivot, as of a millstone; திரிகையின் அச்சு. Loc
  13. Wedge-shaped piece of wood used for tightening or securing; பிளப்பில் அடிக்க உதவும் கூருடைய சிறு மரத்துண்டு
  14. Pivot, pin of door; கதவு முதலியவற்றின் குடுமி
  15. Staple of a padlock; நாதாங்கி மாட்ட உதவும் கதவுறுப்பு. (W.)
  16. Die; முத்திரையச்சு. (யாழ். அக.)
  17. An ancient coin; ஒரு பழைய நாணயம்
  18. Sharp end or point; முனை. முள்ளுறழ் முளை யெயிற்று (கலித். 4)

IndoWordNet

முளை — noun
  1. மரம், செடி முதலியவற்றில் இலை தோன்றுதல்
முளை — noun
  1. விதையிலிருந்து புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி.
முளை — noun
  1. மரக்கிளைகளின் நுனிப்பகுதி
முளை — noun
  1. மாடு போன்றவற்றைக் கட்டும் சிறு கழி
முளை — verb
  1. முளை

துளிர் தளிர் இலை சிறுசெடி மூங்கில் முளை தாவரப்பகுதி தாவர பாகம் சாதனம் கருவி சங்கு இரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முளை
  1. வித்தினின்று வெளிவருவது
  2. இளமை
  3. மரக்கன்று
  4. காண்க: முளையான்
  5. மூங்கில்
  6. மகன்
  7. புண்முளை
  8. தண்டாயுதம்: மூலமுளை
  9. குறுந்தறி
  10. திரிகையின் கைப்பிடி
  11. பிளப்பில் அடிக்க உதவும் கூருடைய சிறு மரத்துண்டு
  12. கதவு முதலியவற்றின் குடுமி
  13. முனை