வெட்டுக்காயம் — A wound made by a sword, natchet, &c.
வெட்டுக்கிலக்குப்பார்க்க — To watch an opportunity for wounding another.
வெட்டுக்கிளி — A grass-hopper. See கிளி.
வெட்டுக்குருத்து — Saplings of a lopped tree.
வெட்டு (veṭṭu) — noun
, கிறேன், வெட்டினேன், வேன், வெட்ட, v. a. To cut, with a sword or axe, to cut off, to fell by a blow
To engrave, முத்திரைவெட்ட
To dig, as a well, தோண்ட
To injure, to mar–as insects, புழுவெட்ட
To strike off, as in measuring grain. See தலைவெட்ட. (c.) அதைவெட்டிப்போடு. Cut it down. அவனைவெட்டிக்கொன்றுபோட்டார்கள்.....They killed him by cutting [his throat]
வெட்டி — That which cuts, as மண்வெட்டி, புழுவெட்டி.
வாய்வெட்டி — Calumny, slander.
வெட்டரிவாள் — A scythe.
வெட்டிமுறிக்க — To fell a tree and cut it to pieces. 2. [fig.] To take great pains, to labor hard. நீஏன்னவெட்டிமுறிக்கிறாய்...... What hard labor you take?
வெட்டிரும்பு — A chisel for cutting iron.
வெட்டல் — Cutting, killing, digging, &c. 2. See மெய்ப்பரிசம், and ஊறுபாடு.
Fabricius (1972)
வெட்டு — noun
a cut, a stroke.
வெட்டுக்கிலக்குப் பார்க்க — to watch an opportunity to steal or to wound another.
வெட்டுக்கிளி — a locust.
வெட்டுக் குருத்து — shoots or saplings of a lopped tree.
வெட்டுணி — a villain, disobedient child.
வெட்டுண்ண–வெட்டுண்டுபோக–வெட் டுப்பட — to be cut off.
வெட்டுமுளை — money lately coined.
வெட்டு — v. t.
v. t. cut with a sword or axe, cut off, hew down, fell a tree
engrave
dig a well, foundation etc., தோண்டு
injure, mar (as insects)
strike off as in measuring grain
மரம் வெட்ட — to fell or cut down tree.
மண் வெட்ட — to dig out earth.
முத்திரை வெட்ட — to engrave seals.
வெட்டரிவாள் — a big curved knife, a scythe.
வெட்டல் — cutting, killing, digging.
வெட்டி — that which cuts.
Tamil Moli Akarathi (1928)
வெட்டு (veṭṭu)
ஓரூறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெட்டு² (veṭṭu)
, < வெட்டு-. n
Cutting; துண்டிப்பு. ஒரு வெட்டில் அந்த மரம் விழும்
Wound, cut; வெட்டுதலா லுண்டாம் புண் முதலி யன
Engraving; எழுத்து முதலியன பொறிக்கை. கல்வெட்டுச் சாசனம்
An ancient small coin; ஒருவகைப் பழைய சிறுநாணயம். தன்னுடைய வெட் டென்றும் (பணவிடு. 143)
Cutting by tailor; தையல்துணி வெட்டுகை. Mod
Cropping the hair; மயிர்கத்திரிக்கை. Mod
Removing a piece in chess and other games; ஆட்டக்காயை நீக்குகை
Stroke of fortune; திடீரென வரும் அதிர்ஷ்டம். அவனுக்குத் திடீரென ஒரு வெட்டு வெட் டிற்று. இரண்டாயிர ரூபா கிடைத்தது
Ostentation, pomp; பகட்டு. Loc
Cunning, hypocrisy, deceit; வஞ்சனை. — int. An expression used in driving away dogs; நாயை ஓட்டும்போது கூறுஞ் சொல். Loc
IndoWordNet
வெட்டு — verb
கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
வெட்டு — verb
கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
வெட்டு — noun
மாமிசத்திற்காக பறவை-கால்நடைகளை ஆயுதத்தைக் கொண்டு ஒரே முறை வெட்டுவது