அரை

half

Tamil Wiktionary

அரை — பெயர்ச்சொல் (Noun)
  1. இடுப்பு, பாதி.

[object Object]

அரைப்பு அரைத்தல் அரைவை அரைதல் ஒன்றரை இரண்டரை மூன்றரை நான்கரை ஐந்தரை ஆறரை ஏழரை எட்டரை ஒன்பதரை பத்தரை அறை பாதி அடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரை
  1. பாதி
  2. இடம்
  3. இடை
  4. தொடையின் மேற்பாகம்
  5. வயிறு
  6. அல்குல்
  7. ஒரு மரம்
  8. மரத் தின் அடிப்பக்கம்
  9. தண்டு
  10. அரசியல்

Winslow (1862)

அரை (arai) — noun
  1. Half, பாதி, (marked , , or இ.)
  2. Waist, middle, loins, இடை
  3. That part of the trunk of a tree, or shrub, which reaches from the ground to where the branches begin, (occurs only in composition) thus: கோழரை, a smooth trunk, like the plantain; பொரியரை, a rough trunk, like the tamarind or mangoe; முள்ளரை, a thorny trunk
  • அரைக்கச்சு–அரைக்கச்சை — A girdle, a belt, zone worn round the waist.
  • அரைக்கால் — The eighth part of the whole, half a quarter, marked , .)
  • அரைச்சதங்கை — A string of bells worn by children round the waist.
  • அரைஞாண்–அரைநாண்–அரைநூல் — A cord worn round the loins to which the cloth to cover the nakedness is attached, or sometimes worn over the inner cloth, and made of gold, silver, &c., called, பொன்னரைஞாண், வெள்ளியரைஞாண், பட்டையரைஞாண். &c.
  • அரைநலவன் — A bull not well castrated.
  • அரைநாவை — A part of the plough which receives the share bent one side and unfit for use, the tip of a hoe bent one side.
அரை (arai)
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To become ground, macerated, pulverized, &c., அரைபட
  2. To be grazed, galled, உரிஞ்ச
  3. To decay, degenerate, wane, அழிய. (c.)
அரை (arai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To grind, macerate, mash, pulverize, triturate, தேய்க்க
  2. To rub, grind as the wheels of a carriage, நசுக்க
  3. To trail, graze, gall, destroy by rubbing against, உரிஞ்ச
  4. To cause to wane, to destroy, அழிக்க. (c.)
  • பஞ்சரைக்க — To pick cotton.
  • கூட்டரைக்க — To grind curry stuff.
  • மாவரைக்க — To grind grain in a mill.
  • அரைப்பு — Grinding, triturating, &c., அரைக்கை. 2. s. Any thing ground, macerated, &c., அரைக்கை. 2. s. Any thing ground, macerated, &c., அரையல். 3. The refuse, residuum of இருப்பை seeds, இருப்பைப்பிண்ணாக்கு.
  • அரைப்புக்கட்டி — The refuse of இருப்பை seeds.
  • அரைப்புத்தேய்த்துமுழுகுகை — Bathing after rubbing the refuse of இருப்பை seed on the head, for extracting the oil, previously rubbed on.

Fabricius (1972)

அரை — noun
  1. half, பாதி
  2. the waist, இடை
  3. மரத்தினடி, trunk of a tree; &
  4. stomach
  • அரைக் கட்டிக்கொள் — gird yourself.
  • அரைக் கச்சை — girdle.
  • அரைக்கால் — an eighth, half a quarter.
  • அரைச்சட்டை — waist coat; jacket.
  • அரைஞாண்–அரைநாண் — cord round the loins.
  • அரைநாழிகை — half of an Indian hour or 12 minutes.
அரை — v. i.
  1. v. i. become pulverized, ground, நசுங்கு.
அரை — v. t.
  1. v. t. (caus. of அரை II. v. t.) grind, rub, தேய்
  2. destroy, அழி
  • அரைப்பு — grinding; 2. refuse of இலுப்பை, seeds.
  • பஞ்சரைக்க — to separate the seed from the cotton, to pick cotton.
  • மாவரைக்க — to grind grain in a mill.

Tamil Moli Akarathi (1928)

அரை (arai)
  1. அரையென்னேவல், இடை, பா திக்கொடி, ஒருமரம், உடம்பின் நடுவிடம், வயிறு
அரை (arai)
  1. அரையென்னுமேவல், இடை,பாதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரை¹ (arai) — noun
  1. prob. அறு¹. [T.K.M.Tu. ara.]
  2. Half; பாதி
  3. The fraction ½; அ, இ என்னும் பின்னவெண்
  4. Waist, loins; இடை. (திவ். பெரியாழ். 1, 6, 2.)
  5. Stomach; வயிறு. கன்ற ரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு. 307)
  6. See அல்குல். (பிங்.)
  7. Stem; தண்டு. முள்ளரைத் தா மரை (சிறுபாண். 183)
  8. Trunk of a tree; மரத்தி னடிப்பாகம். பொரியரைத் தேமா (நைடத. நாட். 20)
அரை² (arai) — noun
  1. Politics; அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக. 2430).
அரை³ (arai) — noun
  1. prob. அரசு. A tree, prob. pipal; மரவகை. அரைமரவியற்றே (தொல். எழுத்.304).

IndoWordNet

அரை — verb
  1. நீர்கலந்து நைத்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்.
அரை — verb
  1. அரைக்கும் வேலையை மற்றவரின் மூலம் செய்தல்
அரை — adjective
  1. முழு எண்ணிக்கையை குறிக்கக்கூடிய சொல்லுடன் அரை அதிகமாக குறிப்பிடுவது

வேலைசெய் பணிசெய் 12