அடி

கையால் தாக்கு தாக்கு ஓர் அளவு - 30 சென்டிமீட்டர், ஓர் அடி ஆகும்.

foot step, pace plan of action

Tamil Wiktionary

அடி
  1. கையால் தாக்கு
  2. தாக்கு
  3. ஓர் அளவு - 30 சென்டிமீட்டர்
  4. ஓர் அடி ஆகும்.
  5. கீழ்ப்பகுதி
  6. அடித்தல்
  7. பாதம்
  8. கழல்
  9. கால்
  10. பதம்

அடித்தல் அடிமை அடிப்படை அடிச்சுவடு அடிதடி அடிமரம் அடிப்பாகம் அடித்தட்டு அடிவாரம் அடிப்பகுதி அடிக்கட்டை அடிமுடி அடிபடு அடிபணி அடிவாங்கு குறளடி சிந்தடி கசையடி தடியடி திருவடி சவுக்கடி ஊமையடி சாட்டையடி நெருக்கடி மாட்டடி காற்றடி

Winslow (1862)

அடி (aṭi) — noun
  1. Source, origin, bottom, foundation, beginning, basis, ஆதி
  2. Lower part of a tree, mountain, page, &c., மரமுதலியவற்றினடி
  3. Lineage, ancestry, stock or family, descent, வமிசவழி
  4. Root or primitive of a word, the radical, முதனிலை
  5. A line in poetry, செய்யுளினோருறுப்பு. (See உறுப்பு)
  6. A man's foot, கால்
  7. A measure, twelve inches the length of a person's foot, also of a pace, step, ஓர்வகையளவு
  8. The print of a foot-step, foot-print, vestige, காற்சுவடு
  9. The sole of a sandal, shoe, &c., மிதியடியினடி
  10. Vicinity, neighborhood, nearness, proximity, சமீபம்
  11. Underside, lower part, கீழ். (பஞ். 24.)–Note. There are five kinds of அடி as a metrical line
  12. குறளடி
  13. சிந்தடி
  14. அளவடி, or நேரடி
  15. நெடிலடி
  16. கழிநெடிலடி which see
  • அடிகொள்ள — To begin, originate, be founded, தொடங்க.
  • அடிகோல — To lay a foundation for any building, அஸ்திவாரம்போட. 2. To take measures, undertake, make preparations, முயற்சிசெய்ய.
  • அடிக்கடி — Frequently, often repeatedly, reiteratedly, பலமுறை.
  • அடிக்குடி — Suburbs; ex குடி, village.
  • அடிக்குடில் — The suburb of a town, 2. A village of the Vedda people.
  • அடிக்குள்ளே — . Within a moment, in the same moment, before the next step is taken.
அடி (aṭi) — noun
  1. A blow, stroke, lash, stripe, a puff or blast or wind, அடிக்கும் அடி. (c.)
  • அடிபட–அடியுண்ண — To be beaten, அறையுண்ண. 2. To be proclaimed, published, made common, பகிரங்கப்பட. 3. To be consumed, expended, செலவாக. நாலாகாரியங்களிலுமடிப்பட்டவன். One versed in, or acquainted with many things.
  • அடிபிடி — A scuffle, fight, சண்டை.
அடி (aṭi) — noun
  1. [prop. ஏடி.] A word for calling a female of lower caste, or an inferior; as, வாடி, come here, you. (c.)

Fabricius (1972)

அடி — noun
  1. source, beginning, ஆதி
  2. bottom of a thing, lower part of a tree etc
  3. root of a word. தாது, முதனிலை
  4. a line in poetry
  5. man's foot; பாதம்
  6. foot-print, foot-step, காற் சுவடு
  7. pace, stride, தப்படி
  8. a measure 12 inches in length
  9. see அடா
  • என் அடியின் பிறகே வந்தான் — he came soon after me, he was at my heels.
  • சுவரடியிலே — at the bottom of the wall.
  • அடி ஒட்டிக்கொள்ளுகிறது — the feet suffer by walking in hot sand.
  • அடி எடுத்துவைக்க — to begin to walk as a child; 2. to make an attempt.
  • அடிக்கடி–அடிக்கொருக்கால் — frequently.
  • அடிக்கொரு நினைவாயிருக்க — to change one's thoughts often, to be inconstant.
அடி — noun
  1. blow, stroke, stripe.
  • அடித்தழும்பு — mark of a stripe.
  • அடிபட–உண்ண — to be beaten; 2. to become a public talk; 3. to be consumed.
  • அடிபிடி சண்டை — a quarral in which blows are exchanged; a scuffle.
  • அடியுண்ணி — one that often gets blows.
  • அடியோதண்டமாய் அடிக்க — to beat cruelly.
  • அடிமேலடி அடித்தால் அம்மியும் நகரும் — "" –Little strokes fell great oaks.
அடி — v. t.
  1. v. t. beat, flap, strike, அறை
  2. (with கொள்) obtain by contention or force
  3. v. i. blow as wind, வீசு
  4. fall as rain
  5. emit as a scent. Added to infi. of intr. verbs it makes them transitive as சிதறடி, (for சிதற அடி) disperse; பறக்கடி, put of flight
  • ஒருவனோடு அடித்துக்கொள்ள — to quarrel with one; to contend.
  • வீட்டையடித்துக்கொண்டு வந்தான் — he obtained the house by contention.
  • ஒருபேச்சு காதில் அடிபடுகிறது — there is a rumour.
  • காற்றடிக்கிறது — the wind blows.
  • நாற்றம் அடிக்கிறது — it stinks.
  • வாசனை யடிக்கிறது — it smells.

Tamil Moli Akarathi (1928)

அடி (aṭi)
  1. அடியென்னேவல், அடியோர், ஆதி, ஓரளவு, கடவுள், கால், காற் சுவடு, கீழ்மகளை விளிக்குஞ்சொல், செய்யுளுறுப்பி னொன்று, தாது, முன், மூலம், வமிசமூலம்
அடி (aṭi)
  1. 5 - அடி மோனைத் தொ டை, அடியெதுகைத்தொடை, அடி முரண்டொடை, அடியியைபுத்தொ டை, அடியளபெடைத்தொடை
அடி (aṭi)
  1. அடியென்னு மேவல், ஆதி, கால், செய்யுளுறுப்பினொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அடி² (aṭi) — noun
  1. aḍi, M. aṭi.] Blow, stroke, blast, as of wind; தாக்கு.
அடி³ (aṭi) — noun
  1. Foot; பாதம். (பிங்.)
  2. Measure of a foot 12"; அடியளவு
  3. Footprint; காற் றடம். (சம். அக.)
  4. Metrical line, of which there are five kinds, viz., குறளடி, சிந்தடி, அளவடி or நேரடி, நெடிலடி, கழிநெடிலடி. அடுத்து நடத்தலி னடியே (இலக். வி. 711)
  5. Base, bottom; கீழ்
  6. Stand, support, foundation; அடிப்பீடம். புஷ்கரபத்திமடல் அடியோடுமொன்று (S.I.I. ii, 15)
  7. Beginning; ஆதி. நடுவின் முடிவினி லடியி னன் றான பொருள் (ஞானவா. சனகரா. 22)
  8. Source, root of words or plants, origin of lineage, ancestry, or family; மூலம். (தாயு. தேசோ. 10.)
  9. Antiquity; பழைமை
  10. Place; இடம். (பிங்.)
  11. Racecourse; வையாளிவீதி. (சூடா.)
  12. A conventional term in gambling; சூதாடுவோர் குழூஉக்குறியுளெரன்று. அடியிது பொட்டையீ தென்பர் (கந்தபு. கயமுகனு. 168)
  13. Indulgence in intoxicating drinks; மதுபானம். Parav
  14. Riches, wealth; ஐசுவரியம். அடியுடையார்க்கெல் லாம் சாதித்துக்கொள்ளலாமே (ஈடு, 4, 2, 9)
  15. Nearness, proximity; சமீபம். கிணற்றடியில் நிற் காதே. Colloq
  16. Plan of action; உபாயம். நல்ல அடி எடுத்தாய். Colloq
அடி⁴ (aṭi) — int
  1. Ho! here you! used in addressing women in a familiar manner; ஒரு மகடூஉமுன்னிலைச் சொல். (கம்பரா. சூர்ப்பண. 93.)

IndoWordNet

அடி — verb
  1. கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை.

வேலைசெய்