அறை

ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம். கன்னத்தில் உள்ளங்கையால் அடிக்கும் அடி சொல், திரை, வீட்டின் பகுதி

room, apartment, chamber, cell compartment, chamber, drawer; partition (of a machine, cupboard, etc.) house

Tamil Wiktionary

அறை
  1. ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
  2. கன்னத்தில் உள்ளங்கையால் அடிக்கும் அடி
  3. சொல், திரை, வீட்டின் பகுதி
  4. அடித்தல்
  5. சொல்லுதல்

அறு சிற்றறை வகுப்பறை தனியறை ஓய்வறை படிப்பறை நிலவறை கருவறை இருட்டறை மணவறை வரவேற்பறை காட்சியறை பொருள்வைப்பறை பிணவறை சமையலறை படுக்கையறை பள்ளியறை குளியலறை கழிப்பறை அரை அடி வீடு

Winslow (1862)

அறை (aṟai) — noun
  1. The sound of a letter, ஏழுத்தினோசை
  2. A word or sentence as uttered (not as written), சொல்
  3. A rock, பாறை
  4. Peak of a mountain, மலையுச்சி. (p.)
  5. A room, a chamber, cell, a separate apartment of a house, அறைவீடு
  6. (c.) Drawer of a box or otherwise, பெட்டியறை
  7. (p.) The apartment in a chess- board, அரங்கு
  8. The cells in a bee-hive, தேன்கூட்டினறை
  9. Hanging ornaments, தூக்கங்கள்
  10. A curtain, திரைச்சீலை
  11. An excavation, cavern, முழைஞ்சு
  • அறைகுறை — Wants, necessities, troubles.
  • அறைகுறைபார்க்க — To repair damages.
  • அறைகூவ — To challenge, summon to combat. (p.)
  • அறைக்கட்டுக்கட்ட — To build rooms and apartments in a house. 2. To construct a temporary temple on a certain festival.
  • அறைபோக — To undermine, make an underground passage, கீழறுக்க. 2. To desert to an enemy.
  • அறைமுறையிட — To complain, state one's wants and complaints.
அறை (aṟai) — infinitive
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To slap, strike with the open hand or with any thing flat, அடிக்க
  2. To hammer a nail, &c. கடாவ
  3. To beat a drum, முழங்க
  4. To beat as wind, also as a wave, to dash as a mountain torrent, மோத
  5. (p.) To speak, say, declare, சொல்ல
  • ஆணியறைய — To drive a nail.
  • பறையறைய — To beat a tom- tom.
  • கன்னத்திலறைய — To beat on the cheek.
  • அறை — A slap with the hand, a blow with a hammer, &c., அடி. 2. A gust of wind, காற்றடிக்கை. 3. The dashing of a wave or of a mountain torrent, அலையடிக்கை. 4. The beating of a drum, பறையடிக்கை.
  • அறையுண்ண — To be struck.
  • மண்ணறை — Smearing clay on a wall, daubing as plaster, throwing or clapping on, &c.

Fabricius (1972)

அறை — noun
  1. a separate room, a chamber of a house
  2. a drawer
  3. v. n. a word or sentence as uttered (not written) சொல், கூற்று
  4. a slap on the cheek, அடி
  5. sound, சப்தம்
  6. wave, அலை
  7. a curtain
  8. strata- gem, தந்திரம்
  9. rock; 1O. piece, துண்டு
  10. camp; and
  11. cave
  • அறைகுறை–அறகுறை — (com. ) trouble of mind, sorrow, want.
  • அறை குறையாய்ச் செய்யாதே — don't do it imperfectly.
  • அறைகுறை பார்க்க — to repair damages.
  • அறை வீடு — a room in a house.
  • அறைமுறை — complaint.
  • அறைமுறையிட — to complain.
அறை — v. t.
  1. v. t. smite, slap strike with the hand
  2. hammer, drive in, கடாவு
  3. say, speak, tell, சொல்
  4. cut in pieces, துண்டி
  5. beat as a drum, கொட்டு; v. i. sound, ஒலி
  6. beat against as waves against the shore, as wind, மோது
  • ஆணியைச் சுவரிலே அறை — drive the nail into the wall.
  • கன்னத்தில் அறைய — to slap one on the cheek.
  • சிலுவையில் அறைய — to crucify.
  • அறையப்பட–அறையுண்ண — to be struck, to be slapped.

Tamil Moli Akarathi (1928)

அறை (aṟai)
  1. அடி, அரங்கு, அறுந்தது, ஏழுத் தினோசைச் சொல், கண்ணறை, குறை, சிற்றில், சொல், திரை, தூக் கங்கள், பறையடித்தல், பறையறை யென்னேவல், பாத்தி, பாறை, மலை யுச்சி, முழைஞ்சு
அறை (aṟai)
  1. பாறை, முரஞ்சு
அறை (aṟai)
  1. அடி, சொல், பறையடியென் னுமேவல், ஏழுத்தினோசைச்சொல், சிற்றில், சொல், திரை, தூக்கங்கள், பறையடித்தல், பாறை, மலையுச்சி, முழைஞ்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறை² (aṟai)
  1. , < அறை-. n
  2. [K. are, M. aṟa.] Slap, blow, beat; அடி. (சேதுபு. வேதாள. 43.)
  3. Dashing, as of waves against the shore; மோதுகை. (சூடா.)
  4. Cutting, chopping, as of a stick; வெட்டுகை. அறையுற் றாலைக் கலமருந் தீங்க ழைக் கரும்பே (மலைபடு. 118)
  5. Sound; ஓசை. அறைபடு மாலைகள் (கந்தபு. நாட்டு. 31)
  6. Word, as spoken; சொல். (நன். 458.)
  7. Reply; விடை. சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி. சி. 8, 14)
  8. Wave; அலை. (சூடா.) — int. An exclamation expressive of the feeling of security; பத்திராலாபனக் குறிப்பு. (சீவக. 2180.)
அறை³ (aṟai) — noun
  1. Room, apartment, chamber, cell; உள்வீடு. (சூடா.)
  2. House; வீடு. ஐவர்மாள வரக்கறை யெரித் தல் கேளா (கூர்மபு. கண்ணன்மண. 111)
  3. Drawer, as of a table, a compartment, as of a cabinet, pigeon hole; பெட்டியி னுட்பகுதி
  4. Assigned portion of an area; வகுத்த இடம். கோலறை யடைப்ப தின்றி (திருவாத. பு. மண்சுமந். 23)
  5. Lying-in room; பிரசவவீடு. அவள் எத்தனையோ அறைகாத்தவள்
  6. Square on a chessboard; சதுரங்க முதலியவற்றின் கட்டம்
  7. Cave; மலைக் குகை. (சூடா.)
  8. Excavation for destroying a structure; சுரங்கம். பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர் (திவ். பெரியதி. 2, 5, 5)
  9. Garden plot; பாத்தி. குறையறை வாரா நிவப்பின் (மலைபடு. 118)
  10. Stratagem, wile, trick; வஞ்சனை. மறையிற் றன் யாழ்கேட்ட மானை யருளா தறைகொன்று (கலித். 143, 11)
  11. Rock, ledge; பாறை, அகலறை . . . காலினுதிர்ந்தன (மலைபடு. 133)
  12. Grinding stone; அம்மி. (பரிபா. 10, 83.)
  13. Pendant, tassel; சல்லி. (சூடா.)
  14. Curtain; திரைச்சீலை. (சூடா.)
  15. Piece; துண்டம். அறைக்கரும்பு (தொல். பொ. 467, உரை)
அறை⁴ (aṟai) — noun
  1. Ceasing, disappearing; அறுகை. (சிலப். 14, 30, அரும்.)

IndoWordNet

அறை — noun
  1. வீட்டின் அல்லது கட்டடத்தின் உள்ளே கதவு, ஜன்னல் முதலியன வைத்து சுவரால் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்.
அறை — verb
  1. அறை
அறை — noun
  1. மனிதர்கள் விரித்த கையாலும், விலங்குகள் முன்னங்காலாலும் ஒரு பரப்பில் வேகத்துடன் கொடுக்கும் அடி.
அறை — noun
  1. அறையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள்

விருந்தினர்அறை விருந்தாளிஅறை படுக்கை அறை காட்சியிடம் கருவறை கர்ப்பக்கிரகம் நிலவறை நோயாளிஅறை அறுவைசிகிச்சைஅறை விருந்தினர் மாளிகை விருந்தினர் புலம் வகுப்பு குறுகியஇருண்டஅறை 2222222222 படிக்கும் அறை பில்லியட்ஸ் ரூம் போ செல் காயம் கூட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறை
  1. அடி
  2. மோதுகை
  3. வெட்டுகை
  4. ஓசை
  5. சொல்
  6. விடை
  7. அலை
  8. உள்வீடு
  9. வீடு
  10. பெட்டியின் உட்பகுதி
  11. வகுத்த இடம்
  12. பிள்ளைபெறும் அறை
  13. சதுரங்கம் முதலிய வற்றின் கட்டம்
  14. மலைக்குகை
  15. சுரங்கம்
  16. பாத்தி
  17. வஞ்சனை
  18. பாறை
  19. அம்மி
  20. சல்லி
  21. துண்டம்
  22. பாசறை
  23. அறுகை