உயிர்

இயக்கத்திற்குத் தேவையான அடிப்படையான ஒன்று, மூச்சு,(breath) ஆன்மா,(soul)

life, soul living being, living thing breath

Winslow (1862)

உயிர் (uyir) — noun
  1. Life, soul, vitality, animal or vegetable life, சீவன்
  2. Wind, காற்று
  3. A vowel, உயிரெழுத்து
  4. A living being, human, brute, or vegetable; an animal, ஓரறிவுயிர்முதலியசீவராசி. உயிருமுடலும்போல. As closely united as the soul and body. உயிர்போய்விட்டது. Life is gone. மன்னுயிர்க்கிரங்குகிறது. To be compassionate to other living creatures
  • உயிரடங்க — To be in a state of insensibility, be in a swoon, to be suspended as the vital powers.
  • உயிரடைய — To revive, to be reanimated.
  • உயிரளபு–உயிரளபெடை — The lengthening of a vowel in verse. See அளபெடை.
  • உயிரறுதியும் — . Till the very end of life.
  • உயிருதவி — Aid in a fatal juncture. 2. Aid by sacrificing life for another.
  • உயிரெடுக்க — To take away life.
உயிர் (uyir) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To live, revive, come to life–as one dead; to be restored to life or feeling–as a benumbed or injured limb, to be reanimated, &c., உயிரடைய
  2. (p.) To breathe, respire, மூச்செறிய
  3. To blow or move–as a soft wind; to become diffused–as odors, வீச
  4. v. a. To issue, emit fragrance, &c., exhale, eject, discharge, set at liberty, விடுக்க
  5. To give birth to, yield, produce, ஈன
  6. To smell, மோக்க. அவள்கருவுயிர்த்தாள். She has borne a child. மருவுயிர்க்குநறுந்துளவு. The fragrant Tulasi (Ocimum sanctum), which emits odor. (பாரத.)
  • உயிர்த்தெழ — To rise to life, to be restored to life, be reanimated, உயிரடைந்தெழ.
  • உயிர்ப்பன — Living creatures, சுவாசமுடையன.
  • உயிர்ப்பிக்க — To cause to live, raise, or restore to life, to revive, reanimate, resuscitate, பிழைப்பிக்க.
  • உயிர்ப்பு — Reanimation, revival, உயிர்க்கை. 2. s. Breath, respiration, சுவாசம். 3. Wind, air, காற்று. 4. (fig.) Good smell, சுகந்தம். (p.)
  • நெட்டுயிர்ப்பெறிய–நெட்டுயிர்ப்புவீங்க — To fetch a long breath, to sigh.

Fabricius (1972)

உயிர் — noun
  1. life சீவன்
  2. vowel, உயிரெ ழுத்து
  3. a living being, சீவராசி
  4. wind, காற்று
  5. a very small measure of time 1/4320 of a naligai
  • உயிரும் உடலும் போலேயிருக்க — to live intimately united as the soul with the body.
  • உயிரடங்க — to be in a swoon, to sink as in death.
  • உயிரடைய — to revive, to be restored to life.
  • உயிரளபு–உயிரளபெடை — the lengthening of a vowel.
  • உயிரெழுத்து — a vowel.
  • உயிரோடிருக்க — to be alive.
உயிர் — v. i.
  1. v. i. come to life, revive, உயிர டை
  2. breathe, மூச்செறி
  3. sprout, தழை
  4. breathe one's last, மரி
  • கர்த்தர் உயிர்த்தெழுந்த பண்டிகை–உயிர்த்தெழுந்த திருநாள் — Easter-day.
  • உயிர்த்தெழுந்திருக்க — to rise from the dead.
  • உயிர்த்தெழுதல் — the resurrection.
  • உயிர்ப்பு — breath; wind, air; fragrance; invocation to a deity to abide in an idol.
  • நெட்டுயிர்ப்பு — deep breath; groan; sigh.
  • உயிர்த்தல் — reviving.

Tamil Moli Akarathi (1928)

உயிர் (uyir)
  1. ஆன்மா, உயிரெழுத்து, காற்று, சீவன்
உயிர் (uyir)
  1. அணு, ஆதன், ஆவி, ஆன்மா, இய மானன், உதவி, கூத்தன், சிவன், செந் து, சேதனன், பசு, பிராணன், புற்க லன், பூதம், சார்போதன்
உயிர் (uyir)
  1. ஆன்மா, உயிரென்னேவல், காற்று

IndoWordNet

உயிர் — noun
  1. உடல் இயங்குவதற்கு பயன்படக்கூடிய ஒரு சக்தி.

ஆத்மா பிராணன்

Tamil Wiktionary

உயிர் — பெயர்ச்சொல் (Noun)

உயிர்ப்பு உயிர்மெய் உயிர்ச்சத்து உயிர்வளி உயிர்ப்பிச்சை உயிர்மூச்சு நாடி உயிரினம் உயிரெழுத்து உயிர்த்தோழன் உயிர்த்தோழி உயிரி உயிரணு உயிர் வேதியியல் உயிர் உரம் உயிரிழப்பு உயிர்த்தெழு நுண்ணுயிர் குற்றுயிர் இன்னுயிர் புத்துயிர் பல்லுயிர் ஈருயிர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உயிர்² (uyir) — noun
  1. Life, animal or vegetable; சீவன். (திவா.)
  2. Soul; ஆன்மா. தன்னுயிர் தானறப் பெற்றானை (குறள், 268)
  3. Living being; பிராணி. எல்லாவுயிருந் தொழும் (குறள், 260)
  4. (Astrol.) Ascendant, sign of nativity; சன்மலக்கினம். உயிர்க்கிருபாலினும் (விதான. சாதக. 19)
  5. Vowel; உயிரெழுத்து. உயிரு முடம்புமா முப்பதும் (நன். 59)
  6. One of the vital airs. See பிராணவாயு. வைகரி யில் . . . உயிரணைந்துவந்த மொழி (சிவப்பிர. 2, 20)
  7. Wind; காற்று. (பிங்.)
  8. Voice, spoken sound; ஓசை. வள்ளுயிர்த் தெள்விளி (குறிஞ்சிப். 100)
  9. A measure of time, ¹⁄₄₃₂₀ of a nāḻikai; ஒரு நாழிகையில் 4320-இல் ஒரு கூறு. (கணக்கதி. பக். 13.)
உயிர்³ (uyir) — noun
  1. Cuscuss-grass. See இலாமிச்சை. (மலை.)