உரு

பெருஞ்சினங்கொள்ளுதல் ஒருபக லெல்லா முருத்தெழுந்து {{சிறியது (கலித்தொகை. 39} }} ஒத்தல்நின்புக ழுருவின கை அச்சம் உருவுட்காகும்

to get angry, be provoked; exhibit signs of anger to burn, smart to become ripe, mature

Tamil Wiktionary

உரு

உருபு உருவம் உருவாகு உருவாக்கு உருமாறு உருமாற்று எழுத்துரு வார்ப்புரு வேற்றுரு கருத்துரு அரு அருவுருவம்

Winslow (1862)

உரு (uru) — noun
  1. Form, appearance, shape, figure, fashion, வடிவு
  2. Beauty, அழகு
  3. Body, உடல்
  4. Appearance, an indistinct object, தோற்றம்
  5. Image, idol, statue, விக்கிரகம்
  6. A vessel, a dhoney, a ship, &c., கப்பல்
  7. An article, a piece, different things counted, உருப்படி
  8. A course of recitation of prayers, incantations, &c., செபத்தினுரு
  9. Divinity, divine influence, power, grace, &c. brought in to a person or idol by the repetition of incantations, சன்னதம். (தீ. 297.)
  10. Bigness, பருமை
  11. (p.) Color, நிறம்
  12. A leech, அட்டை
  13. Inner part, interior, centre, உள்
  14. (சது.) Disease, வியாதி
  15. Anger, signs of anger, கோபம்
  16. Heat, வெப்பம்
  17. The embryo, கரு. ஐந்துருவருகிறது. Five vessels are coming. தூரத்திற்காண்கிறவுருவென்ன? What is that form or object seen in the distance?
  • உருக்குலைய — To become dismembered, to be disunited–as the parts of a dead body–as a lock, parts of a house, &c., to become loose, deranged, disorganized, வடிவங்குலைய. 2. To be emaciated–as one in disease, வடிவங்கெட.
  • உருக்கொள்ள — To become formed, or conceived in the womb, கருக்கொள்ள. 2. To assume shape, வடிவமெடுக்க. 3. [prov.] To possess a person–as a demon for the sake of uttering oracles, ஆவேசங்கொள்ள.
  • உருச்செபிக்க–உருப்போட — To repeat a course of prayers, &c, மந்திரமுருப்போட.
  • உருத்தரிக்க — To become shaped, &c.–as the fetus when advancing towards maturity, வடிவங்கொள்ள.
  • உருநாட்டு — An idol, statue, விக்கிரகம்; [ex நாட்டு.]
  • உருப்பட — To be formed, shaped, உருவாக. 2. To prosper, rise to eminence, சீர்ப்பட.
உரு (uru)
  1. Much, excessive, அதிகமான
  2. Large, great, பெரிய
  3. Long, நீண்ட
  4. Valuable, precious, விலையுயர்ந்த. Wils. p. 163. URU
உரு (uru) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be angry, be provoked, be fierce, to rage, கோபிக்க
  2. To exhibit signs of anger, சினக்குறிப்புக்காட்ட
  3. To be abundant, copious, மிக
  4. To be intense, அதிகரிக்க
  5. To be great, பெரிதாக
  6. To sprout, shoot, முளைக்க
  7. To have an origin, come into existence, to be evolved, வெளிப்பட
  8. To appear, assume form, தோற்ற
  9. To result in effects–as the deeds of former births, to grow mature, கன்மம்விளைய. (p.) நல்லறமேயுருத்தெழுந்திடுமௌவைநந்தாய். Oh! venerated mother, virtue personified. வெவ்வினையுருத்தகாலை. When the vile deeds (the fruits of them) appeared. (சிலப்பதிகாரம்.) ஊழ்வினையுருத்தென. As soon as the deeds connected with former births had become matured. (சிலப்பதி.)
  • உருத்தல் — Being angry, கோபித்தல். 2. Appearing, தோற்றல். 3. Abundance, மிகுதி. 4. Sprouting, shooting, முளைத்தல். (p.)
  • உருப்பு — Abundance, copiousness, intenseness, மிகுதி. (பாரதி.)

Fabricius (1972)

உரு — noun
  1. (cf. உருவு, உருபு, உரூபம், உருவம்) form, shape, appearance, வடிவு
  2. (coll.) ship, கப்பல்
  3. an article, piece, உருப்படி
  4. repetition of a prayer, an incantation or a lesson
  5. (coll.) gold bead strung on either side of the marriage badge
  6. idol விக்கி ரகம்
  7. embryo, கரு
  • எத்தனை உரு — how many articles or ships are there?
  • உரு எடுக்க — to assume a form, to incarnate.
  • உருநாட்டு — an idol.
  • உருப்பட — to be formed shaped, to prosper.
  • உருப்படி–ஆயிரம் உருப்படி — pieces, articles, each individual, each particular. , one thousand pieces.
  • உருப்படியாய் — soundly unhurt, without any injury - ஆள் உருப்படி யாய் வந்து சேர்ந்தான்.
உரு — noun
  1. fear, அச்சம்
  2. leech, அட்டை
  3. anger
உரு — v. i.
  1. v. i. get angry, கோபி, exhibit signs of anger
  2. burn or smart, அழலு
  3. become ripe, mature, முதிரு; v. t. resemble, ஒத்திரு
  4. be angry with, கோபி

Tamil Moli Akarathi (1928)

உரு (uru)
  1. அதிகமான,அட்டை,அழகு,உடல், உருத்தலை செய்யென்னேவல், உள், ஏலுமிச்சை, கரு, கலை,கோபம், சன்னதம், செப்பத்தினுரு,தோற்றம், நிறம்,நோய்,பதுமை,பருமை,பெ ரிய,மரக்கலம்,வடிவு,விலையுயர்ந்த து, வெப்பம், வேற்றுக்குறி முதலிய வெண்வகையிடைச்சொற்குறி,வை க்கோற்புரி
உரு (uru)
  1. அட்டை, உடல், உருத்தலைச்செய் யென்னேவல், உள், நிறம், நோய், வடிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உரு² (uru) — noun
  1. < உரு¹-
  2. Fear; அச்சம். உருவுட்காகும் (தொல். சொல். 302)
  3. Leech; அட்டை. (பிங்.)
உரு³ (uru) — noun
  1. Form, shape, figure; வடிவு. அற்றே தவத்திற் குரு (குறள், 261)
  2. Beauty of form, loveliness, attractiveness; வடிவழகு. உருவுடைக் கன்னியரைப் போல (நாலடி, 274)
  3. Body; உடல். உருவினி னிறைந்து நின்று (சி. சி. 4, 17)
  4. Idol; விக்கிரகம். தேவதார்ச்சனை தாம் பண்ணல்போ லுருப்பல பரப்பி (பிரபோத. 11, 12)
  5. Colour; நிறம். பல்வே றுருவின் வனப்பமைகோ தை (குறிஞ்சிப். 103)
  6. That which appears in outline; உருவமுள்ளது. உருவுயி ரென்னின் (சி. சி. 4, 9)
  7. Decorative work in wood carved with the chisel; உளியாற்செய்த சித்திரவேலை. சிற் றுளிகள் சென்று செத்தின உருக்க ளழுந்தின . . . குறடு (சிறுபாண். 252, உரை)
  8. Repetition of a prayer, an incantation or a lesson; பலமுறை செய்யும் அனுசந்தானம். உருவெண்ணு மந்தியால் (திவ். இயற். 1, 33)
  9. Music, song, musical composition; இசைப்பாட்டு. தாளத்தின் வழியுரு வெடுத்து (உத்தரரா. சீதைவ. 25)
  10. Schooner, sloop, small vessel; தோணி. ஐந்து உரு வருகிறது. Colloq
  11. Gold bead or other ornament strung on either side of the marriage badge; தாலிமுதலிய வற்றிற் கோக்கும் உரு. தாலியுரு. Colloq
  12. Embryo; கரு. (W.)
உரு⁶ (uru) — noun
  1. Deer; மான். கானிடை யுருவைச் சுடுசரந் துரந்து (திவ். பெரியதி. 1, 4, 2).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உரு
  1. வடிவழகு
  2. தெய்வத் திருமேனி
  3. நிறம்
  4. அச்சம்
  5. அட்டை
  6. பலமுறை சொல்லுகை
  7. பருமை
  8. தோணி
  9. உடல்
  10. எலுமிச்சை
  11. இசைப் பாடல்
  12. நோய்
  13. உருவமுள்ளது
  14. உளியாற் செய்த சிற்ப வேலை
  15. தாலி முதலியவற்றில் கோக்கும் உரு
  16. தன்மை
  17. அகலம்