Meaning of a word or passage, வாக்கியத்தின்கருத்து
உள்ளக்களிப்பு — Heart-felt joy, மனமகிழ்ச்சி.
உள்ளக்குறிப்பு — The secret thought or desire of a person, not expressed in words, அகக்குறிப்பு. 2. Meaning, or intention of a speaker or writer, not evident from his words, உட்கருத்து. 3. The secret or special object which one has in view, உண்ணோக்கம.
உள்ளத்திலேவைக்க — To conceal in the mind, to keep secret.
உள்ளத்துறைவோன் — God, கடவுள். (p.) உள்ளத்துறைவாயுணர்கிற்றிலையே. Oh! thou who possessest my heart, thou hast not noticed my pangs. (நைட.)
உள்ளப்புணர்ச்சி — Imaginary gratification of lust, கருத்துப்புணர்ச்சி–opp. to மெய்யுறுபுணர்ச்சி.