உள்

, 1) உள்ளிடம், 2) மனம், 3) இடம்(தி.நி), 4)உருபு -செத்தாருள் (குறள்-214), 5) விகுதி (நன்னூல், - 140) , - 1) inside, 2) mind, 3) place, 4)A loc. ending, 5)A vbl. noun ending உள் - உள்ளே

to be, exist to have added to the adverbial participle of a verb to create the perfect tense.

Tamil Wiktionary

உள் — பெயர்ச்சொல் (Noun)
  1. , 1) உள்ளிடம், 2) மனம், 3) இடம்(தி.நி), 4)உருபு -செத்தாருள் (குறள்-214), 5) விகுதி (நன்னூல், - 140)

[object Object]

உள்ளே உள்ளு உள்ளம் உளம் உள்கு உள்ளல் உள்ளூர் உள்நாடு உள்ளாட்சி உள்ளங்கை உள்ளுறை உள்முகம் உள்ளாடை உட்புறம் உட்கிடக்கை உட்பகை உள்நோயாளி உள்துறை உள்ளிடு உள்வாங்கு உள்நோக்கு

Winslow (1862)

உள் (uḷ)
  1. An affix to some verbal nouns, தொழிற்பெயர்விகுதி–as செய்யுள், விக்குள்.
உள் (uḷ) — noun
  1. The inside, the interior, that which is intrinsic, private, secret, esoteric, உள்ளிடம்
  2. Mind, heart, soul, breast, உள்ளம்
  3. Place, இடம்
  4. As a nominal affix or postposition, it governs the dative and expresses in, within, among, of, out of, inner, interior, intrinsic, esoteric, ஏழனுருபு. உள்ளிருந்தார்க்குத்தெரியுமுள்வருத்தம். Those of the household only are acquainted with its secret sorrows
  • உட்கரணம் — The intellectual faculties. See இந்திரியம் and கரணம்.
  • உட்கருத்து — The inmost thought, the real purpose or motive, அகக்கருத்து. 2. Cordial affection, உட்பட்சம். 3. The intrinsic meaning of a passage, &c., கருத்துரை.
  • உட்கருத்தாகப்பேச — To speak with reservation.
  • உட்களவு — Guile, deceit, treacherousness, insidiousness, உள்வஞ்சகம்.
  • உட்கள்ளம் — Deep-seated viciousness, dissimulation, உள்வஞ்சகம். 2. Internal, or unsubdued disease, hidden humor or matter–as in a boil, கட்டியினுள் விஷம்.
  • உட்காங்கை — Caloric, latent heat, உட்சூடு.
உள் (uḷ) — noun
  1. The root of a symbolic verb signifying being, which, in poetic usage is complete in its inflections–as உளேன், or உள்ளேன், I exist, &c
  2. The third person singular of the inferior class (see உண்டு), and the participle with its appellatives are the only parts in common use. –Note. The participle and its derivations are joined to nouns to form adjectives and appellatives and to show the possession of the quality indicated–as உள்ளகாரியம், a real thing, fact. உளர். They are–as அவருளர்
  • உள்ள — Existing, which exists, is real, genuine, essential.
  • உள்ளகதை — A real story, an authentic narrative, a fact, a reality.
  • உள்ளது — The truth, it is true, உண்மை. 2. That which exists, உண்டானது. உள்ளதற்குள். Among the few there are. உள்ளதற்குள்ளேயிவன்சமர்த்தன். He is the most competent among them. 2. He is tolerably clever. உள்ளதுசொல்லு. Speak the truth. உள்ளதுரியதெல்லாம். The whole of one's property to the last mite. உள்ளதைமறையாதே. Conceal not the truth. உள்ளதோஇல்லதோ? It is true or not? உள்ளநாளுள்ளமட்டும். All this time, or always–a phrase indicating dissatisfaction. உள்ளபடி. Truly, really as to right, according to the actual state. உள்ளபடிமுடியும். It will end right. உள்ளபணிவிடைசெய்வேன். I will do whatever service you have. ஏன்னாயிசுள்ளநாள்மட்டும். As long as I live.
  • உள்ளபசுமை — Real truth, ஐயமற்றஉண்மை. 2. Real prosperity, மெய்வாழ்வு.
  • உள்ளபிள்ளை — A child of rich parents–the opposite to வறியபிள்ளை.
  • உள்ளமை — [prov. prop. உண்மை.] Truth, reality, sincerity, probity.

Fabricius (1972)

உள் — noun
  1. the interior, உட்புறம்
  2. the mind, மனம்
  3. place, இடம்
  4. as an affix (with or without the சாரியை கு) it expresses: in, within, into as in வீட்டுள் or வீட்டுக்குள், in the house
  5. a verbal noun ending as in விக்குள், தொழிற் பெயர் விகுதி
  6. a 7th case ending ஏழனுருபு
  • அதற்குள்ளே — within it (4), in the meanwhile, so soon.
  • உட்கட்டு — private apartments of a house.
  • உட்கருத்து — inward sentiment, intention, affection, the intrinsic meaning of a passage.
  • உட்காய்ச்சல் — an internal fever, heat, hatred.
  • உட்கை — the palm of the hand, one who is a secret hand in aiding what is improper.
  • உட்கொள்ள — to take food, medicine, to imbibe as the earth does the rain; to receive into the mind.
உள் — a symbolic verb signifying
  1. root of a symbolic verb signifying being, opp. to இல். Note. Only 3rd pers. neut. sing. உண்டு, the abstr. noun உண்மை (both see separately) and the adj. part. உள்ள, with its appellatives are in common use.
  • உள்ள — existing, real true, essential, As affix it converts substantives into adjectives like ஆன as ஞானமுள்ள, wise.
  • நான் உள்ளமட்டுக்கும்–என் ஆயுசுள்ள நாள் மட்டும் — as long as I live.
  • உள்ளகதை — a real story, a fact.
  • உள்ளது–உண்டா னது — that which exists, ; 2. the thing as it is, the naked, truth; 3. God as one that remains after all analysis; 4. property.
  • அவனுக்குள்ளதெல்லாம் — all that he has, what all he possesses.
  • உள்ளதுரியதெல்லாம் — the whole of one's property.

Tamil Moli Akarathi (1928)

உள் (uḷ)
  1. இடம், உட்புறம், உள்ளென்னே வல், ஏழனுருபு [உ-ம்] ஊருள், தொழிற்பெயர்விகுதி [உ-ம்] செய் யுள், மனம்
உள் (uḷ)
  1. அகடு, அகணி, அகம்
உள் (uḷ)
  1. உள்ளிடம், ஏழனுருபு, (உ-ம்
  2. ஊ ருளிருந்தான்) நினைவென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உள்¹ (uḷ)
  1. , [K. M. uḷ.] Base of a tenseless verb meaning (1) 'to be.', as in உள்ளேன், 'I am'; இருத்தற்பொருள் குறிக்கும் குறிப்புவினைப் பகுதி: (2) to have; உடைமைப்பொருள்குறிக்குங் குறிப்பு வினைப்பகுதி. யான் பொருள் உள்ளேன்.
உள்² (uḷ) — noun
  1. Inside, interior of a place. உள்ளிடம்
  2. That which is private, secret, esoteric; அந்தரங்கமானது. உட்பூசை புறப் பூசைகள்
  3. Mind, heart; தலைகொடுவந்தா னுண்மலிய (பு. வெ. 4, 12, கொளு)
  4. Cheer, high spirits; மனவெழுச்சி. உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே (நாலடி, 289)
  5. Place; இடம். (திவா.) — part
  6. A loc. ending; ஏழனுருபு. செத்தாருள் வைக்கப் படும் (குறள், 214)
  7. A vbl. noun ending, as in விக்குள்; தொழிற்பெயர்விகுதி. (நன். 140, உரை.)
உள்³ (uḷ) — noun
  1. cf. உள்ளு. See உள்ளான்². உள்ளு மூரலும் (சிலப்
  2. 117)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உள்
  1. உள்ளிடம்
  2. உள்ளம்
  3. மனம்
  4. இடம்
  5. மறை
  6. மனவெழுச்சி
  7. ஒரு குறிப்புவினைப் பகுதி
  8. தொழிற்பெயர் விகுதி
  9. ஏழாம் வேற்றுமை உருபு
  10. உள்ளான் என்னும் பறவை