கடல்
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. கடல்களின் பண்புகள் பற்றி பிறசொற்களாலும் வழங்கப்படு அவற்றை விளக்கம் என்னும் பகுதியில் காணலாம், கடலுக்கு அதன் ஆழம் பற்றி, பரந்த பரப்பு பற்றி, அலைகள் எழுவது பற்றி, சில இடங்களில் கொந்தளிப்பது பற்றி, இரைச்சல் இடுவது பற்றி, உப்புநீர் பற்றி (உவர் நீர்), மழை தருவது பற்றி என பற்பல பண்புகளால் பல பெயர்கள் உள்ளன. தமிழில் கடலுக்கான பெயர்கள் பலவற்றைக் கீழே காணலாம்.
ocean, sea
Tamil Wiktionary
கடல்
அரலை அரி அலை அழுவம் அளம் அளக்கர் ஆர்கலி ஆலந்தை (ஆல் நீர்) ஆழி ஈண்டுநீர் (ஈண்டுநீர் மிசைத்தோன்றி உரவுநீர் (உரகடல் கொந்தளிக்கும் கடல்) உவர் உவரி உவா ஓதம் - ஓதமலி நஞ்சுண்ட வுடையானே ஓதவனம் ஓலம் கடல் கயம் (கயங்கரந்துறை யரக்கரை (உபதேசகா. விபூதி. 201). கையம் கலி கார்கோள் கிடங்கர் குண்டுநீர் (குண்டுநீர்வையத்து குரவை சக்கரம் சலதரம் சலநிதி சலராசி சலதி சுழி தாழி திரை (திரைவள ரிப்பி துறை (துறைமுற்றிய துளங்கிருக்கை தெண்டிரை தொடரல் தொன்னீர் தோழம் (முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம் (கல்லா. 88 23). ) நரலை நிலைநீர் (கல்லா. 21 1 மயிலேறும்.)) நீத்தம் நீந்து (நீந்து நித்தில விதான நீழலான் நீரகம் நிரதி நீராழி நெடுநீர் நெறிநீர் (நெறிநீர் வளையும் பரப்பு பரவை பரு பாரி பாழி பானல் பிரம்பு புணர்ப்பு உழுவம் புணரி பெருநீர் (பெருநீர் போகு மிரியன் மாக்களொடு பௌவம் மழு ((தக்க யாகப். 457 உரை.)) முந்நீர் வரி வலயம் வளைநீர் (வளைநீரோசை தனின் மிகுமால் (திருவாலவா. திருநகரச். 6).) வாரி வாரிதி வீரை வெண்டிரை வேலாழி (வேலாழி சூழலகு (திணைமாலை. 62).) வேலை சாகரம்
கடல்நீர் கடல்நாய் கடல் வாழ் கடல்மட்டம் கடற்கரை கடற்படை கடற்பசு கடற்பயணி கடலலை கடலியல் கடற்கோள் பெருங்கடல் அரபிக்கடல் வங்கக்கடல் செங்கடல் கருங்கடல் அலைகடல்
Winslow (1862)
கடல் (kaṭal) — noun
The sea, ocean, சமுத்திரம் A number, ஓரெண். (பிங்.) The seven oceans of the Puranas are லவண சமுத்திரம், sea of salt-water இக்ஷுசமுத்திரம், sea of the juice of sugar-cane சுராசமுத்திரம், sea of spirituous liquor சர்ப்பிசமுத்திரம், sea of clarified butter ததிசமுத்திரம், sea of curds க்ஷீரசமுத்திரம், sea of milk சுத்தோதகசமுத்திரம், sea of fresh water. கடலுரமாயிருக்கிறது. The sea is rough
கடலடம்பு — A species of the அடம்பு plant. கடலர் — Fishermen, inhabitants of maritime districts, நெய்தனிலமாக்கள். கடலாமை — A sea-tortoise, Testudo imbricata, L. கடலிரைச்சல் — The roaring of the sea, கடலொலி. கடலிறாஞ்சிமரம் — A tree whose bark is used to absorb humors, ஓர்மரம். கடலுடும்பு — A kind of fish, ஓர்மீன்.
Fabricius (1972)
கடல் — noun
the sea, ocean, சமுத்திரம் abundance, மிகுதி
கடலுரமாயிருக்கிறது — the sea is rough. கடலாமை — a sea-tortoise. கடலிரைச்சல் — the roaring of the sea. கடலுராய்ஞ்சி — a sea-bird. கடலோடி — a sea-man. கடலோடுதல் — navigating.
Tamil Moli Akarathi (1928)
கடல் (kaṭal)
இராசசின்னத்தொன்று, ஓரெ ண், சமுத்திரம், பசு
கடல் (kaṭal)
அத்தி, அப்பு, அம்பரம், அம்பு ராசி, அம்போதி, அரி, அருணவம், அலை, அளக்கர், ஆர்கலி, ஊழி, உத்தி உந்தி, உப்பு, உவரி, உவர், ஓதம், கலி, கார்கோள், குரவை, சக்கரம்,சமுத் திரம், சலதி, கலநிதி, சலராசி, சாகரம், சிந்து, தெண்டிரை, நதிபதி, நரலை, நீராழி, நேமி, பயோததி, பரப்பு, பரவை, பாராவாரம், புணரி, பெர நீர், பௌவம், மகராலயம், மகோததி, முந்நீர், வாரம், வாரணம், வாராசி, வாரி, வாரிதி, வாருணம், வீரை, வெள்ளம், வேலாவலயம், வேலை
கடல் (kaṭal)
7- உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கடல் (kaṭal) — noun
Sea; சமுத்திரம். (திவா.) A large number 10 சங்கம் 10,000 billions; ஒரு பேரெண். (பிங்.) The 24th nakṣatra, so called from Varuṇa the Sea-god being the deity of the constellation; சதயநாள். (சங். அக.) Abundance; மிகுதி. பண்டங்கள் கடலாய்க் கிடக் கின்றன
கடல் (kaṭal) — noun
Cow; பசு. (அக. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கடல்
சமுத்திரம் ஒரு பேரெண் இராக சின்னத்துள் ஒன்று சதயநாள் மிகுதி
சொல் அகராதி
சொல் தேடு