கூட்டு

Joint

Tamil Wiktionary

கூட்டு — வினைச்சொல் (Verb)
  1. எண்களை கூட்டல் மூலம் ஒன்றாக சேர்
  2. குப்பையை நீக்கு
  3. காய்கறிகளுடன் சேர்த்து தயார் செய்யப்படும் உணவு வகை

கூடு கூட்டம் கூட்டல் கூட்டுக்குடும்பம் கூட்டெழுத்து கூட்டறிக்கை கூட்டாட்சி கூட்டமைப்பு

Winslow (1862)

கூட்டு (kūṭṭu) — noun
  1. Combination, union, conjunction, confluence, connexion, சேர்க்கை
  2. Companionship, fellowship, friendship, சம்பந்தம்
  3. Concubinage, illicit intercourse, தொடுப்பு
  4. Relationship, consanguinity, உறவு
  5. Partnership, company in trade, பங்கு
  6. Fitness to associate with, கூடத் தகுந்தது
  7. Likeness, similarity, ஒப்பு; [ex கூடு, unite, associate, &c.]
  • கூட்டற்றவன் — One unfit for company, business, &c., தகாதவன். 2. A useless person, உதவாதவன். 3. One unequal to rank, an out-cast; one rejected from a family, tribe, or society, ஆசாரங்குலைந்தவன்.
  • கூட்டாளி — An associate, a companion, சிநேகிதன். 2. A partner in trade, co-partner, பங்காளி. 3. The fellow–as one of a yoke of oxen, a pair of horses, &c., சோடானது. அவனுமிவனுமொருகூட்டு. That man and this are in the most intimate terms. அவனோடேகூட்டாகாது. It will not be right to associate with him. கூட்டுக்குநிற்கிறாயா. Will you be a partner in it?
  • கூட்டுறவு — Friendship, alliance, social relation. 2. Metrimonial love. 3. Concubinage.
கூட்டு (kūṭṭu) — infinitive
  1. , கிறேன், கூட்டினேன், வேன், கூட்ட, v. a. To unite, conjoin, combine, connect, இணைக்க
  2. To collect together, to assemble, சேர்க்க
  3. To compound, mingle, commix, amalgamate, கலக்க
  4. To add, cast or sum up; to aggregate, தொகைப்படுத்த
  5. To increase–as interest, salary, allowance, price, &c.; to enhance, to augment, அதிகரிக்கச்செய்ய
  6. To add–as ingredients in food, medicine, &c., கூடச்சேர்க்க
  7. To receive, take, or admit one into a company, party, class, society, partnership, &c., சபை முதலியவற்றிற்கூட்ட
  8. To accumulate, hoard, to store up, to treasure up, சேகரிக்க
  9. To sweep; to gather–as sweepings, பெருக்க
  10. To draw one over to a party, to enlist, to engage; to proselyte, to convert, கட்சி முதலியவற்றிற்சேர்க்க
  11. To append, to attach, to annex, to subjoin, to superadd, கூட்டிவைக்க
  12. v. n. [prov.] To from–as pus &c., உண்டாக்க
  • கூட்டிக்கட்ட — To gather and tie up–as hair, &c., சேர்த்துக்கட்ட. 2. To encroach on another's land, ஏல்லை கட்ட. 3. To tie together–as the hands, or the hands and feet; &c.
  • கூட்டிக்கொடுக்க — To give more –as salary, price, &c., to superadd. 2. To add interest to principal and pay it at once. 3. [low.] To pimp, &c.
  • கூட்டிக்கொள்ள — To add an ingredient to medicine or one's food. 2. To take one in company, admit into society, or receive to office, &c. இன்று போசனத்துக்கென்ன கூட்டிக் கொண்டாய். What have you eaten with your food rice to-day?
  • கூட்டிக்கொண்டுபோக–கூட்டிப்போக — To take in company, to take along; to carry, convey. 2. To gather up and take away.
  • கூட்டிச்சேர்க்க — To collect together.
  • கூட்டிப்பிடிக்க — To hold together –as things in the hand. 2. To encroach upon–as lands. 3. To grasp, take up, or thumb too much, in measuring cloth, &c. 4. [local] To receive, entertain, treat with kindness–as a repenting prodigal.

Fabricius (1972)

கூட்டு — noun
  1. (கூடு) combination, union, சேர் மானம்
  2. fellowship, society, சம்பந் தம்
  3. partnership, பங்கு
  4. a composition, mixture; seasoning or that which is added to a curry to relish it
  5. tribute, திறை
  6. plenty, abund- ance
  7. assistance, help
  • கறியிலே கூட்டுப்போடாதே — do not season the curry.
  • கூட்டாளி — a companion, an associate, apartner in trade.
  • கூட்டுக்கறி — a curry made of vegetables and dholl or meat.
  • கூட்டுத்தொழில் — a trade in partnership.
  • கூட்டுப்பயிர் — joint cultivation.
  • கூட்டுமா — flour used in curry.
கூட்டு — v. t.
  1. v. t. join, unite, conjoin, set together, இணை
  2. collect, bring to- gether, compound, mingle, கல
  3. sum up, add, தொகைப்படுத்து
  4. sweep, பெருக்கு
  5. increase, அதி கப்படுத்து; v. i. form, as pus
  • கூட்டல் கழித்தல் — addition and subtration.
  • கூட்டிக்கொடுக்க — to give more; to pimp.
  • கூட்டிக்கொண்டு போக — to take along.
  • கூட்டிச்சேர்க்க — to collect together.
  • கறிகூட்ட — to mix the several ingre- dients for a curry.
  • மைகூட்ட — to mix ink or paint for the eyes.

Tamil Moli Akarathi (1928)

கூட்டு (kūṭṭu)
  1. உறவு, கலப்பு, கறிக்கூட்டு, கூட் டென்னேவல், சம்பந்தம், சேர்மா ணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூட்டு² (kūṭṭu) — noun
  1. Persons or things of the same class; ஓரினமான பொருள். மனுஷ்யர்களுக்குக் கூட்டல்லர் (ஈடு, 9, 8, 9)
  2. Companionship, fellowship, friendship; சினே கம். அம்புக்குங் காலனுக்குமென்ன கூட்டா (இராமநா. உயுத். 31)
  3. Assistance, help; துணை. கூட் டொருவரையும் வேண்டா (கம்பரா. வாலிவ. 81)
  4. Relationship, consanguinity; உறவு. (W.)
  5. See கூட்டுவியாபாரம். Colloq
  6. Horde, throng; திரள். கொடியணிதேர்கூட்டணங்கும் போழ்தின் (பு. வெ. 10, பொதுவியற். 2)
  7. Illicit intercourse; பரஸ்திரீ கமனம். கூட்டென்னத்தேறும் பஞ்சபாத கத்தை (பிரமோத். 16, 35)
  8. Likeness, comparison; ஒப்புமை. மடங்கல் கூட்டறவெழுந்தெரி வெகுளியான் (கம்பரா. அதிகாய. 1)
  9. Compound, mixture; கலப்பு
  10. Curry stuffs ground together; கறிமசாலை
  11. [K. kūṭu.] Curry boiled in semiliquid form; கூட்டுக்கறி
  12. Clod, lump of moist clay; நீராற்பதப்பட்ட மண் திரள். கூட்டுற முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல (சீவக. 786)
  13. A kind of lubricant for the wheels; வண்டிமுத லியவர்றின் சக்கரத்துக்கு இடும் மை. (சீவக. 786, உரை.)
  14. Plenty, abundance; கொள்ளைப் பொருள். புணர்கூட்டுண்ட . . . சிறப்பின் (மதுரைக். 762)
  15. Tribute; திறை. தார்மன்னருங் கூட்ட ளப்ப (பு. வெ. 8, 29)
  16. Strip of cloth used as a waist-band; அரையிற்கட்டுந் துகிலாலாகிய அரை ஞாண். கூட்டு மகப்படக் கோவண நெய்து (பதினொ. நம்பியாண். திருத்தொண்டர்திருவந். 80)
  17. Roof-frame, etc. of a house; வீட்டின் மேற்கோப்பு கீழ்க்கோப்பு முதலியன. Loc

IndoWordNet

கூட்டு — adjective
  1. கூட்டு
கூட்டு — verb
  1. எத்தனை இருக்கின்றன என்று கணக்கிடுதல்.
கூட்டு — verb
  1. துடைப்பத்தால் சுத்தம் செய்வது
கூட்டு — verb
  1. எண்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து மொத்தமாக்குதல்.
கூட்டு — noun
  1. கத்தரிக்காய், உருளைக்கிழங்கை சுட்டு மசித்து உண்ணும் பொருள்

எண்ணு வேலைசெய் பெருக்கு சுத்தப்படுத்து தூய்மைப்படுத்து துலக்கு தேய் விலக்கு சேர் இணை உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் வேகவைத்தகாய்கறி சமைத்தகாய்கறி மோர்க்குழம்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கூட்டு
  1. ஒரினமான பொருள்
  2. நட்பு
  3. துணை
  4. கூடத்தன் - பரப்பிரமம்
  5. முதன்மையானவன்