கொம்பு

1)horn, 2)branch of aplant File:Horny Sheep.jpg செம்மறி ஆட்டின் வளைந்த கொம்பு (Horny Sheep)

horn, tusk horn, pipe, cornet branch, bough, twig

Winslow (1862)

கொம்பு (kompu) — noun
  1. The horn of a beast, விலங்கின்கொம்பு
  2. A branch, மரக்கொம்பு
  3. The foot-stalk or stem of a flower, பூங் கொம்பு. (p.)
  4. A narrow stick; a staff, pole, கோல்
  5. A musical instrument; a cornet, horn, ஊதுகொம்பு
  6. A tusk of an elephant or hog, யானைமுதலியவற்றின்தந்தம்
  7. The curl-like symbol in certain compound characters–as in நெ, பொ, &c., அக்கரத்தின்கோடு
  8. The bent front pole of a palankeen, சிவிகையின் கொம்பு
  9. (fig.) Eminence, greatness, மேன்மை
  10. (loc.) The outlet of a tank, ஏரிக்கோடி. பறக்குங்குருவிக்கு இருக்குங்கொம்புதெரியாது, பரதேசிக்குத் தங்குமிடந்தெரியாது. The migrating bird knows not the branch on which it may roost; and the pilgrim known not his halting place. பழுத்தபழங்கொம்பிலிராது. The ripe fruit remains not on the branch; i. e., at the appointed time, the event will happen. பிடித்தகொம்புமொடிந்துமிதித்தகொம்புமுறிந்தாற் போலானேன். I was like a man in whose hands and under whose feet the branches had given way; i. e. I was without support. கொம்புசுற்றிக்காற்றடிக்கிறது. The wind blows and whirls around every branch. ஏதுகொம்புமுளைத்துவிட்டதோ. Have his horns grown? used when a person shows pride,insubordination, &c
  • கொம்படிக்க — To butt–as oxen, buffaloes, rams, goats, &c. 2. (fig.) To assume authority, to be supercilious.
  • கொம்பனையாள்–கொம்பனாள் — She whose waist is as tender and narrow as the stem of flower. (p.)
  • கொம்பன் — A tusked elephant or other beast. 2. A kind of cholera or small-pox.
  • கொம்பன்சுறா — The sword fish, (lit.) the horned shark.
  • கொம்பாள் — A man looking out from a tree. Sometimes கொம்பத்தாள்.
  • கொம்புத்தேன் — [prov கொப்பாந் தேன்.] Honey formed by bees on branches.

Fabricius (1972)

கொம்பு — noun
  1. the horn of an animal
  2. a branch of a tree, கிளை
  3. a rod, stick, pole, கோல்
  4. the sign 'ெ' in the alphabet
  5. the tusk of an elephant, தந்தம்
  6. a musical instrument, cornet, horn
  7. the outlet of a tank, ஏரிக் கோடி
  8. power, eminence, மேன்மை
  9. the poles of a palanquin
  • பழுத்தபழம் கொம்பில் இராது — the ripe fruit remains not on the branch.
  • கொம்பரக்கு — gum, lac, stick-lac.
  • கொம்பனையாள்–கொம்பன்னாள் — a damsel with a slender waist like the stem of a flower.
  • கொம்பன் — a tusked elephant; 2. a kind of cholera or small-pox.
  • கொம்பன்சம்பா — a kind of paddy, maturing in 5 months.
  • கொம்பன் சுறா — a horned shark.
கொம்பு — v. t.
  1. v. t. be noisy, bustle
  • கொம்பலாய்க் கிடக்கிறது — there is an immense noise.

Tamil Moli Akarathi (1928)

கொம்பு (kompu)
  1. ஊதிடுகொம்பு, ஏரிக்கோடி, கோல், நந்து, மரக்கொம்பு, மேன் மை, விலங்கின்கொம்பு
கொம்பு (kompu)
  1. இரலை கோடு வயிர்
கொம்பு (kompu)
  1. ஊதிடுகொம்பு, மரக்கொம்பு, யானைக்கொம்பு, விலங்கின்கொம்பு

IndoWordNet

கொம்பு — noun
  1. மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.
கொம்பு — noun
  1. ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப் பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்பு.
கொம்பு — noun
  1. நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு
கொம்பு — noun
  1. ஒன்றிலிருந்து ரணவைத்தியர் உடலிலுள்ள கெட்ட ரத்தம் அல்லது சீழை உறிஞ்சி வெளியேற்றக்கூடிய ஒரு குழல்

கிளை கொப்பு கப்பு கோடு. தாவரப் பகுதி தாவர பாகம் சிறுகிளை சிறுகொம்பு பிரம்பு உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு முகத்தில் உள்ள கொம்பு கழி குச்சி மரக்கட்டை கட்டை லத்தி வளைந்தகைத்தடி தார்க்குச்சி ஆயுதம் கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொம்பு
  1. மரக்கொம்பு
  2. நாற்றுமுளை
  3. கோல்
  4. பல்லக்கு முதலியவற்றின் கொம்பு
  5. விலங்கின் கொம்பு
  6. யானை முதலியவற்றின் தந்தம்
  7. ஊதுகொம்பு) “கொ”? முதலிய எழுத்து களின் முற்பகுதியாய் அமைந்திருக்கும் அடையாளக்குறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொம்பு (kompu) — noun
  1. Bough, branch, twig; மரக்கிளை. வளியெறி கொம்பின் வருந்தி (மணி. 24, 86)
  2. Seedling; நாற்றுமுளை. Loc
  3. Stick, staff, pole; கோல். Madr
  4. Poles of a palanquin, etc.; பல்லக்கு முதலியவற்றின் கொம்பு. முற்கொம்புதாங்கி முன்னடக்கும் . . . முனிவன் (திருவிளை. இந்திரன். 65)
  5. Horn of an animal; விலங்கின்கொம்பு
  6. Tusk of an elephant or hog; யானை முதலியவற்றின் தந்தம். யானையின் கொம்பினைப் பறித்து (திவ். பெரியதி. 4, 2, 4)
  7. Horn, pipe, cornet; ஊது கொம்பு. கொம்பு ஒலிப்ப (மதுரைக். 185, உரை)
  8. Squirt, tube for discharging fluids in jets; நீரைவீசுங் கருவி. சிவிறியுங் கொம்புஞ் சிதறு விரைநீரும் (மணி. 28, 10)
  9. The symbol ''ெ'' in certain Tamil letters as கெ, கொ; கெ, கொ முதலிய எழுத்துக்களில் முற்பகுதியாயமைந்திருக்கும் அடையாளக்குறி. வரைந் திடுந் திறனடைந்த கொம்புபோல (திருவேங். கலம். 27)
  10. Farthest end of a tank bund; ஏரிக்கரை யின் கோடி. Loc