சந்தை

- market - fair

market, shandy, bazaar multitude, flock, herd

Winslow (1862)

சந்தை (cantai) — noun
  1. (from Sa. Sandha, meeting, collecting.) A fair, a bazaar, கூடுங்கடை. (c.)
  2. A place where the Vedas are recited, வேதமோதுமிடம். மலிந்தாற்சந்தைக்குவருகிறது. If it sells cheap you can find it in the bazaar–said of secrets when they become known to several
  • சந்தைகலைய — To disperse from a market.
  • சந்தைகூட — To assemble as market-people, to be held as a market.
  • சந்தைசொல்ல — To initiate a disciple, in the Vedas, by reciting portions of them. (p.)
  • சந்தையேற்ற — To set up a fair. (R.)
  • சந்தைவெளி — An open place for a market.
  • சந்தைவிலை — The market price.

Fabricius (1972)

சந்தை — noun
  1. a fair, market
  2. a flock, a multitude
  3. the vedas, சந்தசு
  4. recital of the Vedic text etc. by a disciple after his preceptor
  5. the burden of a song
  6. a verse; a stanza
  • சந்தை ஏறுகிறது — the market is filling up.
  • சந்தை ஏறினதில்லை — there has been no fair.
  • சந்தை கலைந்தது — the fair is over, the crowd dispersed from the market.
  • சந்தை இரைச்சல் — confused uproar, bustle as in a fair.
  • சந்தைகூட — to assemble as in a market place.
  • சந்தைக்கூட்டம் — a huge crowd as in a fair, the crowd of people in a market place.

Tamil Moli Akarathi (1928)

சந்தை (cantai)
  1. கூட்டம், கடைவீதி, வேத மோதுமிடம்
சந்தை (cantai)
  1. பலவூர்மனிதரோரூரி லோர்தி னத்திற் கொள்ளல் விற்றல் பொ ருட்டுக்கூடுங் கூட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சந்தை¹ (cantai) — noun
  1. Shandy, fair, market; குறித்த காலங்களிற் கூடுங் கடைகள். சந்தையிற் கூட்டம் (தாயு. தேசோ. 3)
  2. Bazaar; கடைவீதி. (யாழ். அக.)
  3. Multitude, herd, flock, swarm; கூட்டம். தண்ணுறு நந்தனம் வண்டின் சந்தையே (பிரபுலிங். கொக்கி. 6)
  4. The mid-point between the eyebrows; புருவங்களின் நடுவிடம். சந்தையில் வைத்துச் சமாதிசெய் (திருமந். 1201)
சந்தை² (cantai) — noun
  1. < chandas
  2. The Vēdas; வேதம். சந்தைகஞல் சாகையாகி (காஞ்சிப்பு. கழுவா. 232)
  3. Recital of the Vēdic text, etc., by a disciple following his preceptor's lead; வேதமுதலியவற்றை ஆசான் சொல்ல மாணாக்கன் இரண்டு அல்லது மூன்று முறை அவற்றைத் திரும்பச் சொல்வது. வேதச் சந்தை சொல்லி (திருவாலவா. 56, 19)
  4. Refrain, burden; பதிகமுதலியவற்றுள் செய்யுடோறும் திரும்பத் திரும்பவருஞ் சொல். நமச் சிவாயவெனுஞ் சந்தையாற் றமிழ்ஞானசம்பந்தன் சொல் (தேவா. 1177, 11)
  5. Verse, stanza; செய் யுள். (இலக். அக.)
  6. Utterance of great men; அனுசந்தித்தற்குரிய பெரியோர் கூற்று. ஆளவந்தார் அருளிச்செய்த சந்தை (ஈடு, 1, 1, 1)

IndoWordNet

சந்தை — noun
  1. கடைத்தெருவில் மொத்த விற்பனையில் விற்கப்படுகிற ஒரேவிதமான பொருட்கள்
சந்தை — noun
  1. ஒன்றில் ஒரேவிதமான பொருட்கள் சில குறிப்பிட்ட சமயத்தில் வந்து விற்கப்படும் ஒரு காய்கறி
சந்தை — noun
  1. பெரும்பாலும் கிராமங்களிலிருந்து ஒரு பெரிய ஊரின் எல்லைப்புறத்த்குக் கால்நடை, உணவுப்பொருள்கள் முதலியவற்றை வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் கொண்டு வந்து நடத்தும் விற்பனை

மண்டி மொத்தவிற்பனைக்கூடம் மொத்தவிற்பனைநிலையம் கடைவீதி கடைத்தெரு தானியக்கிடங்கு தானியக்களஞ்சியம் தானியமண்டி காய்கறி மண்டி காய்கறி கடை பண்ணியசாலை பேட்டை மார்க்கெட் வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சந்தை
  1. பலவிடத்திருந்து ஓரிடத்தில் கொள்ளல் விற்றற்குக் கூடுமிடம்
  2. கூடும் கடைகள்
  3. கடைவீதி
  4. கூட்டம்
  5. புருவங் களின் நடுவிடம்
  6. வேதம்
  7. வேதம் முதலிய