சுவை
Tamil Wiktionary
சுவை — வினைச்சொல் (Verb)
- நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம்
- சொரசொரப்பு போன்றவை அல்லாமல்
- இனிப்பு
- புளிப்பு
- கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்)
- அறிவியலில் அடிப்படையாக நாவில் ஐந்து சுவைகளையே சுவைகள் என ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து சுவைகள் இனிப்பு
- புளிப்பு
- கசப்பு
- உவர்ப்பு
- உமாமி. (காரம்
- துவர்ப்பு என்பவற்றை சுவைகளாக அறிவியலில் ஏற்கப்படவில்லை)
- நாவில் உணர்வதாக தமிழர்கள் கூறும் ஆறு சுவைகள் இனிப்பு
- புளிப்பு
- கசப்பு
- உவர்ப்பு
- காரம்
- துவர்ப்பு
- உள்ளத்தின் உணர்ச்சிகள்
- நெகிழ்ச்சிகள் பலவும் சுவை எனப்படும். இன்பம்
- துன்பம்
- களிப்பு
- இசையின்பம் என்பன போன்ற அக உணர்வுகள்.
- தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள எட்டுவகை மெய்ப்பாடுகளாக வெளிப்படும் உணர்ச்சிகள் சுவைகள் எனப்படும். அவையாவன நகை
- அழுகை
- இளிவரல்
- மருட்கை
- அச்சம்
- பெருமிதம்
- வெகுளி
- உவகை.
- நாவால் உணரும் உணர்ச்சியைத் துய்(ப்பது).
- உள்ளத்தில் உணரும் உணர்ச்சிகளைத் துய்(ப்பது). (எ.கா உங்கள் கிண்டலைச் சுவைத்தேன்)
- வாயில் இட்டு சவை
- மெல்லு.
[object Object]
சுவைத்தல் சுவைச்சாறு அறுசுவை சொற்சுவை பொருட்சுவை இன்சுவை
Winslow (1862)
சுவை (cuvai) — noun
- Taste, flavor, உருசி. (சது.)
- Deliciousness, sweetness, agreeableness, இனிமை
- That which is gratifying to the senses or mind, இன்பம். (c.)
- One of the five senses, ஐம்புலத்தொன்று
- A figure of rhetoric. (See இரசாலங்காரம்.)
- The fourteenth lunar asterism, சித்திரை நாள். அவனாவுக்குச் சுவையற்றுப்போய்விட்டது. His tongue has lost the sense of taste
- சுவைகாட்ட — To give a relish to. 2. To entice, allure, decoy. 3. To be tasteful, relishable, pleasant to the taste.
- சுவைகாண — To have a relish for. 2. To be allured, attracted, decoyed by a bait, &c. 3. To try, examine, taste food, &c.
- சுவைகெடல் — Being insipid. 2. Losing one's charms.
- சுவைகொள்ள — To taste. 2. To enjoy pleasures, இன்பமுற.
- சுவைபார்க்க — To taste. 2. To be nice, particular, dainty in food.
- சுவைப்பட–சுவைபட — To be relishable, to taste well. 2. To get a relish or liking for.
சுவை (cuvai)
- , கிறது, ந்தது, யும், ய, v. a. [vul.] As சுவைக்கிறது.
சுவை (cuvai)
- , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. [vul.] To have flavor, to be relishable, alluring, இன்பந்தர.
Fabricius (1972)
சுவை — noun
- taste, flavour, relish, உருசி
- deliciousness, இன்பம்
- the subtle matter from which water is said to have evolved
- poetic sentiments
- சுவைகொள்ள–பட — to taste well.
- சுவைபார்க்க — to taste; 2. to be nice, particular, dainty in food.
- சுவையணி — a figure of speech which consists in describing the 8 sentiments.
- அறுசுவை — the six flavours, கைப்பு, bitterness; இனிப்பு, sweetness; புளிப்பு, sourness; உவர்ப்பு, saltness; துவர்ப்பு, astringency; கார்ப்பு, pungency.
- உட்சுவை — the flavour of a fruit etc.
சுவை — v. i.
- v. i. be relishable, have flavour, சுவைகொள்; v. t. taste, relish, சுவைபார்
- eat, chew, suck, உண்ணு; kiss, முத்தமிடு
- enjoy, அனுபவி
- சுவைத்துப்போட — to spit out after tasting a thing.
Tamil Moli Akarathi (1928)
சுவை (cuvai)
- இரசம், இனிமை, உருசி, ஓரலங் காரம், சித்திரைநாள், சுவையென் னேவல்
சுவை (cuvai)
- 9 - கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
சுவை (cuvai)
- இனிமை, சுவையென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுவை² (cuvai) — noun
- Taste, flavour; இரசம். அறுசுவை யுண்டி (நாலடி, 1)
- Deliciousness, sweetness; உருசி. (பிங்.)
- That which is pleasing or gratifying to the senses; இனிமையானது. (சூடா.)
- The sense of taste, one of ai-m-pulaṉ; ஐம் புலன்களுள் நாவின் உணர்வு. சுவையொளி யூறோசை நாற்றம் (குறள், 27)
- The subtle matter from which water is said to have evolved; அப்பு என்ற பூதந்தோன்றுதற்குக் காரணமான இரசதன்மாத்திரை
- Poetic sentiment; கவிதையின் இரசம். (இலக். வி. 665)
- The 14th nakṣatra. See சித்திரை. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சுவை
- ஐம்புலன்களுள் நாவின் உணர்வு, உருசி
- இன்பம்
- இரசம்
- இனிமை
- இரசம்
- சித்திரைநாள்