செறிவு

Tamil Wiktionary

செறிவு
  1. அடர்ந்து
  2. நிறைந்து
  3. செழித்து
  4. அடர்த்தியாக
  5. அடர்வு

Tamil Moli Akarathi (1928)

செறிவு (ceṟivu)
  1. குணவலங்காரம் பத்தினொன் று
  2. அது நெகிழையின்றிவரச்செய் யுட்டொடுப்பது, நிறைவு, நெருக்கம், மிகுதி
செறிவு (ceṟivu)
  1. துறுதல், உறுப்பு, பிறப்பு, தை தல், மிடைதல், வெறிதல், துற்று, ஓதி, செற்று, வெறுப்பு, கஞறல், அடர்தல், நெருங்குதல், திணுங்கு தல்
செறிவு (ceṟivu)
  1. நெருக்கம், மிகுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செறிவு (ceṟivu) — noun
  1. < செறி¹-
  2. Thickness, denseness, closeness; நெருக்கம். செறிவுடை மும் மதில் (திருவாச. 9, 5)
  3. Abundance, fulness; மிகுதி. அரும் புலத்தின் செறிவு மீதே (கம்பரா. உருக்காட்டு. 111)
  4. Union, combination; கூட்டம். இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு (குறள், 684)
  5. Relationship; friendship; உறவு. செறி வெனப்படுவது கூறியது மறாமை (கலித். 133)
  6. Diffusion, permeation, expansion; கலப்பு. (W.)
  7. Kernel, as attached to the shell of a nut; உள்ளீடு நுங்கினது இனியசெறிவை அயில (புறநா. 225, உரை)
  8. Self-restraint, modesty; தன்னடக் கம். முதுவருள் முந்துகிளவாச் செறிவு (குறள், 715)
  9. Conformity to rules, as of propriety; எல்லை கடவாநிலைமை. (திருக்கோ. 179, உரை.)
  10. (Rhet.) Compactness, terseness, as a merit of poetic composition; நெகிழிசையின்மையாகிய செய்யுட் குணம். (தண்டி. 15.)

IndoWordNet

செறிவு — noun
  1. நெருங்கியப் பழக்கம்
செறிவு — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை

நெருக்கம் அடர்த்தி நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை கவனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செறிவு
  1. நெருக்கம்
  2. மிகுதி
  3. கூட்டம்
  4. உறவு
  5. பொந்து
  6. கலப்பு
  7. உள்ளீடு
  8. தன்னடக்கம்
  9. எல்லைகடவா நிலைமை
  10. நெகிழிசையின்மை யாயெ செய்யுட்குணம்