முதலீடு
Investment
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முதலீடு (mutal-īṭu) — noun
- +
- Placing first; முதலிலிடுகை
- That which is placed first; முதலிலிட்ட பொருள்
- The first instalment; முதற் செலுத்துந் தொகை
- The first crop of the year; ஆண்டின் முதலறுவடை. Loc
- Capital invested in trade; வாணிகமுதல். (சிலப். 9, 74, அரும்.)
- Repayment of principal amount of a loan; அசல்கடன் தொகைக்குப் பணஞ் செலுத் துகை. கொடுப்பதை முதலீடாக வைத்துக்கொள்ளவும்
IndoWordNet
முதலீடு — noun
- வியாபாரம், வருமானம் முதலிய நோக்கத்திற்காக முதலீடு செய்யும் செயல்
முதலீடு — noun
- லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில், வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையிலும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்.
முதலீடு — noun
- வியாபாரம் முதலியவற்றில் போடப்படும் முன்பணம்
வேலை பணி ஜோலி மூலதனம் சொத்து நிச்சயிக்கப்பட்ட முதல் செலவு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முதலீடு
- முதலில் இடுகை] முதலில் இட்ட பொருள்
- ஆண்டின் முதல் அறுவடை
- வாணிக முதல்
- முதலிற் செலுத்துந் தொகை/ அசல்கடன் தொகைக்குப் பணம் செலுத்துகை