சோறு

சமைத்த உண்ண உள்ள அரிசி. cooked, boiled rice சோறு - சொல்-நெல். சொல்லுள் (நெல்லுள்) இருப்பது சோறு.(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)

cooked rice, boiled rice food pith, the spongy substance in palms and other plants

Tamil Wiktionary

சோறு — பெயர்ச்சொல் (Noun)
  1. சமைத்த உண்ண உள்ள அரிசி.

[object Object]

சோறா றாக்கு cook சோற்றுக் கற்றாழை சோளச்சோறு கம்மஞ்சோறு தென்னஞ்சோறு காய்ச்சோறு தக்காளிச் சோறு சோற்று ராமன் சோத்து ராமன் சாப்பாட்டு ராமன் சேறு சாறு சாதம்

Winslow (1862)

சோறு (cōṟu) — noun
  1. Boiled rice, சாதம்
  2. Apex of the wild pine-apple resembling boiled rice; also a white spongy substance found in the palmyra, wild alœ &c, கற்றாழை முதலியவற்றின்சோறு. (c.)
  3. The second lunar asterism. See பாணி. சோறுங்கூறையும்கொடுக்க. To give food and raiment. சோற்றாலெடுத்தசுவர். A wall of rice, food, &c., i. e. the body. வயிற்றுச்சோற்றுக்குவேலைசெய்ய. To serve for daily bread. (Low.) இன்றைக்குச்சோற்றுக்கில்லை. Nothing to eat. சோற்றிறக்கமில்லை. The rice will not go down; i. e. he cannot eat
  • சோறாக்க–சோறுசமைக்க — to boil rice.
  • சோறிட — To set rice before one. 2. To board, feed.
  • சோறுகொடுப்பிக்க — To cause a bride to present boiled rice to the bridegroom, as an essential part of the marriage ceremony among some castes.
  • சோறுகொல்லி — A glutton, பெருந்தீனிக்காரன். 2. Green vitriol, அன்ன பேதி.
  • சோறுபடைக்க–சோறுபோட — To set rice on plates, leaves, &c., for eating. (c.)
  • சோறுபொங்க — To cook rice. 2. To boil over, bubble up.

Fabricius (1972)

சோறு — noun
  1. boiled rice, சாதம்
  2. the spongy substance or pith of trees, சோற்றி
  3. the 2nd lunar asterism, பரணி
  • அவனுக்குச் சோற்றிரக்கமில்லை — rice will not go down he cannot eat.
  • சோறாக்க–சமைக்க — to boil rice.
  • சோறிட — to set rice before one; 2. to board, feed.
  • சோறு கொல்லி–அன்னபேதி — a glutton; 2. green vitriol, .
  • சோறுபோட–படைக்க — to serve up rice at meals.
  • சோற்றுக் கடன் — obligation or service in return for food given.

Tamil Moli Akarathi (1928)

சோறு (cōṟu)
  1. அசனம், அடிசில், அமலை, அமு து, அயினி, அவி, அழுப்பு, அன்ன ம், உணா, உண்டி, ஊண், ஓதனம், கவளம், கூழ், சதி, சுரு, சாதம், சொ ன்றி, துப்பு, தொடுபதம், தோரி, நி மிர்தல், பதம், பருக்கை, பலி, பாத் து, பாளிதம், பிசி, பிண்டம், புகர் வு, புழுக்கல், புளகம், புற்கை, புன் கம், பொம்மல், பொருகு, போசன ம், போனகம், மடை, மிசை, மித வை, மூரல், வல்சி
  2. அன்றியும் கட் டுச்சோறு ஆற்றுணா, தோட்கோப்பு, பரதேயம், பொதிசோறு
சோறு (cōṟu)
  1. சாதம், பரணிநாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சோறு¹ (cōṟu) — noun
  1. Boiled rice; அன்னம். ஏற்றுக வுலையே வாக்குக சோறே (புறநா. 172)
  2. Pith in palms and other plants, as soft and white like boiled rice; பனைமுதலியவற் றின் உள்ளீடு
  3. Filament, as of the flower of the screw-pine; தாழைமடல் முதலியவற்றின் உள்ளீடு. சோறவிழ்ப்பன மடற்கைதை (பெரியபு. திருக்குறிப். 36)
  4. சோறு amṛta mōkṣa. Final bliss, beatitude; முத்தி. பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் (திருவாச. 15, 7)
சோறு² (cōṟu) — noun
  1. The second nakṣatra; பரணிநாள். சதயமுதற் சோறளவும் வஞ்சிக்கும் (இலக். வி. 881).
சோறு (cōṟu) — noun
  1. Paste used in drums; மிருதங்கத்தின் நடுப்பாகத்திற் பூசுங் கலவைச்சாந்து. (கலைமகள், xii, 401.)

IndoWordNet

சோறு — noun
  1. உயிர் வாழ்வதற்கு ஏற்ற சக்தியை பெறும் வகையில் மனிதர்களால் உண்ணப்படுவது.
சோறு — noun
  1. வேகவைக்கப்பட்ட அரிசி.
சோறு — noun
  1. மனிதர்கள், விலங்குகள் போன்றவை உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது.

சாப்பாடு சாதம் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் தோசை கவளம் கிச்சடி காய்ச்சோறு பழைய உணவு குற்றைவான உணவு ஊறவைக்கும் பொருட்கள் யாகத்திற்கு முதல் நாள் செய்யும் சிறந்த உணவு பத்தியசாப்பாடு புலாவ் உணவு நீர் ஆகாரம் நீராகாரம் கீரைசாதம் மேத்தி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சோறு
  1. அன்னம்
  2. மிருதங்கத்தின் நடுவில் பூசும் கலவைச்சாந்து
  3. கற்றாழை முதலியவற்றின் சோறு
  4. பனை முதலியவற்றின் உள்ளீடு
  5. முத்தி
  6. பரணிநாள்